அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நமது வாக்கு அடுத்த தலைமுறை கல்வி உரிமைகளுக்கான வாக்காக அமைய வேண்டும் !

திருச்சியில் அடகு நகையை விற்க

2026 ஏப்ரல் 23 அன்று வாக்குச் சாவடிக்கு செல்லும் நாம், வெறும் வாக்காளர்கள் அல்ல. இறையாண்மை பெற்ற இந்தியர்கள் என்ற பொறுப்பு நமக்குள்ளதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து நமது வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்.

 

அன்னிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா விடுதலை அடைந்தது. அக்டோபர் 24, 1945 அன்று  ஐக்கிய நாடுகள் சபை உருவானது. ஐக்கிய நாடுகள் சபை (UNO) உருவாகும் போது, நாடு என்பதற்கான  சர்வதேச சட்ட வரையறைப்படி இந்தியா ஒரு நாடு அல்ல. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஒரு காலனி. இருந்த போதும், ஐக்கிய நாடுகள் சபை அமைப்புக் கூட்டத்திற்கு  இந்தியா அழைக்கப்பட்டு, அதன் நிறுவன உறுப்பினர் (Founding Member) என்ற தகுதியை இந்தியா பெற்றது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

 

தனது விடுதலைக்கு போராடும் காலத்திலேயே, உலகின் பல்வேறு பகுதிகளில் விடுதலைக்காக போராடிய மக்களுக்கு ஆதரவாக இந்தியா நின்றது. எந்த நாட்டுடனும் இராணுவ ரீதியான உறவு வைத்துக் கொள்ளாமல், போர் இல்லாத அமைதியான உலகிற்கு பாடுபடுவது எனும் அயல் உறவு கொள்கையை வகுத்துக் கொண்டதனாலேயே இந்தியா உலக அரங்கில் பெரும் புகழுடன் விளங்கியது. விடுதலையடைந்த இந்தியாவின் அயல் உறவு கொள்கையான பஞ்ச சீல கொள்கையை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டது. வல்லரசு தலைமையை நிராகரித்த 77 நாடுகளை ஒருங்கிணைத்து, அணிசேரா நாடுகள் அமைப்பு (Non-Aligned Movement) உருவாவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது. பின்னர் நூற்றுக்கும் அதிகமான நாடுகள் கொண்ட இந்த அமைப்பின் தலைமையை ஏற்று வழி நடத்திய பெருமை இந்தியாவிற்கு உண்டு.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

 

இத்தகையப் புகழுக்கு மிக முக்கிய காரணம், இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு கொள்கையை நிராகரித்து, பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இந்தியா நின்றது. நிறவெறி அரசிற்கு எதிரான தென் ஆப்ரிக்கா மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இந்தியா நின்றது. பல நாடுகளுக்கு இடையே நடந்த போர்களை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையில்  மிக முக்கிய பங்கை ஆற்றியது இந்தியா.

 

இவ்வளவு சிறப்பு மிக்க இந்தியாவின் இன்றைய நிலை மிகவும் கவலை தருவதாக அமைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில், அணு ஆயுத போரில் இருந்து தான் இந்தியாவை காப்பாற்றியதாக அமெரிக்க அதிபர் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.  சமீபத்தில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பாக, இந்திய நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், இந்திய மக்களுக்கு தெரிவிக்காமல், “இந்தியா உங்களுடன் நிற்கிறதுஎன்று இஸ்ரேல் பிரதமரை நேரில் சந்தித்து இந்திய பிரதமர் கூறி வந்துள்ளார்.

 

இந்தியாவின் கம்பீரமான வெளியுறவு கொள்கையைக் கைவிட்டு, வல்லரசு நாடுகளின் ஆதிக்கப் போரை எதிர்க்காமல், மௌனம் சாதிக்கும் நிலையில் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக வைத்துள்ளது. உலக அரங்கில் இந்தியா வகித்து வந்த இடத்தைப் பிடிக்க இன்று பாகிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது பாஜக.

