ஒரு முடிவே இல்லையா? மக்கள் வரிப்பணம்தானே? சமமாய் நடத்தினால் என்ன?
ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் புத்தகத் திருவிழாக்கள் யார் வீட்டுப் பணத்தில் நடைபெறுகிறது? அனைத்து 38 மாவட்டப் புத்தகத் திருவிழாக்களிலும் திரும்பத் திரும்ப ஒரு சிலரே அழைக்கப் படுகிறார்கள். இவர்களால்தான் கூட்டம் வருகிறது என்றால் கூட்டத்திற்கு வந்தவர்களெல்லாம் புத்தகங்களை வாங்கி விடுவதில்லை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இது தவிர இவர்களையெல்லாம் கண்டிப்பாக அழைக்க வேண்டும் என்று மேலிடத்திலிருந்து ஒரு பட்டியல் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்து விடுகிறது. மேலும் இவரை கண்டிப்பாக நிச்சயமாக முக்கியமாக அழைக்க வேண்டும் என்று மேலிடத்திலிருந்து தொலைபேசி அழைப்புவேறு.

மொத்தம் இவர்களே நிரம்பிவிட்டு அந்தந்த மாவட்ட எழுத்தாளர்களை அழைப்பதே குறைவு. கடைசி இருக்கைகளில் அமர்ந்து வேடிக்கை பார்த்துவிட்டுப் போவதுதான் உள்ளூர் எழுத்தாளர்கள் நிலை. அந்தந்த மாவட்ட வாசகர்களுக்கு, மக்களுக்கு உள்ளூர் எழுத்தாளர்களைப் பற்றியோ அவர்கள் புத்தகங்கள் பற்றியோ எதுவுமே அறியாமல் இருப்பதற்கும் இதுவும் ஒரு காரணம்.
இதையெல்லாம் முறைப்படுத்த ஒரு முடிவே இல்லையா? மக்கள் வரிப்பணம்தானே? சமமாய் நடத்தினால் என்ன?
— சுகிர்த ராணி.