‘சிறுதானியங்களின் தேவை’ சாந்தா ஷீலா நாயர் அறிவுரை !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

உறுதியான உடல் ஆரோக்கியம் பெற சிறுதானியங்களைச் சாப்பிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமைச் செயலர் சாந்தா ஷீலா நாயர் அறிவுரை வழங்கினார்.

கரூர் மாவட்டம் கடவூர் இன்ப சேவா சங்கத்தில் நடைபெற்ற வாழ்தாரத் தொழில்நுட்ப திட்டத்தின் துவக்க விழாவில் பங்கேற்று அவர் பேசினார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

கற்களும், முட்களும் நிறைந்த வறண்ட பூமியான இந்தப் பகுதியை மரங்கள் அடர்ந்த சோலை வனமாக, விவசாய பூமியாக மாற்றிய லியோ பிரவோ அவர்களின் உழைப்பை வெகுவாகப் பாராட்டினார் சாந்தா ஷீலா நாயர். அவரோடு சேர்ந்து நானும் இந்தப் பணிகளில் பங்கேற்றேன் என்றார்.

லியோ பிரவோ வின் உயிருக்கு ஆபத்தும் இருந்தது. பசுமைப் புரட்சியை முதலில் துவங்கிய, வினோபாவின் வழியில் நடந்த புரட்சிப் பெண் லியோ பிரவோ.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

உழுதுண்டு வாழ்வோருக்குப் பின் செல்பவராக நாம் இருக்கிறோம். பிறரின் வாக்குறுதிகளை நம்பாதீர்கள். சுயமாகச் சிந்தியுங்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

வாழ்வாதாரம் உயர வேண்டும். அதோடு வாழ்க்கைத் தரமும் உயர வேண்டும்.  பசு மாடு வளர்த்து பாலை விற்று விட்டு பழைய சோறு சாப்பிடும் நிலையில் ஏழைகள். இந்த நிலை மாறிட வேண்டும். சிறு தானியங்கள், முருங்கைக் கீரை போதும் வலிமை பெற.

நமது பணியாரத்தை எல்லாம் மறந்துவிட்டு புரோட்டா, பிரியாணி என்று அலைகிறோம்.‌

விவசாய விளை பொருட்களுக்கு உள்ளூர் சந்தைகளை உருவாக்த வேண்டும். இயற்கையில் கிடைக்கும் எதுவும் வேஸ்ட் இல்லை. களைகள் கூட மருந்தாகப் பயன்படும் என்று சாந்தா ஷீலா நாயர் பேசுகையில் குறிப்பிட்டார்.

திருச்சி ஸ்கோப் நிறுவனம் பத்மஶ்ரீ சுப்புராமன், சியோரா டாக்டர் ஜெயராமன், பேராசிரியர் டாக்டர் மணிகண்டன் ஆகியோரும் பங்கேற்றுப் பேசினர். வழக்கறிஞர் நல்லயம் பெருமாள் வரவேற்றார்.

டாக்டர் டேவிட் ரவீந்திரன் நன்றி கூறினார். மனிதம் தங்கப்பாண்டியன் நிகழ்ச்சியினை அழகு தமிழில் நெறிப்படுத்தினார்.

—   ஜவஹர் ஆறுமுகம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.