 

மேற்கு ஆசியாவில் நடக்கும் போர், உலகப் பொருளாதாரத்தையே சிதைத்து, மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கும் சூழலை உருவாக்கி உள்ளது. அந்த ஆபத்தை தடுக்க இந்தியா ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து நாடாளுமன்றத்தைக் கூட்டி, ஆக்கபூர்வமான விவாதம் நடத்தாமல், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் பெண்கள் வாக்கை குறிவைத்து, நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் குரலை நசுக்கும் சூழ்ச்சியை அரங்கேற்றத் துடிக்கிறது பாஜக.

 

வாழ வைக்க வாக்குறுதி கேட்டால், செத்த பின்னர் ஈமச்சடங்கு செய்ய நிதி தருகிறோம் என்று தேர்தல் வாக்குறுதியில் பாஜக கூறுகிறது.

தமிழ்நாடு: பாஜக திமுக, அதிமுகவை விஞ்சி தொகுதிகளை வெல்லும் அளவுக்கு  வலுப்பெற்றிருக்கிறதா? - BBC News தமிழ் 

தனது தேர்தல் அறிக்கையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை முன்வைத்து தவறான வாக்குறுதிகளை பாஜக தந்துள்ளது. 

 

காலம்காலமாக திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்தோடு திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இந்த உண்மையை மறைத்து, ஏதோ தீபம் ஏற்றுவது தடைப்பட்டுவிட்டது போலவும், தீபம் ஏற்ற தாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறுவது உண்மைக்கு புறம்பான செய்தி. மக்களின் நம்பிக்கை அடிப்படையில் கடவுள் வழிபாடு நடக்கிறது. கடவுளை வணங்க மக்கள் தங்களுக்கான வழிமுறையை வகுத்து வைத்துள்ளனர். காலம் காலமாக கார்த்திகை தீபம் ஏற்றும் வழிமுறை என்னவோ, அந்த வழிமுறைபடி இந்த ஆண்டும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டது. 

 

திடீரென ஒரு கும்பல், சம்பந்தமில்லாத தூணில் தீபம் ஏற்ற போவதாக மிரட்டி, தேவையில்லாத கலவரத்தை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்க முயற்சி செய்தது. கோவில் வழிபாட்டு முறையைப் பின்பற்றாமல், புதிய நடைமுறையை புகுத்தி, கலவர பூமியாக திருப்பரங்குன்றத்தை மாற்றத் துடிக்கும் கும்பலுக்கு ஆதரவாக பாஜக தேர்தல் வாக்குறுதி தந்துள்ளது. திருப்பரங்குன்றத்தின் அமைதியான சூழல் தொடர, கலவரத்தை தூண்டும் பாஜகவை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

 

நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம்  ஏற்றவில்லைதைப்பூசம் தமிழ்நாடு முழுவதும் மக்களால் மகிழ்ச்சியுடன் அவரவர் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தில் சண்முக கவசம் பாடி முருகனை வழிபடும் வழக்கமும் இங்குண்டு, சஷ்டி கவசம் பாடி முருகனை வழிபடும் வழக்கமும் இங்குண்டு. உருவம் இல்லாமல், ஒளியை வழிபடும் வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க சத்திய நெறியைப் பின்பற்றும் வழக்கமும் இங்குண்டு. பொதுமைப்படுத்தி மாநில அளவில் தைப்பூச விழா என்றால் சண்முகக் கவசமா? சஷ்டி கவசமா? வள்ளலாரின் திருவருட்பாவா? எதை வழிபாட்டிற்கு பின்பற்ற வேண்டும் என்ற சச்சரவு ஏற்பட்டு, நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழலை உருவாக்க வேண்டுமா? “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்என்று அருட் பிரகாச வள்ளலார் தைப்பூச நாளன்று கந்தக் கோட்டத்தில் நின்று பாடியுள்ளதை ஆன்மீகத்தில் ஆழ்ந்த பற்று கொண்ட தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

மக்கள் அவரவர் வழிபாட்டு முறைப்படி அமைதியாக வழிபடும் விழாவை அரசு விழாவாக நடத்துவோம் என்று பாஜக தனது தேர்தல் வாக்குறுதியாக கூறுவது, ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் எதை விரும்புகிறார்களோ அதையே மக்கள் வழிபாட்டு முறையாக பின்பற்ற வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கும் சதி திட்டம் என்பதை மக்கள் உணர வேண்டும்.  இந்த வாக்குறுதி இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. தமிழரின் ஆன்மீக நெறிக்கும் எதிரானது.

