அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கருத்தை சொன்னால் கொலை மிரட்டல் ! நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்…?

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைந்து, இறுதிகட்ட வாக்குப்பதிவை எதிர்நோக்கியிருக்கிறது. இந்நிலையில், ” 2026 தேர்தலில் மீண்டும்  சமத்துவ ஆன்மீக ஆட்சி  தொடர வேண்டும் என்பதற்காக, திராவிட முன்னேற்ற கழக கூட்டணியை ஆதரிக்கிறோம்.” என்று அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் சார்பில் அவ்வமைப்பின் மாநில தலைவர் வா.ரங்கநாதன் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அவருக்கு சிலர் கொலைமிரட்டல் விடுத்திருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

“திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியை ஆதரித்து எனது முகநூலில் பதிவிட்டதனால், எனது தொலைபேசி எண்ணிற்கு  Thillai Ramesh என்பர் கால் செய்து அருவெறுப்பாக பேசி ”மாமா பயலே, தே*டியா பயலே, உனக்கு அர்ச்சர் ஆகுற தகுதி இருக்கா, ஹிந்துவா இருந்து இப்படி பேசலாமா,   உன்னை வெட்டிடுவேன், எச்ச பயலே “ என்று பேசி கொலை மிரட்டல் விடுகிறார். அவருடைய தொடர்பு எண் +96565712639 மற்றும் +96556615394 என்ற எண்ணிலிருந்து வாட்சப் மூலமாக கொலை மிரட்டல் விடுத்தார். உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். ஊடகங்களில் இந்த செய்தியை வெளியிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ” என்பதாக கோரிக்கை விடுத்திருக்கிறார், வா.ரங்கநாதன்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

வா.ரங்கநாதன்,
வா.ரங்கநாதன்,

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

எந்த ஒரு தனிநபரும், அமைப்பும், அல்லது ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் நேரத்தில் தாங்கள் யாரை ஆதரிக்கிறோம் என்பதை வெளிப்படையாக அறிவிப்பதற்கு முழுமுற்றான உரிமையை சட்டம் அனுமதித்திருக்கும் நிலையில் இப்படி ஒரு கொலை மிரட்டல் அதிர்ச்சியளிக்ககூடியதாக அமைந்திருக்கிறது.

எந்தவிதமான அச்சுறுத்தல், அழுத்தங்கள் இல்லாத நியாயமான தேர்தலை நடத்துவதற்கு பொறுப்பேற்றுள்ள தேர்தல் ஆணையம் தமிழகத்தில் பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டுவரும் நிலையில், ஜனநாயக ரீதியில் தங்களது நிலைப்பாட்டை கருத்தை முன்வைத்ததற்காக இப்படி ஒரு கொலைமிரட்டல் விடுத்திருக்கும் விவகாரம் தொடர்பாக கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

— அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.