ஜூன் 26–ல் ‘கான்சிட்டி’ ரிலீஸ்!
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான்சிட்டி’ வரும் ஜூன் 26- ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
“ரா ரா ரங்கையா” முதல் சிங்கிள் பாடல் அதைத்தொடர்ந்து “நான் தான் கிங்கு” பாடலும் வெளியானது.
மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தொழில்நுட்பக் குழு
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டிங்: அருள் மோசஸ்
இசை: ஷான் ரோல்டன்
கலை இயக்கம்: ராஜ் கமல்
உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்
ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்
மக்கள் தொடர்பு: யுவராஜ்
— ஜெ.டி.ஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.