 

பாஜக கூறுவது மன்னர் காலத்து நடைமுறை. மக்களாட்சிக்கு உகந்ததல்ல. அதிலும், இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று வரையறைத்துள்ளது. அரசு எந்த மதத்துடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள இயலாது. வழிபாட்டு உரிமை மக்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. அதில் தலையிட அரசிற்கு எந்த உரிமையும் இல்லை. 

 

அமைதியாக நடக்கும் தைப்பூச விழா, பாஜகவின் குறுகிய அரசியலுக்கு பலியாகிவிடக் கூடாது. முருக பக்தர்களுக்கிடையே பகையை மூட்டும் பாஜாகவின் சூழ்ச்சியை மக்கள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்.

  

சைவ சமயத்தை சார்ந்த 63 நாயன்மார்கள், வைணவ சமயத்தைச் சார்ந்த 12 ஆழ்வார்கள், எண்ணில் அடங்கா சித்தர்கள், பல வகையான வழிபாட்டு முறைகள், இறை நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் என பலவகையான பழக்க வழக்கங்கள் கொண்ட மக்கள் வாழும் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட கடவுளை முன்னிறுத்தி தைப்பூச நிகழ்ச்சியை அரசு விழாவாக நடத்துவோம் என்று பாஜக கூறுவது, இறைவன் மீது கொண்ட பக்தியோ, மக்களுக்கு நன்மை பயக்கவோ அல்ல. சமூக அமைதியை சீர்குலைத்து, மதக் கலவரத்திற்கு வித்திடும் உத்தியை பாஜக கையில் எடுத்துள்ளது. குறுகிய தேர்தல் ஆதாயத்திற்காக காலம்காலமாக அன்பு பாராட்டி வாழும் மக்களின் மனங்களில் வெறுப்புணர்வை விதைக்க பாஜக முயற்சி செய்கிறது.

 

இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களுக்கு வழிபடும் உரிமையை வழங்கியுள்ளது. அரசிற்கு மதம் இல்லை என்பதே அதன் பொருள். அரசு ஒரு மதம் சார்ந்த விழாவை நடத்த இயலாது. மக்கள் அவரவர் வழிபாட்டு முறைப்படி பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படாமல் விழாக்களை நடத்திக் கொள்ளவே அரசமைப்புச் சட்டம் உரிமை தந்துள்ளது. ஒரு மதச் சார்பற்ற அரசு, ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சியை நடத்தும் என்று கூறுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான மதச் சார்பற்ற கோட்பாட்டை சிதைக்கும் செயலாகும்.

 

குஜராத்தில் பாஜக ஆட்சி செய்த போது, திரு. நரேந்திர மோடி அவர்கள் அம்மாநில முதல் அமைச்சராக இருந்தார். கலவரக்காரர்கள் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து, சிசுவை எடுத்து, சிதைத்து, தாயுடன் நெருப்பில் போட்டு எரித்தார்கள். இத்தகைய கொடூரமான சம்பவம் விடுதலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை. குற்றங்களின் தலைநகரமாக காந்தி பிறந்த குஜராத்தை மாற்றிய பாஜக, இன்று தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்க, உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

 

தமிழ்நாடு குற்றங்களின் தலைநகரமாக விளங்குவதாக பாஜக தேர்தல் அறிக்கை கூறுகிறது. பகிரங்கமாக இந்த மாநிலத்தை சிறுமைப்படுத்துவதோடு, குற்றங்கள் நடப்பதை அனுமதிக்க விரும்பாத தமிழ்நாடு மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பாஜக தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. திரு. நரேந்திர மோடி அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது இந்தியாவில் குற்றங்களின் தலைநகரமாக குஜராத் விளங்கியது என்பதே உண்மை. 

