தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை ! துணைவேந்தர் பாராட்டு!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் ஐந்து நூல்களை எழுதி சாதனை படைத்துள்ளனர். இச்சாதனை புரிந்த மாணவர்களைப் பல்கலைக்கழக மத்திய நூலகம் சார்பில் பாராட்டி கௌரவிக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் பிசியோதெரபி துறை மாணவர்  இராஜதுரை, மருத்துவக் கல்வியை எளிமைப்படுத்தும் நோக்கில்  ‘Fractures Simplified’ மற்றும் ‘Simplified Peripheral Nerve Spectrum’ ஆகிய இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அதேபோல், பல்கலைக்கழக சட்டப்பள்ளி மாணவர் என். கீர்த்திவாசன், சட்ட நுணுக்கங்கள் மற்றும் சிந்தனைத் திறனை விவரிக்கும் ‘Legal Maxims and Phrases’, ‘The Bharatiya Sakshya Adhiniyam, 2023’ மற்றும் ‘The Art of Asking Why’ஆகிய மூன்று நூல்களைப் படைத்துள்ளார்.

மாணவர்களின் கல்வி மற்றும் எழுத்துப் பங்களிப்பைப் பாராட்டி நடைபெற்ற விழாவில், பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் சி.கே. ரஞ்சன் அவர்கள் இரு மாணவர்களுக்கும் கேடயம் வழங்கிப் பாராட்டினார்.பல்கலைக்கழகப் பதிவாளர், பல்வேறு துறைகளின் டீன்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக நூலகர்கள் திருமதி. எஸ். சுதா மற்றும் திருமதி. கே. சுபாஷினி ஆகியோர் ஒருங்கிணைத்துச் செய்திருந்தனர். இளம் வயதிலேயே மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தையும், புத்தகம் எழுதும் படைப்பாற்றல் ஆர்வத்தையும் ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.