திமுக ஒரு உண்மையான விசுவாசியை இழந்தது – திருச்சி 47 வது வார்டு !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

 

திமுக ஒரு உண்மையான விசுவாசியை இழந்தது. அய்யா கணேசன் அவர்கள் காலமெல்லாம் திமுகவின் கொள்கைப்பிடிப்பிலேயே வாழ்ந்தவர். ஆயிரம் பிறை கண்டிருப்பார். முன்னாள் மாநகராட்சி கௌன்சிலராக இருந்தாலும் கறைபடியாத கைகளுக்கு உரிமையானவர். உண்மையிலேயே திமுகவிற்கு பேரிழப்புதான். திமுக என்ற ஆலமரத்தில் ஒரு இலை பழுத்து உதிர்ந்துள்ளது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

1990களின் மத்தியில் கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பிற்காக திருச்சியை நோக்கி வந்தபோது, நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கல்லுக்குழியில் வீடு எடுத்து தங்கினோம். அய்யா அவர்கள் உலகநாதபுரம் முக்கிய வீதியில் சைக்கிள் கடை வைத்திருந்தார்.

நமது நண்பர்கள் அனைவருக்கும் சைக்கிள் பராமரிப்பு அவரே. நமது “செட்” அனைவர் மீதும் நல்ல பாசமும் மரியாதையும் வைத்திருந்தார். யாரையும் “தம்பி” என்ற வார்த்தையைத் தவிர வேறு வார்த்தை பயன்படுத்தி அழைக்க மாட்டார். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அனைவரும் திமுக சார்பு சிந்தனை உடையவர்கள், மற்றொன்று நமது நண்பர்கள் அனைவரும் ஏரியாவில் ஒழுக்கமாக இருந்தது.

3

அய்யாவின் சைக்கிள் கடைக்கு அனைத்து நாளிதழ்களும் வாரப்பத்திரிக்கைகளும் வரும். அதைப்படிக்க நமது “செட்” அதிகாலையிலேயே அவரது கடைக்கு ஒரு ரவுண்டு சென்றுவிட்டு பேப்பர் படித்து விட்டுதான் கல்லூரிக்கோ பாலிடெக்னிக்கோ செல்லும். வாரப்பத்திரிக்கைகளை வீட்டிற்கே எடுத்துச்சென்று படித்துவிட்டு திரும்பத்தரும் உரிமையையும் நமது “செட்”டிற்கு தந்திருந்தார். இவரது சைக்கிள் கடை ஒரு திமுக பிரச்சார மேடை என்றால் மிகையாகாது. மாலையிலும் நமது “செட்”டிற்கு பெரும்பாலும் பொழுது போக்கு அய்யாவின் சைக்கிள் கடை அல்லது “செண்பகம் டீ ஸ்டால்”தான்.

அய்யாவின் நினைவாற்றல் அபாரமானது.

4


குறிப்பாக இவர் திமுகவின் வரலாற்றை அவ்வளவு உணர்வுப்பூர்வமாக விவரிப்பார். குறிப்பாக இந்தி திணிப்பிற்கான மொழிப்போர் பற்றிய இவரது அறிவாற்றல் அபாரமானது. திமுக கொள்கையின் பல நுணுக்கமான விசயங்கயை அழகாக புரிய வைப்பார். இவருடன் உரையாடுவதே சுவராஸ்யமாக இருக்கும். இதற்காகவே நமது “செட்” இவரது கடையிலேயே இருக்கும். திருச்சியில் திமுக மாநாடு என்றாலே திருப்புமுனை என்பது வரலாறு. ஒவ்வொரு மாநாடு, அதன் விளைவுகள் எனஅழகாகச் சொல்லுவார்.

2000ங்களில் படிப்பு முடிந்து “செட்” கலைந்ததும் அய்யாவுடனான தொடர்புகளும் குறைந்தது. தற்போது கண்ணீர் அஞ்சலி போஸ்டரைப் பார்த்து கண்கள் பணிக்கின்றன. கண்டிப்பாக அய்யாவின் ஆன்மா சுவர்க்கத்தில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் என நம்புகிறேன்.

முக்கியக் குறிப்பு.
அய்யா அவர்கள் திருச்சி மாநகராட்சி 34 வது வார்டின் திமுக கௌன்சிலராக இருந்தார். இவரைப்போன்ற உண்மையான விசுவாசிகளை பாழாய்ப்போன ஜாதி அரசியல் மூலம் புறந்தள்ளியதன் விளைவு, இந்த வார்டில் இவருக்குப் பின்னர் திமுக வெற்றி பெறவே இல்லை.

இவருக்குப் பின்னர் இந்த வார்டை சுயேட்சை வேட்பாளர் வெங்கட்ராஜ் கைப்பற்றி சுயேட்சையாகவே 3 தடவை வெற்றி பெற்றார். தற்போது வார்டு மறுவரையறையின் படி 47வது வார்டாக மாறியுள்ளது. இப்போதும் இங்கே திமுக போட்டியிடவில்லை. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த வார்டை அதிகம் எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு தராமல் திமுக மாவட்ட தலைமை கம்யூனிஸ்டிற்கு ஒதுக்கியது. இதனால் அதிருப்தி அடைந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியது.

ஆனால் அதிருப்தி வேட்பாளர் ஒருவர் சுயேட்சையாக போட்டியிட, அவர் அலுவலகம் உள்ள வீட்டில், தேர்தல் பறக்கும் படை சோதனையிட்டு அவருக்கு கடுமையான விளம்பரம் தேடித்தர, தற்போதும் திமுக கூட்டணியான கம்யூனிஸ்டின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது!

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.