 

தமிழ்நாடு என்றுமே குற்றங்களை தடுக்க இயலாத மாநிலமாக இருந்ததில்லை. குற்றங்களை தடுப்பதிலும், குற்றம் நிகழ்ந்தால் உடனே விசாரணை மேற்கொள்ளும் நிர்வாக திறன் கொண்ட மாநிலமாகவும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுடன் ஒப்பீட்டளவில் தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பான மாநிலமாகவும்   திகழ்கிறது.

2002 யில் குஜராத்தில் பாஜக ஆண்டபோது நடந்த வன்முறையை, 2026 ல் தமிழ்நாடில் அரங்கேற்றத் துடிக்கிறது பாஜக. விழிப்புடன் இருந்து தமிழ்நாடு மாநிலத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு இறையாண்மைக் கொண்ட இந்திய மக்களுக்கு உள்ளது.

 

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், மக்கள் ஒற்றுமைக்கும் பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ள பாஜகவை தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும். அக்கட்சியின் அரசமைப்புச் சட்ட விரோத வாக்குறுதிகளுக்கு துணைநிற்கும் கூட்டணிக் கட்சிகளையும் மக்கள் நிராகரிக்க வேண்டும்.

 

பாஜகவின் பிரதமரான மோடியின் தலைமை இந்தியாவிற்கு பெரும் ஆபத்து என்று உணர்ந்ததாலேயேமோடியாலேடியாஎன முடிவெடுக்க மக்களைக் கோரினார் செல்வி ஜெயலலிதாமோடியின் தலைமையை நிராகரிக்க எழுப்பிய முழக்கமே செல்வி ஜெயலலிதா அவர்களின் கடைசி முழக்கம். மோடியின் பாஜகவுடன் கூட்டணி என்பது, செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு செய்யும் துரோகம் என்பதை, செல்வி ஜெயலலிதா அவர்கள் மீது விசுவாசம் வைத்திருக்கும் அவரின் தொண்டர்கள் உணர்ந்து, துரோகக் கூட்டணியை நிராகரிக்க வேண்டும்.

 

நமது சமையல் அறையில், சமையலுக்கு தேவையான எரிபொருளுக்கும் சர்வ தேச போர் சூழலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

 

வெளியுறவு கொள்கை தொடங்கி இந்திய கூட்டாட்சித் தத்துவம் வரை அனைத்திலும் இந்தியாவை பலவீனப்படுத்தும் பாஜகவை நிராகரிக்கும் வாக்காக நமது வாக்கு அமைய வேண்டும்.

 

தேசியக் கல்விக் கொள்கை 2020 என்ற பெயரில் நமது அடுத்தத் தலைமுறை குழந்தைகளின் கல்விக் கனவை சிதைத்து, அரைகுறை திறன் கொண்ட கூலித் தொழிலாளர்களாக வணிகச் சந்தையில் நமது இளைஞர்களை சிக்கவைக்கும் சூழ்ச்சியை அரங்கேற்ற  மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. 

 

மருத்துவத்திற்கு எப்படிநீட்எனும் நடைமுறையைப் புகுத்தினார்களோ, அதேபோல், மாநில அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து பி.., பி.எஸ்.சி., பி.காம்., பட்டப் படிப்பு படிப்பதற்கு கூட அகில இந்திய அளவில் நடக்கும் பல்கலைக்கழகப் பொது நுழைவுத் தேர்வைத் (Common University Entrance Examination – CUET – கியூட்) திணிக்க துடிக்கிறார்கள்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

  

