நீலனின் பொங்கு மாங்கடல் – நூல் அறிமுகம்

நூல் அறிமுகம் - 15

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

நூல்: நீலனின் பொங்கு மாங்கடல்

( சிறார் நாவல்)

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

நூலாசிரியர் : இரா. சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்,

பதிப்பகம்: லாலிபாப் சிறுவர் உலகம்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தொடர்புக்கு : 98412 36965

குற்றாலம் என்றாலே நமக்கெல்லாம் மனதிற்குள் முதலில் தோன்றுவது  இயற்கையில் எழில் கொஞ்சும் அருவிகளும், குரங்குகளும்தான். குற்றாலம் செல்லும்போதெல்லாம் நாம் அங்கு குளித்துவிட்டு உணவுருந்திவிட்டு, மீதி உணவுகளை பசியோடு இருக்கும் குரங்குகளுக்கு கொடுத்து விடுவோம் என்ற எண்ணங்களில் தான் இதுவரை  பயணப்பட்டு இருக்கிறோம்.

ஆனால்,  நீலனின் பொங்குமாங்கடல் நூலினைப் படித்தப் பின்னர்,  குற்றாலம் செல்லும் போது குற்றாலம் குறித்த பார்வையும்,  குரங்குகள் குறித்த எண்ணமும் முற்றிலும் மாறுபடும் என்பது உறுதி.

மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுலாத்தலமாக இருக்கும் குற்றாலப் பகுதியை தன்னுடைய கதைக்களமாக வைத்து எழுதப்பட்டுள்ள இந்நூலில்,  இயற்கையை ரசிக்க சுற்றுலா தளங்களுக்குச் செல்வது மகிழ்வான ஒன்றுதான். அங்கு சென்று இயற்கையைக் கண்டு களிப்பதும், அனுபவிப்பதும் மட்டுமே நம்முடைய எல்லை. அதைவிடுத்து அங்குள்ள விலங்குகளுக்கு உணவு கொடுப்பதும், நாம் கொண்டு செல்கின்ற நெகிழி புட்டிகளையும், பைகளையும் குப்பைத்தொட்டிப் போல் காடுகளில் வீசி வருவது எவ்வளவு மோசமான செயல் என்பதை இந்நூல் உணர்த்தும்.

இயற்கையை அதன் இயல்பிலேயே இயற்கையாகவே இருக்க விட்டாலே போதும் என்ற ஆழமானக் கருத்தினை நீலன் குரங்கின் வழி கதையில் கூறியுள்ளார் நூலாசிரியர். நீலனின் பொங்குமாங்கடல் சுற்றுச்சூழல் குறித்த மாபெரும் விழிப்புணர்வை சிறுவர்களின் உலகில்  நிச்சயம் ஏற்படுத்தும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.