கல்லூரியின் விளம்பரத் தூதர் ஆனார் ஹீரோயின் ஸ்ரீலீலா!
சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியின் விளம்பரத் தூதராக பிரபல ஹீரோயின் ஸ்ரீலீலா நியமிக்கப்பட்டதையடுத்து அக்கல்லூரி மாணவ-மாணவிகளுடன் ஜாலியாக கலந்துரையாடினார். அவர்களின் திறமைகளைப் பாராட்டியதுடன், சர்வதேசத் தரத்துடன் செயல்படும் வகுப்பறைகள், உண்மையான விமானநிலையம் போல செயல்படும் பயிற்சி வகுப்புகள், பகுதி நேர வேலை வாய்ப்பு, அதனால் மாணவர்களின் பொருளாதார மேம்பாடு இதையெல்லாம் கேட்டு மிகவும் மகிழ்ச்சியானார் ஸ்ரீலீலா.
அன்னையர் தினத்தன்று இந்த நிகழ்ச்சி நடந்ததால் தனது தாயார் குறித்த சம்பவங்களை உணர்வுப்பூர்வமாக பகிர்ந்து கொண்டார். மாணவ-மாணவிகளின் பல கேள்விகளுக்கு சிரித்த முகத்துடன் பதில் சொல்லி அவர்களை அசர வைத்தார் ஸ்ரீலீலா.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு 28 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகையை வழங்கினார் சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் பூமிநாதன்.
— ஆண்டவர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.