PM SHRI Schools Odisha: A New Era in Education - Pragativadi I Latest  Odisha News in English I Breaking Newsமாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல பின்னப் பட்ட சூழ்ச்சி வலைதான் பிஎம் ஶ்ரீ பள்ளிகள்மாநில அரசு மற்றும் மாநில அரசின் உதவிபெறும் சுமார் ஐம்பதாயிரம் பள்ளிகளை பலவீனப்படுத்தி, மாநில அரசுப் பள்ளிகளில், நல்ல கட்டமைப்பைக் கொண்ட பள்ளிகளை, ஒரு கல்வி மண்டலத்திற்கு ஒரு பள்ளி என்ற அளவில் தேர்ந்தெடுத்து பிஎம் ஶ்ரீ பள்ளி என்ற முத்திரையுடன் அதை தனது ஆளுமையின் கீழ் ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டு, இறுதியில் அதை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாரிடம் வழங்கி விடுவதே பிஎம் ஶ்ரீ பள்ளி திட்டத்தின் சூழ்ச்சி.

 

அரசு இனி பள்ளிகளை நடத்தாது என்பதே தேசியக் கல்விக் கொள்கை 2020யின் அடிப்படை நோக்கம். 69 சதவீத இட ஒதுக்கீடு, காலை, மதிய உணவு உள்ளிட்ட கட்டணமில்லா கல்வி என்பது இனி சாத்தியம் இல்லை என்பதே தேசியக் கல்விக் கொள்கை 2020. கூடுதல் மொழிகள் கற்கும் சுமையை மாணவர்கள் மீது சுமத்தும் துயரத்தை விட பெரும் துயரமாக வேலைத் திறன் பயிற்சியும், அரசுப் பள்ளி அழிப்பும் நம் முன்னுள்ள ஆபத்துகளாகும்.

 

விக்சித் (Viksit) என்ற சமஸ்கிருத பதத்திற்கு பொருள் வளர்ந்த, அதாவது வளர்ச்சியடைந்த என்பதாகும். விக்சித் பாரத் என்றால் வளர்ச்சியடைந்த இந்தியா (Developed India).

 

வளர்ச்சியடைந்த இந்தியாவில் மக்கள் அனைவருக்கும் கல்வியை உரிமையாக அரசு வழங்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 41 கூறுகிறது. அதாவது அரசின் பொருளாதார நிலைக்கு ஏற்ப கல்வியை அனைத்து நிலையிலும் உரிமையாக அரசு வழங்க வேண்டும். (The State shall, within the limits of its economic capacity and development, make effective provision for securing the right to work, to education and to public assistance in cases of unemployment, old age, sickness and disablement, and in other cases of undeserved want.)

 

விக்சித் பாரத், அதாவது வளர்ந்துவிட்ட இந்தியாவில், கல்வியை தனது பொறுப்பில் அரசு வழங்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் போது, அதற்கு நேரெதிராக ஒட்டுமொத்த உயர் கல்வியையும் வணிகச் சந்தையிடம் ஒப்படைக்க வழிச் செய்யும் சட்டத்தை   நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது பாஜக அரசு.

 

விக்சித் பாரத்தில், கல்விக்கான நிதி நல்குவது பற்றி தனது சட்டத்தில் எதையுமே ஒன்றிய அரசு கூற மறுப்பதுடன், இருக்கும் அரசு உயர்கல்வி நிறுவனங்களையும் தனியாரிடம் ஒப்படைத்திட வாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்திய அரசிற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கடமைகள் குறித்து, பா.. அரசு எந்தவித அக்கறையும் இல்லாத அணுகுமுறையைக் கொண்டுள்ளது.

 

உயர்கல்வியை ஒட்டுமொத்தமாக வணிகமயமாக்கும் பகிரங்க திட்டமான விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதா (VBSA Bill), 2025 நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்வில் உள்ளது.

 

பல்கலைக்கழங்களை உருவாக்க, ஒழுங்குப்படுத்த, கலைக்க தேவையான அதிகாரம் மாநில அரசிடம் மட்டுமே இந்திய அரசமைப்புச் சட்டம் தந்துள்ளது. கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இருந்தாலும், உயர் கல்வியில் தரத்தை தீர்மானிக்கவும், ஒருங்கிணைக்கவும் மட்டுமே ஒன்றிய அரசிடம் அதிகாரம் தரப்பட்டுள்ளது.

