அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நேத்து புரமோஷன் ! நாளை ரிலீஸ்! ‘எங்கள் தங்கம்’ சமந்தா ஸ்டைல்!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

‘ட்ராலா மூவிங் பிக்சர்ஸ்’ பேனரில் சமந்தா தயாரித்திருக்கும் தெலுங்குப்படம் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் தமிழ் பேசி, நாளை [ஜூன்.19] ரிலீசாகிறது. சமந்தாவின் தற்போதைய கணவர் ராஜ் நிடிமோரு திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தை நந்தினி ரெட்டி டைரக்ட் பண்ணியுள்ளார். மிக முக்க்கியமான கேரக்டரில் கெளதமி நடித்துள்ளார்.  ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ், இசை : சந்தோஷ் நாராயணன், எடிட்டிங் : தர்மேந்திர ககராலா, பி.ஆர்.ஓ. : யுவராஜ்.

‘எங்கள் தங்கம்’ நாளை ரிலீசாவதால், படத்தின் தமிழ் வெர்ஷனின் லைட் புரமோஷன் நேற்று [ ஜூன்.17] மதியம் சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவிற்கு வருவதற்கு முன்பு முதல்வர் ஜோசப் விஜய்யை சந்தித்துவிட்டு வந்ததால் சமந்தாவின் முகத்தில் அம்புட்டு பூரிப்பு. விழாவில் பேசியவர்கள்…

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

ஓம் பிரகாஷ், “அழகான காதல் கதைகளை எடுக்கக்கூடிய நந்தினி ரெட்டி, இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட உலகத்தை உருவாகியிருக்கார். இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார் சமந்தா. முழுமையான எண்டெர்டெய்ன்மெட்டாக இப்படம் இருக்கும்”.

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

கெளதமி, ”ரொம்ப நாளைக்குப் பிறகு சினிமா மேடையில் இருக்கேன். சமீபகாலமாக அதிக படங்களை ஒப்புக் கொள்ளாமல் இருந்த நான், இந்தப் படத்தை ஒப்புக் கொண்டதற்குக் காரணம் சமந்தாவும் நந்தினி ரெட்டியும் தான். அதிலும் தயாரிப்பாளராக சமந்தா உயர்ந்திருப்பதனாலேயே ஒத்துக் கொண்டேன். நந்தினியும் சமந்தாவும் மிகவும் வலிமையானவர்கள். இருவரின் பயணமும் பலருக்கு உத்வேகமாக அமையவேண்டும்”

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

சமந்தா, “எனது தாய்வீட்டிற்கு வருவது போல தான் சென்னைக்கு வருவது. எனது கல்லூரிக் காலத்தில் இந்த சத்யம் தியேட்டர் ஏரியாவில் தான் சுத்தியிருக்கேன். தமிழில் நான் அதிகமாக நடிக்கவில்லை என்ற வருத்தம் இப்போதும் எனக்கு இருக்கு. ஆனால் காலம் இன்னும் இருப்பதால் மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன். இன்றும் என்னை நேசிக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் மீடியாக்களுக்கும் என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருக்கேன். ஒருசினிமாவைத் தயாரித்து ரிலீஸ் பண்ணுவதென்பது எவ்வளவு கடினமான வேலைன்னு இந்தப் படம் மூலம் உணர்ந்து கொண்டேன். ஆனாலும் எங்களின் கடின உழைப்பால நல்ல படத்தைத் தயாரித்திருக்கோம் என்ற நம்பிக்கை இருக்கு”.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.