திமுகவின் உள்கட்சி தேர்தல் ; தேர்தல் ஆணையத்திடம் வருத்தம் தெரிவித்த திமுக!
நேற்று 21.10.21 டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி ஆர் பாலு மற்றும் இளங்கோ ஆகிய இருவரும் சென்று அதிகாரிகளை சந்தித்தனர். பிறகு செய்தியாளர்களிடம் டி ஆர் பாலு கூறியது,
கடந்த ஜூலை மாதத்திற்குள் திமுகவில் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டிய நிலை இருந்தது, ஆனால் கொரோனா ஊரடங்கு அரசின் நடவடிக்கைகள், மற்றும் பல்வேறு காரணங்களால் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நேரம் கேட்டிருந்தோம். இந்த நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. இதனால் மேலும் அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையத்தை சந்தித்து வருகின்றோம் என்று கூறினார்.
மேலும் காலதாமதத்திற்கு வருத்தம் தெரிவித்தும் மேலும் வரும் ஜூன் மாத இறுதிக்குள் திமுகவின் உள்கட்சி தேர்தல் நடத்தி முடிப்பதாக கூறியிருக்கிறோம். என்று கூறினார்.