அங்குசம் பார்வையில் ‘ பூமர் அங்கிள் !
காமெடிங்கிற பேர்ல இந்தப் படத்தோட டைரக்டர் நம்மை சோதிச்ச சோதனை இருக்கே… சோதனை…
அங்குசம் பார்வையில் ‘பூமர் அங்கிள்’ !
தயாரிப்பு: ‘அனகா மீடியா’. வெளியீடு: ஏ.வி.எஸ்.எண்டெர்டெய்ன்மெண்ட் எஸ்.எஸ்.பிரபு. டைரக்ஷன்: ஸ்வதேஷ் எம்.எஸ். கதை: தில்லை. நடிகர்—நடிகைகள்: யோகிபாபு, ஓவியா, எம்.எஸ்.பாஸ்கர், சேஷு, ரோபோ சங்கர், தங்கதுரை, சோனா, மதன்பாப். ஒளிப்பதிவு: சுபாஷ் தண்டபாணி, இசை: சாந்தன் & தர்மபிரகாஷ், ஆர்ட் டைரக்டர்; பி.ஏ.ஆனந்த், காஸ்ட்யூம் டிசைனர்: ரெபேக்கா மரியா. பி.ஆர்.ஓ. ஏ.ஜான்
“அந்த பங்களாவுக்குள்ள என்ன இருக்கு?” சேஷுவிடம் சோனா கேட்கிறார். இதான் முதல் சீன். அப்படின்னா இது பேய் & திகில் படமா? இல்ல. யோகிபாபு, ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தங்கதுரை, சேஷு இவர்களெல்லாம் இருப்பதால இது காமெடிப் படமா? இல்ல. ஓவியாவும் சோனாவும் இருப்பதால இது கிளுகிளு படமா? இல்ல. வெள்ளைக்காரப் பொண்ணு இருப்பதால சயின்ஸ் ஃபிக்ஷன் படமா? அதுவும் இல்ல.
அப்புறம் என்னமாதிரிப் படம்யா? சொல்லித் தொலையய்யா என டென்ஷனாகாதீகப்பு. என்ன மாதிரிப் படம்னு நமக்குத் தெரிஞ்சிருந்தா ஆரம்பத்துலேயே சொல்லிருக்கமாட்டமா? நாங்க என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றோம். காமெடிங்கிற பேர்ல இந்தப் படத்தோட டைரக்டர் நம்மை சோதிச்ச சோதனை இருக்கே… சோதனை… அதை எப்படிச் சொல்றது, எழுதுறதுன்னே தெரியலங்க.
கேப்விட்டு கேப்விட்டு யோகிபாபுவிடம் ஏழெட்டு நாட்கள் கால்ஷீட் வாங்கி, அப்புறம் ஓவியாவிடம் மூன்று நாட்கள் கால்ஷீட் வாங்கி, சோனாவிடம் ஒரே ஒரு நாள் கால்ஷீட் வாங்கி, மூன்று பேரின் கால்ஷீட்டையும் மொத்தமா போட்டு மிக்ஸில அரைச்சு அரைவேக்காட்டுத்தனமா ஒரு படம் எடுத்தா அதுக்குப் பேரு ‘பூமர் அங்கிள்’.
“அடப்பாவிகளா.. இந்த லட்சணத்துல ‘பூமர் அங்கிள் பார்ட்—2’ வேறயா?” சத்தியமா.. இதை நாம சொல்லலீங்க. க்ளைமாக்ஸ்ல சோனா டயலாக் மூலமா டைரக்டரே சொன்னது தானுங்க. இத்தோட முடிச்சுக்கிறேன். வணக்கம்.
மதுரை மாறன்