என்.ஐ.டி திருச்சி மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரி திருச்சி இடையே  புரிந்துணர்வு ஒப்பந்தம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

என்.ஐ.டி திருச்சி மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரி, திருச்சி இடையே 9.02.2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்.ஐ.டி திருச்சி ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைத் துறை முதல்வர் பேராசிரியர் எஸ்.முத்துக்குமரன் மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரி, திருச்சி மேலாண்மைப் படிப்புகள் பள்ளியின் முதல்வர் முனைவர் ஜி.ஜான் ஆகியோர் முன்னிலையில் என்.ஐ.டி திருச்சி இயக்குநர் பேராசிரியர் ஜி.அகிலா மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரி, திருச்சியின் முதல்வர் அருட்தந்தை ஆரோக்கியசாமி சேவியர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அங்குசம் இதழ்..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தொடக்கத்தில் வேதியியல் துறை, கணினி அறிவியல்/ கணினிப் பயன்பாட்டியல் மற்றும் இயற்பியல் துறை ஆகிய மூன்று துறைகள் சார்ந்த கூட்டுமுயற்சியில் ஈடுபட இதன்மூலம்முடிவுசெய்யப்பட்டுள்ளது.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட்டுத்திட்டப்பணிகள்,  கூட்டுக்கருத்தரங்குகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பயிற்சியளித்தல், கருவிகள் மற்றும் ஆய்வகங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், மாணவர் பரிமாற்றம், பயிற்சிப் பணிகள், போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்துதல், நூலக வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றுக்கு வழிவகை செய்யும். கல்வி மற்றும் ஆராய்ச்சியில் தமக்கெனத் தனி மதிப்பினைக் கொண்டுள்ள என்.ஐ.டி திருச்சி மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரி,திருச்சி இடையே போடப்பட்டுள்ள இப்புரிந்துணர்வு ஒப்பந்தம், இவ்விரு நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.