எஸ்.ஐ கன்னத்தில் குத்துவிட்ட திமுக பிரமுகர் தலைமறைவு? போலீஸ் துன்புறுத்துவதாக நாதக பிரமுகர் பரபரப்பு புகார் !!
திருப்பத்தூர் தாலுக்கா ஸ்டேஷனில் துணை காவல் ஆய்வாளராக பனிப்புரியும் எஸ்ஐ ஒருவர் கடந்த . டிசம்பர்-21 சனிக்கிழமையன்று இரவு 10 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார், அப்போது திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் உள்ள “கவுதம் பேட்டை அடுத்த . “அண்ணா நகர் பகுதியில் ஒரு கும்பல் நடு ரோட்டில் ஆடிப்பாடி கூச்சலிட்டப்படி, அந்த கும்பலிலிருந்த ஒருவனின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியபடி இருந்துள்ளது.
மேலும், அந்த கும்பல் குடித்துவிட்டு ரோட்டில் வருவோர் போவோர்களை , வம்பிழுத்தப்படி இருந்தனர் , அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட தாலுக்கா ஸ்டேஷன் துணை காவல் ஆய்வாளர் அந்த கும்பலை காரில் இருந்தபடியே தட்டி கேட்டிருக்கிறார்
அதனைத்தொடர்ந்து, . அந்த கும்பலில் இருந்த அண்ணா நகரை சேர்ந்த ( திமுக பிரமுகர்) “சந்தரு” என்பவன், எஸ் ஐயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ஒரு கட்டத்தில், குடிபோதையில் இருந்த “சந்த்ரு” எஸ்ஐ கண்ணத்தில் “பாளார்’ என அறைந்துவிட்டு ஓடியுள்ளான்.
இந்த சம்பவத்தை கண்ட , மற்றோரு பெண் எஸ்ஐ ஒருவர் விரட்டிச் சென்ற நிலையில் , அந்த பகுதியில் இருந்து அந்த கும்பல் எஸ்கேப்பாகியுள்ளது.
அதனைத்தொடர்ந்து, தப்பியோடிய சந்த்ரு மீது திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் ( NO : 519/2024 U/S 296(b), 132,121(1),351(2) BNS ) . பதிந்து தனிப்படையமைத்து தேடி வருகின்றனர்.
இதற்கிடையே. “சந்த்ரு”வின் குடும்பத்தில் உள்ளவர்களை போலீசார் சம்பவம் நடந்த அன்று இரவே சுவர் ஏறி குதித்து அழைத்து சென்று அடித்து துன்புறுத்தியதாகவும் , அவருக்கு வேண்டப்பட்ட கவுதம் பேட்டையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் “கார்த்திக்” என்பவருக்கு சம்மன் அனுப்பி விசாரித்ததில் தான் தாக்கப்பட்டதாக கூறி இன்று டிசம்பர்-28 அன்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து கார்த்திக்-யிடம் பேசினோம்
நாம் தமிழர் கட்சியில் முன்பு பொறுப்பில் இருந்தேன் தற்போது இல்லை. சம்பவம் நடந்த அன்று இரவு நான் அங்கு இல்லவேயில்லை எஸ்ஐ-யை சந்த்ரு அடித்ததாக நானும் கேள்விப்பட்டேன் , எனக்கும் சந்துருவுக்கும் எந்த தொடர்புமில்லை, அப்படி தெரிந்தும் என்னையும் என் குடும்பத்தாரையும் அழைத்துச் சென்று போலீஸ் மிரட்டினார்கள், தொடர்ந்து சம்மன் அனுப்பி வரவழைத்து துன்புறுத்துகிறார்கள் , இது சம்மந்தமாக நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளேன் என்றார்.
சம்மந்தப்பட்ட எஸ்ஐயிடம் பேச முயன்றோம் , அவர் சந்திக்க விரும்பவில்லை, ஒருவித மன நெருடலாக இருக்கிறார் என்கிறார்கள் அங்கிருக்கும் காவலர்கள்
சாலையில் மது போதையில் அட்டூழியத்தில் ஈடுபடும் ஆசாமிகள் மீது, பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்து போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர்.
ஆனால், அந்த கும்பல் மீது திருப்பத்தூர் டவுன் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர் என , கூறினாலும் , எஸ்ஐ கன்னத்தில் அறைந்து, வாயில் குத்துவிட்ட திமுக பிரமுகர் “சந்தரு”வை கைது செய்யாமல் இருப்பதும் , அந்த பகுதியில் உள்ள சில திமுக பிரமுகர்களே அவனுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருவதுமாக சில காவலர்கள் குமுறி வருகின்றனர்.
மேலும், தப்பியோடிய குற்றவாளியை பிடிக்காமல், அவர் குடும்பத்தினரையும் . அவரைச் சார்ந்த நண்பர்களையும் , அழைத்து சென்று போலீஸ் துன்புறுத்துவது எந்த வகையில் ஞாயம், இது ஆராஜக செயல், என்கின்றார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்
– மணிகண்டன்