திருச்சியின் புதிய கலாச்சாரமும் – முன்னாள் அமைச்சரின் எச்சரிக்கையும்!

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

பிளக்ஸ், பேனர், போஸ்டர் போன்றவை இன்றைய விளம்பர உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஒவ்வொருவருமே ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்கு பிளக்ஸ், பேனர், போஸ்டர் போன்ற விளம்பரங்கள் வழியாக விளம்பரப்படுத்த தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் பேனர் கலாச்சாரத்தின் மீது தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வந்தன. அதே நேரத்தில் சென்னையில் அதிமுக நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பேனர் ஒரு பெண் பலியாக காரணமாக அமைந்தது. அந்த சம்பவம் தமிழ்நாடு அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, இதையடுத்து நீதிமன்றம் பேனர்களை பொது இடங்களில் வைக்க தடை விதித்தது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பேனர் கலாச்சாரம் குறைந்தது, தற்போது பொறுப்பேற்று இருக்க கூடிய முதல்வர் முக ஸ்டாலின் கூட ஆட்சி பொறுப்பேற்ற உடன் திமுகவினர் எவ்வித பேனர்களும் வைக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.
இவை ஒருபுறமிருக்க திருச்சியில் இரண்டு முக்கிய அமைச்சர்களின் விசுவாசிகளும் போட்டி போட்டுக்கொண்டு திருச்சி முழுக்க பேனர் அடித்து அதை சுவற்றில் ஒட்டி புது வகை கலாச்சாரத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

திருச்சியின் சுவர்கள் முழுக்க இரண்டு அமைச்சர்களின் கோஷ்டியினரும் பெருமளவில் விளம்பரப்படுத்த தொடங்கினர். இதற்காக பொது சுவற்றிலோ அல்லது தனியார் சுவற்றிலோ ஆணி அடித்து பிளக்ஸ் பேனரை சுவற்றில் பதிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருச்சி அதிமுகவின் மாநகர் மாவட்டம், தெற்கு மாவட்டம், வடக்கு மாவட்டம் என்ற மூன்று மாவட்டங்களின் சார்பாக ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள வழிவிடு முருகன் கோவில் பகுதியில் தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

3
அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியபோது

அந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியபோது, திமுக அரசு பதவி ஏற்றதில் இருந்து எந்த நல்ல காரியமும் செய்யவில்லை. பேனர் கலாச்சாரம் ஒழிக்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் சூளுரைத்தார். ஆனால் திருச்சி முழுக்க பேனர் கலாச்சாரமாக உள்ளது. பேனரை அடித்து சுவரில் ஒட்டி வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் திமுகவின் பேனர்களில் அதிமுகவின் போஸ்டர்களை ஒட்டுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

4

திருச்சி திமுகவினர் பேனர் இந்த அடித்து சுவற்றில் ஒட்டும் புது வகையான கலாச்சாரத்தை ஏற்படுத்தி இருக்க, அதிமுகவினருக்கு போஸ்டர் ஒட்ட இடம் கிடைக்காததால் திமுக பேனர்களில் அதிமுக போஸ்டரை ஒட்டுவோம் என்று அமைச்சர் கூறியிருக்கிறார். என்று கூறியவாரு நடந்து சென்றார் திருச்சிவாசி.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.