2026 சட்டமன்றத் தேர்தலும் திமுக மாவட்ட செயலாளர்களும் – ஒரு பார்வை !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திமுகவில் தற்போது இருக்கும் 78 மாவட்ட செயலாளர்களில்

1) திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் – எம் எஸ் தரணிவேந்தன் ;

இந்த வார அங்குசம் வார இதழில்…

2)  தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் ;

3)  சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்  டி எம் செல்வகணபதி;

4)  வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டி எம் கதிர் ஆனந்த் ;

5)  தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் – ஆ. மணி;

6)  திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் – K. ஈஸ்வர சாமி – ஆகிய 6 பேர் மக்களவை உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் – எஸ் ஆர் சிவலிங்கம் மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் KRN. ராஜேஷ்குமார் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

மீதமுள்ள 70 மாவட்ட கழக செயலாளர்களில்  54 பேருக்கு, 2026 சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எஞ்சியுள்ள 16 மாவட்ட செயலாளர்களுக்கு  தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

வாய்ப்பு வழங்கப்பட்ட 54 மாவட்ட கழக செயலாளர்களில் தற்பொழுது தனது முதல் தேர்தலை சந்திக்கும் 5 மாவட்ட  செயலாளர்கள் எதிர்கொள்கிறார்கள்.

1) நீலகிரி மாவட்ட செயலாளர் கே எம் ராஜி – குன்னூர் தொகுதி

2) ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர்  N. நல்லசிவம்  – கோபி தொகுதி

3) புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் கே கே செல்லபாண்டியன் –  விராலிமலை தொகுதி .

4) சென்னை மேற்கு  மாவட்ட செயலாளர் நே. சிற்றரசு  –  அண்ணா நகர்.

5) விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர், ( முன்னாள் மக்களவை உறுப்பினர் )  பொன் கௌதம சிகாமணி –  திருக்கோவிலூர் தொகுதியில் களம் காண்கிறார்.

தற்போது மாவட்ட செயலாளர்களாக நீடிக்கும், அதேசமயம் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படாத 16 மா.செக்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

1) திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர்  எஸ் கே ரமேஷ் ராஜ்

2) திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் சந்திரன். இவர் திருத்தணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

3) ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் ஆர் காந்தி . முன்னாள் அமைச்சராக இருந்தவர்.

4) திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்   க தேவராஜ் . ஜோலார்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

5) கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒய் பிரகாஷ். ஓசூர்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

6) கோவை வடக்கு மாவட்ட செயலாளர்  தொ. அ. ரவி.

7) திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன்

8) திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி  என் தியாகராஜன். முசிறி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

9) திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி .

10) பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெகதீஷ்.

11) தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பழனிவேல் .

12) நாகை மாவட்ட செயலாளர் கவுதமன்.

13) திருநெல்வேலி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிரகாம்பெல்.

14) திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர்  R.ஆவுடையப்பன். அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் சபாநாயகர்.

15) தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே ஜெயபாலன்.

16) கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர், மனோ தங்கராஜ். பத்மநாபபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர்.

—  அங்குசம் தேர்தல் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.