 

தரத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, பல்கலைக் கழகங்களை ஒழுங்குப்படுத்தும், கலைக்கும் அதிகாரத்தையும் ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ளவே விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அப்பட்டமான இந்திய அரசமைப்புச் சட்டத்தை மீறும் நடவடிக்கை.

 

மாநில அரசின் பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்தும், கலைக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசிடம் வழங்க வழிச் செய்யும் விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதாவை ஏற்று விவாதிக்கும் உரிமை, இன்றுள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி, நாடாளுமன்றத்திற்கு கிடையாது.

 

கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த நாடாளுமன்ற மக்களாட்சியை (Parliamentary Democracy based on Federal Structure) சிதைக்கும் இந்த மசோதா, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கும் அதன் பல்வேறு கூறுகளுக்கும் எதிரானதாகும்.

 

இந்த மசோதா சட்டமானால், தமிழ்நாடு அரசின் 21 பல்கலைக்கழகங்கள் உட்பட, மாநில அரசுக் கல்லூரிகள் அனைத்தையும் ஒழுங்குப்படுத்தும், கலைக்கும் அதிகாரம் ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு செல்லும். மாநில அரசிற்கு எந்த அதிகாரமும் இருக்காது.

 

அதிகாரத்தை மொத்தமாக தன்வசம் எடுத்துக் கொள்ளும் ஒன்றிய அரசு, நிதி நல்கைக் குறித்து மசோதாவில் எதையும் குறிப்பிடவில்லை. மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை, ஒன்றிய அரசு நிதி தராது, அப்படி என்றால், மாநில அரசுப் பல்கலைக்கழகங்களும், மாநில அரசுக் கல்லூரிகளும், மாநில அரசு உதவிபெறும் கல்லூரிகளும் எப்படி இயங்கும்? இவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு யார் ஊதியம் தருவார்கள்?

 நிதி இல்லை என்ற நிலையில் மாணவர்களிடம் கட்டணம் பெற்றே அனைத்து பாடப் பிரிவுகளும் நடத்தப்படும். அத்தகைய நிலையில் பி.., பி.எஸ்.சி., பி.காம்., போன்ற பாடப் பிரிவுகளுக்கு தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படுவது போல் ஆண்டிற்கு ரூபாய் ஒரு இலட்சத்திற்கும் அதிகாமாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும். கட்டணம் செலுத்தி படிக்கும் நிதி சுயசார்பு (self-supported course) நிலையில், இட ஒதுக்கீடு என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது.

 மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுவது, நிதி நல்க மறுப்பது, ஆகியவற்றுடன் மிகப் பெரும் ஆபத்து ஆசிரியர்களும் மாணவர்களும் தங்களின் கல்வியியல் செயல்பாட்டு சுதந்திரத்தை இழப்பது.

 ஒன்றிய அரசு அமைக்கும் ஆணையத்தின் கீழ் இயங்கும் தரத்தைத் தீர்மானிக்கும் மன்றமே எதை கற்பிக்க வேண்டும், எப்படி கற்பிக்க வேண்டும், எப்படி மதிப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்யும். வழங்கப்படும் பாடத்திட்டத்தைத் தாண்டி அரசின் கொள்கைகள், சமூகச் சிக்கல்கள் ஆகியவற்றை விவாதிக்கும் உரிமையை ஆசிரியர்களும் மாணவர்களும் இழப்பார்கள்

கற்றறிந்த ஆசிரியர்களும் மாணவர்களும் விவாதிக்கக் கூடாது என்றால், உயர்கல்வி பெரும் வாய்ப்பற்றிருக்கும் பெரும் பகுதி மக்களுக்கு எப்படி ஒரு கொள்கையின் சூட்சுமமும், சிக்கலும் புரியும்? அரசை எந்த கேள்வியும் யாருமே கேட்கக் கூடாது என்பதுதான் இதன் உண்மை நோக்கம். கேள்வி எழுப்ப வாய்ப்பில்லை என்றால் மக்களாட்சி பலவீனப்டும், அதன் விளைவு தனிமனித சுதந்திரத்தை இழப்போம். வாக்காளராக இருக்கலாம், இறையாண்மை கொண்ட இந்தியராக இருக்க இயலாது.

தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை, அரசின் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி அரசு பொது மருத்துவமனை வரை அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்ட பிறகு நமது அடுத்தத் தலைமுறை குழந்தைகளின் கல்வி, மருத்துவம் என்னவாகும் எனும் பெருங் கேள்வி எழுகிறது.

 இறையாண்மைக் கொண்ட இந்தியராக, கண்ணியமிக்க வாழ்க்கைக்கான உரிமை நமக்கு நீடித்திருக்கப் போகிறதா? அல்லது சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் உரிமையை இழந்து அன்றையத் தேதியில், அரசை ஆளும் பொறுப்பில் உள்ளவர்கள் சொல்வதை மட்டுமே கேட்டு நடக்கும் நுகர்வோராக வாழ வேண்டிய நிலை உருவாகப்போகிறதா? எதிர்காலத்தில், தமிழ்நாடு எப்படி இருக்கப் போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தல்தான் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்.

  

  • கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மாநில அரசின் உரிமைகளைப் போராடித் தக்கவைக்கும் திறன் கொண்ட கட்சியை, வேட்பாளர்களை நாம் தேர்தெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
  • நமது வாக்கு பொய்மையை நிராகரிக்கும் வாக்காக அமைய வேண்டும்.
  • நமது வாக்கு விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதாவை நிராகரிக்கும் வாக்காக அமைய வேண்டும்.
  • நமது வாக்கு அடுத்த தலைமுறை கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ உரிமைகளுக்கான வாக்காக அமைய வேண்டும்.

நமது வாக்கு, கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், மக்களிடம் இறுதி இறையாண்மை எனும் சமதர்ம, மதச் சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக இந்தியாவைக் கட்டமைத்துள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காக்கின்ற வாக்காக அமைய வேண்டும்.

விவரத்துடன் தெளிவான முடிவுகள் எடுக்க வேண்டிய தேர்தலாக 2026 ஏப்ரல் 23 அன்று நடக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல் அமைந்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள், கூட்டணியின் நோக்கங்கள், கடந்த கால அணுகுமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்ந்தால், மக்களாட்சி மாண்புகளை மதித்து நடக்கும் குறைந்த பட்ச உத்தரவாதத்தை மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளிடம் மட்டுமே நாம் எதிர்பார்க்க முடியும்.

கலையுரைத்த கற்பனையே நிலை எனக்கொண்டாடும் கண்முடி வழக்கம் எலாம் மண்மூடிப் போகஎன்றார் அருட் பிரகாச வள்ளல் இராமலிங்க அடிகள்.

புதுமைக் கண்டு வாழ இன்று

போர் செயுந் தமிழ்நாடுமறப்

போர் செயுந் தமிழ்நாடுமிக

முதுமை கொண்ட மடமை வீழ

மோதிடும் தமிழ்நாடுஎன்று முழக்கமிட்டார் கவிஞர் தமிழ்ஒளி.

 

  • தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடக்கும் தேர்தலில், இந்திய மக்கள், இந்திய அரசமைப்புச் சட்டம் தங்களிடம் தந்துள்ள இறையாண்மைப் பொறுப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
  • முன்னேற போராடும் தமிழ்நாட்டை, பின்னுக்கு இழுத்து மடமையில் வீழ்த்தத் துடிக்கும் சக்திகளை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
  •  திமுக, இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, தேமுதிக, மமக, மஜக, எஸ்டிபிஐ உள்ளிட்ட தமிழ்நாடு மாநில நலனில் அக்கறை கொண்ட கட்சிகள் இணைந்து களம் காணும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய தமிழ்நாடு மாநிலத்தில் வாழும் இறையாண்மைக் கொண்ட இந்திய மக்களை பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

 

 பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

 பொதுச் செயலாளர்,

 பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.