அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து

சிறார் இலக்கியம் - நூல் அறிமுகம்-4

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து

ஆசிரியர்:- எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா)

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

தேசாந்திரி பதிப்பகம், சென்னை. (+91-44-23644947).

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

விலை ரூ 70/-.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

இந்நூலின் ஆசிரியர் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளியில் படித்த காலத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் மழை நாட்களில், வழியில் ஒதுங்க  இடமின்றி நனைந்து சிரமப்படுவார்களாம். அப்போது தனியார் பள்ளி மாணவர்கள் பேருந்தில் போவதைப் பார்த்து, “நம் பள்ளிக்கும், இது போல் பேருந்து வாங்க வேண்டும்,” என்று தங்களுக்குள் பேசிக் கொள்வார்களாம்.  அந்த ஆசை, கனவு தான் இக்கதையின் மையம் என்று முன்னுரையில் சொல்லியிருக்கிறார் எஸ்.ரா.

கிராமப்புறப் பள்ளியான தணிகை அரசுப்பள்ளியில், இலவசக் கல்வி, இலவச உணவு அளித்தும் அங்கிருந்த விக்டோரியா ஆங்கிலப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கவே பெரும்பாலான பெற்றோர் விரும்புகின்றனர்.  மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கிராமங்களுக்குச் சென்று பிள்ளைகளை அரசுப்பள்ளிக்கு அனுப்புமாறு வேண்டுகோள் விடுக்கின்றார். பள்ளிக்குப் பேருந்து இருந்தால் அனுப்புவதாக அவர்கள் சொல்லவே, அதை வாங்குவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபடுகின்றார்.

இதன் காரணமாகத் தனியார் பள்ளிக்கும், அரசுப்பள்ளிக்கும் மோதல் ஏற்பட்டு, போட்டியாக உருமாறுகின்றது.  இந்த அனுபவங்களை  வேடிக்கையாகவும், விறுவிறுப்பாகவும் இந்தச் சிறார் நாவலில் விவரித்திருக்கின்றார் ஆசிரியர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.