அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தேர்தல் பணி பயிற்சி வகுப்பு…!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. D.N. ஹரி கிரண் பிரசாத், IPS அவர்கள் தலைமையில் தேர்தல் பணிகள் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

குளித்தலை உட்கோட்ட காவலர்களுக்கு சுபசக்தி கல்லூரியிலும், கரூர் நகர மற்றும் கரூர் ஊரக உட்கோட்ட காவலர்களுக்கும் VRS திருமண மண்டபத்தில் தனித்தனியாக பயிற்சி வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், வாக்குப்பதிவு நாளுக்கு முன் 72 மணி நேரம், 48 மணி நேரம் மற்றும் 24 மணி நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வாக்குப்பதிவு நாளன்று பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபடும் காவலர்களின் கடமைகள், வாக்குச்சாவடியைச் சுற்றியுள்ள 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் பகுதிகளில் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள், குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களும் விழிப்புடன் செயல்பட்டு, தேர்தல் நடத்தை விதி முறைகள் படி அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக செய்யுமாறு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.