‘கேட் 2020’ தேர்வு அறிவிப்பு.

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

இந்திய அறிவியல் கழகம் மற்றும் சென்னை, மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், காரக்பூர், ரூர்கீ ஆகிய 7 இந்திய தொழில் நுட்பக் கழகங்களும் இணைந்து பொறியியல் பட்டதாரி திறனறி தேர்வு எனப்படும் ‘கேட்’ தேர்வை தேசிய அளவில் நடத்தி வருகின்றன.

ஐஐஎஸ்சி மற்றும் ஐஐடிக்கள் போன்ற தொழிற் நுட்பக் கல்லூரிகளில் எம்டெக், எம்இ மற்றும் பிஹெச்டி போன்ற மேற்படிப்புகளில் சேர விரும்புபவர்கள் கேட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். அவர்களுக்கு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை கல்வி நிதி உதவிகளும் அளித்து வருகிறது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மேலும், பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் கட்டிடக்கலை உள்ளிட்ட பல்வேறு அறிவியல் துறைகளில் முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளவோ அல்லது ஆய்வுப் படிப்பில் சேரவோ இத்தேர்வை எழுதலாம்.

2020ம் ஆண்டுக்கான கேட் தேர்வு 25 பாடப் பிரிவுகளில் நடத்தப்படும். கணினி மூலமே தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

3

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்வுக்கான தேதிகள் மற்றும் விண்ணப்ப கட்டண விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி தொடங்கும் நாள்: செப்டம்பர் 3, 2019

4

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 24, 2019

அபராதத்துடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : அக்டோபர் 1, 2019

தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட நகரத்தை மாற்றும்படி கோர கடைசி நாள்: நவம்பர் 15, 2019

தேர்வு எழுதுவதற்கான அட்மிட் கார்டு வெளியாகும் நாள்: ஜனவரி 3, 2020

கணினி வழித் தேர்வு நடைபெறும் நாட்கள்: 2020ம் ஆண்டு பிப்ரவரி 1 & 2 மற்றும் பிப்ரவரி 8 & 9 தேதிகள்

தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் – மார்ச் 16, 2020

கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் தேர்வு முடிவுகள் வெளியான நாளிலிருந்து மூன்று ஆண்டு களுக்கு மட்டுமே பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள்.

பி.இ., பி.டெக்., பி. ஆர்க்., பி.எஸ்சி. (4 ஆண்டுகள் ஆகிய இளநிலை பட்டப்படிப்புகளை முடித்த வர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அறிவியல், கணிதம், புள்ளியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் போன்ற முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்கள் எஸ்.சி/எஸ்.டி, பிரிவினராகவோ மாற்றுத்திறனாளி யாகவோ பெண்களாகவோ இருந்தால் அவர்களுக்கான கட்டணமாக செப்டம்பர் 24, 2019 வரை ரூ.750 வசூலிக்கப்படும்.

அதற்குப் பின் அக்டோபர் 1, 2019 வரை விண்ணப்பித்தால், ரூ.1,250 கட்டணம் வசூலிக்கப்படும்.

மேற்கண்ட பிரிவில் வராத பிற இந்தியர்களுக்கு செப்டம்பர் 24, 2019 வரை விண்ணப்பித்தால் ரூ.1500 கட்டணம் பெறப்படும்.

அதற்குப் பின் அக்டோபர் 1, 2019 வரை விண்ணப்பித்தால், ரூ.2,000 கட்டணம் பெறப்படும்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் அடிஸ் அபாபா (எத்தியோப்பியா), கொழுப்பு (இலங்கை), டாக்கா (வங்கதேசம்) மற்றும் காத்மண்டு (நேபாளம்) வைச் சேர்ந்தவர்கள் என்றால் அவர்கள் செப்டம்பர் 24, 2019 வரை 50 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். அதற்குப் பின் அக்டோபர் 1, 2019 வரை விண்ணப்பித்தால், 70 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் துபாய் அல்லது சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் என்றால் அவர்கள் செப்டம்பர் 24, 2019 வரை 100 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். அதற்குப் பின் அக்டோபர் 1, 2019 வரை விண்ணப்பித்தால், 120 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.