திருச்சியில் குழந்தைகளுக்கு தொடரும் அவலம்.. கண்டும் காணாத அதிகாரிகள்
திருச்சியில் குழந்தைகளுக்கு தொடரும் அவலம்.. கண்டும் காணாத அதிகாரிகள்…
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இயற்கை மாறா விபத்துக்கள் இல்லாமல் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதளவும் பாதிக்கப்பட்டுள்ளனர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் டெல்டா பகுதியும் மத்திய பகுதியான திருச்சி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் எண்ணிலடங்காத பெண்களும்,
குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றிற்கு ஆளாகி சிதைக்கப்பட்டு உள்ளனர். என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் ஆசன கழிப்பதற்காக சென்றபோது அச்சிறுமியை பகிரங்க முறையில் எரித்துக் கொன்ற சம்பவமும்,
மேலும் மணப்பாறை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தவறான முறையில் நடந்து கொண்டதுடன் மற்றொரு பெண்ணுடன் திருமணம் செய்யும் நபரை கைது செய்ய வேண்டி 17வயது சிறுமி ஒருவர் விஷமருந்தி இறந்தார்.
அதே மணப்பாறை பகுதியில் 15 வயது சிறுவன் ஒருவன் 12 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு அளித்து அவரை அடித்துக் கொன்றதும் மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே மது அருந்திக் கொண்டிருந்த நபரொருவர் அச்சிறுமியை அடித்து கொலை செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொன்றுள்ளனர். இதற்குரிய குற்றவாளிகள் அனைவரும் பிடிக்கப்பட்டு சட்டத்தின்படி
தண்டனையும் வழங்கியது..
ஆனால் இவை அனைத்திலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பான அரசு சார்ந்த துறைகள் இறுதியிலேயே வந்தும் வராததுமாய் காட்சியளித்தனர்..
சமீபத்தில் திருச்சி உறையூர் நால்ரோடு அருகே சுமார் 28 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் இரவு நேரத்தில் சாலையில் தூங்கி இருந்தவரை ஒரு கும்பல் அபத்தமாக பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியுள்ளது இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை தரப்பில் குற்றவாளிகளை இரண்டு நாட்களில் பிடித்து தண்டனையும் வழங்கப்பட்டது ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவும் துறைகள் யாரும் அங்கு கடைசிவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரத்தில் நமக்கு
வந்த ஒரு அழைப்பு.. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் 15 வயதுக்கும் கீழுள்ள சிறுமிகள் சிலர் பிச்சை எடுத்து வருகின்றனர் அவர்களை கண்காணிக்க ஒரு பெண் ஒருவர் தூரத்தில் நின்று கொண்டிருக்கிறார் இவர்கள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர் ஆனால் அரசு சார்ந்த குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உதவி அதிகாரிகள் இதுவரை குழந்தைகளை கண்டும் காணாதவாறு இருந்து வருகின்றனர் இதனால் இக்குழந்தைகளுக்கு பலவகையில் பிரச்சனைகள் வரக்கூடும் கடத்தல் பாலியல் துன்புறுத்தல் போன்றவைகள் ஏற்படலாம் காவல்துறையினர் அவர்களை பார்த்தும் விரட்டி விடுகின்றனர்.
ஆனால் அவர்கள் மறுபடியும் அதே இடங்களில் கூட்டம் கூட்டமாக பச்சிளம் குழந்தை மற்றும் சிறுமிகளுடன் பிச்சை எடுப்பது வருத்தத்துக்குரிய விஷயமாக இருந்து வருகிறது என்றார்.
மேலும் இவர்கள் ரயில்வே நிலைய பாலம் அருகே குடியிருந்து வருகின்றனர் காரணம் கேட்டாள் கொரோனா காலங்களில் வேலை இல்லை என்று தெரிவிக்கின்றனர் ஆனால் இவர்கள் பொய் கூறிக்கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுவது அனைவருக்கும் தெரிந்த உண்மை தான் இதனை மாவட்ட நிர்வாகமோ குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்..
கடந்த வாரத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் மற்றும் மத்திய மண்டல காவல்துறை துணைத் தலைவர் தலைமையில் கேடயம் என்ற செயலி ஒன்று அறிமுகப் படுத்தப்பட்டது இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்முறைகளிலிருந்து அவர்களை மீட்பதற்கான வழிமுறைகள் அடங்கியிருந்தன. ஏற்கனவே இதுபோன்ற பல்வேறு குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பான உதவி எண்கள் பல
இருப்பின் தற்போது காவல்துறை மூலம் கேடயம் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு விழிப்புணர்வும் அளித்து வருகின்றனர், காவல்துறை தனது கடமையினை குற்றம் ஏற்படாமலும் ஏற்பட வழிவகுக்காமலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்துவர இது போன்ற கண்ணுக்கு தெரிந்து குழந்தைகள் பாதிக்கக்கூடிய விஷயங்களை கருத்தில் கொண்டு விரைவில் நடவடிக்கை மேற்கொண்டால் இனி வரும் காலங்களில் திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள் பெண்கள் ஆகியோருக்கு எந்தவித கொடும் சம்பவங்களும் நடைபெறாமல் தவிர்க்கலாம்.
–ஜித்தன்