அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘பாலன் தி பாய்’ 

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தயாரிப்பு : கேவிஎன் புரொடக்சன்ஸ் வெங்கட் கே.நாராயணா & தேஸ்பியன் பிலிம்ஸ் ஷைலஜா தேசாய் பென். தமிழ்நாடு ரிலீஸ் : ஏஜிஎஸ். எண்டெர்டெய்ன்மெண்ட்.  டைர்கடர் : சிதம்பரம், கதை : ஜித்து மாதவன், ஆர்டிஸ்ட் : ஃபர்ஸானா பலத்திங்கல், ஆதிசேஷன்,சினான், ஜீன் பால் லால், கிரிஷ் ஏ.டி. ஒளிப்பதிவு : ஷைஜு காலித், இசை : சுஷின் ஷ்யாம், எடிட்டிங் : விவேக் ஹர்ஷன், பி.ஆர்.ஓ : ஸ்ரீவெங்கடேஷ்.

கண்ணூர் பெண்கள் சிறையில் கைதியாக இருக்கிறார் ஃபர்ஸானா. அங்கேயே  பிறந்து வளர்ந்த தனது ஐந்து வயது மகனுடன் ரிலீஸாகிறார். அதன் பின்  டீக்கடையில் பாத்திரம் கழுவும் வேலை, கட்டிட வேலை, வீட்டு வேலை என பல வேலைகளைச் செய்கிறார். இந்து, மரியா, ஷெர்லின் என போகும் இடங்களிலெல்லாம் ஒரு பெயரை வைத்துக் கொள்கிறார். அதே போல் தனது மகனுக்கும் பெயர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

இந்த ஃப்ர்ஸானா ஏன் ஜெயிலுக்குப் போனார்? மகனுடன் ஜெயிலிருந்து ரிலீசானதும் பெயர்களை ஏன் மாற்றிக் கொண்டே இருக்கிறார்? இதான் இந்த ‘பாலன் -தி பாய்’.

சுவரோவியத்தின் மூலம் கதையை ஆரம்பிக்கிறார் டைரக்டர் சிதம்பரம். அந்த ஓவியத்தில் தனது கணவனை யானை மிதித்துக் கொன்ற பின் அந்த ஊரில் அனாதையாகிட்ட பிறகு வேறு ஊருக்கு குடிபெயர்ந்ததாக வாய்ஸ் ஓவரில் சொல்லி முடித்ததும்… கட் பண்ணினால் கண்ணூர் பெண்கள் ஜெயில். ஃபர்ஸ்னாவும் சரி, அந்த சிறுவன் பாலனாக நடித்திருக்கும் ஆதிசேஷனும் நடிப்பில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். “நாம நமக்குள்ள தான் பேசிக்கிரணும், வெளியாட்கள்கிட்ட பேசக்கூடாது, குறிப்பா போலீஸ்காரன்கிட்ட பேசவே கூடாது” என பாலனுக்கு  ஃபர்ஸானா கூறிக்கொண்டே இருப்பது தான் கதைக்கு வலு சேர்க்கிறது. அதே போல் இவர் ஏன் ஜெயிலுக்குப் போனார் என்பதற்கு ஃப்ளாஷ்பேக் வைக்காமலேயே ஸ்கிரிப்ட்டில் ஒருவித டெம்போவை ஏற்றிக் கொண்டே போவதில் தான் ஜித்து மாதவன் ஜொலிக்கிறார்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

டைட்டில் கார்டில் ஆதிசேஷன் பெயரைத் தான் முதலில் போட்டார்கள். அடேங்கப்பா பெரிய ஹீரோவா இருப்பார் போலயேன்னு நினைத்தோம். அந்த ஐந்து வயது சிறுவன் பாலனாக ஆதிசேஷனின் நடிப்பைப் பார்த்ததும் கரெக்டாத்தான்யா கிரெடிட் கொடுத்திருக்காய்ங்கனு பிரமித்துப் போனோம். அடேங்கப்பா…. பொடியன் சகலவிதமான பெர்ஃபாமென்ஸிலும் பின்னிட்டான் போங்க. படத்துல அவனுக்கு மொத்தமே ஒன்றரை வரிகளில் தான் வசனம். முகபாவனைகளில் அபாரம்.ஷ

கான்ஸ்டபிளாக இருந்து இன்ஸ்பெக்டராக உயரும் பவித்ரன் [ ஜீன் பால் லால்] நல்ல செலக்‌ஷன். ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவும் சுஷின் ஷியாமின் பின்னணி இசையும் பாலன் மீது கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன.

இடைவேளை வரை தெளிந்த நீரோடை போல சென்று கொண்டிருந்த கதையும் திரைக்கதையும் இடைவேளைக்குப் பிறகு சிறுவன் வளர்ந்த பிறகு குழம்பிய குட்டையாகி, அதில் டொவினோ தாமஸையும் போட்டு  நம்மை ரொம்பவே சோதித்துவிட்டது.

இருந்தாலும் ’மஞ்சுமல் பாய்ஸ்’ டைரக்டர் சிதம்பரத்தின் இந்த ‘பாலன் தி பாய்’ -குட்பாய்.

அங்குசம் பார்வையில் ‘பாலன் தி பாய்’  48/100

–     ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.