மாற்றங்கள் மாறாதது !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

1967 தேர்தல் முடிவுகள் ஒரு பெரும்மாற்றத்தை கொடுத்தது. 1947 இல் இருந்து துவங்கி 1952-ல் ஆண்ட பெரும் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் 14 கட்சி கூட்டணிகள் (கொள்கை முரண்பாடுடையவை  ) ஒன்றிணைந்து தோழர் பி ஆர் மூதறிஞர் ராஜாஜி காயிதேமில்லத் போன்ற முக்கிய பெருந்தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டனர். பிரச்சார பலம் பலமாக இருந்தது.

காங்கிரஸின் கூடாரத்தில் பிரச்சார பலம் இல்லை. செஞ்சதை சொல்லவும் தெரியவில்லை. அணைகளும் கல்விகூடங்களும் மதிய உணவுதிட்டமும் இலஞ்ச லாவண்ய மற்ற நிர்வாகமும் இருந்தும், கடைசியில் காங்கிரஸ் கவிழ்ந்தது. ரேஷன் விநியோகம் தமிழகம் எங்கும் ரேஷனில் புழுத்த அரிசி போட்டது முதல் தோல்விக்கு காரணம். காங்கிரஸ் தோற்றது எனினும் பத்து இலட்சத்திற்கும் மேல் ஓட்டுக்களை எதிர் கூட்டணியை விட பெற்றிருந்தது காங்கிரஸ் இயக்கம்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சிக்ககுள்ளாகி குழுக்கள் அமைத்து ஆராய்ந்தது. முடிவு எட்டப்படவில்லை மக்கள் வாக்களிக்கவில்லை, தோற்றோம் என்றது ஒரு குழு. ஆன்மிக பற்று கொண்ட ஒரு குழு வைத்தீஸ்வரன் கோவிலில் ஏடு எடுத்து பார்த்தது. அதில் 60 ஆண்டுகள் வரை வேடதாரி சாம்ராஜ்யம் தான் தொடரும் என்று சொல்லப்பட்டது. 1967 இல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி பீடம் ஏறியது.

கருத்திருமன், K. விநாயகம், அனந்த நாயகி அம்மையார் போன்ற விவரம் அறிந்தோர் சட்டமன்றத்தில் தங்கள் பணியை திறம்பட செய்தார்கள். 1967க்கு பின் 2026 வரை திராவிட இயக்கங்கள் மாறி மாறி ஆட்சி புரிந்தன. அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் போன்றோர் நிர்வகித்தனர். நிர்வாகம் தொடர்ந்தது கல்வி கூடங்கள் இலவசங்கள் பெருகின. மக்கள் மத்தியில் எந்த ஒரு காரியமும் காசு கொடுத்தால் தான் நடக்கும் என்ற ஒரு தாரக மந்திரம் நிலை நிறுத்தப்பட்டது என்பதை யாரும் மறக்கமுடியாது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

political2026ம் ஆண்டு தேர்தல் வந்தது. விஜய் திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சாரம் ஆழமாக பதிந்தது. 18 வயதிற்கு மேற்பட்டோர் முதல் 35 வயதிற்கு உட்பட்டோர் வரை கடந்த கால அரசியல் தெரியாது. திராவிட இயக்கங்கள் எளிதாக எடை போட்டது. இளைஞர் பட்டாளம் மக்களின் ஒருசாரார் மனம் மாறி வாக்களித்து இன்று ஆட்சி கட்டிலில் விஜய் அமர்ந்திருக்கிறார்.

பவரை பறிகொடுத்த பரிதாபத்தில் திராவிட இயக்கங்கள் இருப்பது தெளிவாக தெரிகிறது. தங்களது கட்சியை சீரமைத்தால் மட்டும் போதாது. இடைவெளியான மக்களுக்கு என்ன சொல்ல போகிறீர்கள்? எப்படி அரவணைப்பீர்கள் ?

புதிதாக ஆளுங்கட்சியில் மைனர் பட்டாளங்கள் நிரம்பி இருக்கின்றன. பக்குவம் இல்லை அனுபவம் இல்லை ஆனால், காலம் அவர்களுக்கு கற்றுத் தரும். தேர்தல் முடிவுக்கு கட்டுப்பட்டு திராவிட இயக்கங்கள் உங்கள் தவறை திருத்தி மேன்படுத்த பார்ப்பதே முதல் வேலை.

அண்ணாவை பார்த்து 1967 இல் அன்று விநாயகம் எம்.எல்.ஏ. கேட்டார் உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றது என்று “Your days are Numbered”.  அண்ணா நிதானமாக பதில் சொன்னார். ”எனது பாதடிகள் அளந்தெடுத்து  வைக்கப்படுகின்றன” என்று. முதல்வர் விஜய் புதிய அரசியல் சூழலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?

—  மதுரை P. அருணாச்சலம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.