அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அலையும் இல்லை மண்ணும் இல்லை … இது பக்கா EVM மோசடி ? பகீர் கிளப்பும் பொன்ராஜ் !

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக, கட்சி தொடங்கிய மூன்றே ஆண்டுகளில் 108 தொகுதிகளை வென்று தனிப்பெரும்கட்சியாக உருவெடுத்திருக்கும் த.வெ.க.வின் வெற்றியை, விஜய் அலை என்பதாக வர்ணிக்கிறார்கள். இதுவரை மாறிமாறி ஆண்ட  திராவிட கட்சிகளின் மீதான வெறுப்பிலிருந்து மக்கள் விரும்பிய ஒரு மாற்றம்தான் த.வெ.க.வின் வெற்றி என்கிறார்கள்.

ஆனால், முற்றிலும் இது மோடி – அமித்ஷாவின் பக்கா அரசியல் ஆடுபுலி ஆட்டம். வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்துதான் இந்த வெற்றியை தட்டிப்பறித்திருக்கிறார்கள் என பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறார், மறைந்த அப்துல்கலாமின் தொழில்நுட்ப ஆலோசகராக அறியப்பட்ட பொன்ராஜ்.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

யாருமே முன் அனுமானிக்க முடியாமல் போன தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் முழுக்க முழுக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) வைத்து ஆடிய ஆட்டம் என்கிறார். குறிப்பிட்ட ஒரு கட்சி 35% வாக்குகள் பெற வேண்டும் என மென்பொருளில் சங்கேதக் குறிகளை (Software Hacking) உள்ளீடு செய்வதன் மூலம் இதுபோன்ற முடிவை பெற  முடியும் என அடித்துக்கூறுகிறார்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் ஆணையம் மற்றும் ஈவிஎம் (EVM) இயந்திரங்கள் ஆகியவற்றின் கூட்டு விளைவுதான் இது என்கிறார். கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற பாஜகவின் நெடுநாள் கனவை, நடிகர் விஜயை வைத்து கணக்கு தீர்த்துவிட்டது என்கிறார்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

பொன்ராஜ்
பொன்ராஜ்

தமிழகம் முழுவதும் ஒரு கட்சிக்கு 35% வாக்குகள் கிடைத்துள்ளதாகக் காட்டப்படும் நிலையில், அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் அந்தத் தாக்கம் ஏன் ஏற்படவில்லை என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார்.

தமிழகத்தில், கொளத்தூர் தொகுதியில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்திருந்தும், ஒரு முதலமைச்சர் அங்குள்ள அனைத்துச் சுற்றுக்களிலும் தோல்வியடைவது EVM முறைகேடு இல்லாமல் சாத்தியமில்லை என அடித்துக்கூறும் அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, பாஜகவுக்கு தலைவலியாக கருதப்படும் முன்னணி அமைச்சர்கள் குறிவைத்து வீழ்த்தப்பட்டது எப்படி? என்ற கேள்வியை எழுப்புகிறார். நடிகர் விஜய் அலை என்றால், தமிழ்நாடெங்கிலும் ஒரே மாதிரியல்லவா வீசியிருக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்புகிறார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மேலும், தமிழகத்தில் பாஜகவுக்கு நம்பகமான  சாதகமான சக்திகளாக அறியப்படும் சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுகவின் பெருந்தலைகள் மட்டும் இந்த அலையிலிருந்து எப்படி தப்பியிருக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்புகிறார். இது இயற்கையான அலை அல்ல, உருவாக்கப்பட்ட ஒரு முடிவு என்பது அவரது அழுத்தமான வாதமாக அமைந்திருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், மே.வங்கத்தில் மம்தாபானர்ஜி, கேரளத்தில் பிரணாய் விஜய் ஆகியோர் குறிவைத்து வீழ்த்தப்பட்டது எப்படி என்ற கேள்வியையும் அவர் முன்வைக்கிறார்.

இதுபோன்ற ஐயப்பாடு இப்போது இல்லை, வாக்குப்பதிவு இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்த காலத்திலிருந்தே இந்தக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டுகிறார். தன்னளவில் தானும் தொடர்ந்து இதே கருத்தை வலியுறுத்தி வருவதாவும் ஆனாலும், அவை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடுகிறார்.

நிறைவாக, இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு “பொம்மை ஆட்சியை” (Puppet Government) உருவாக்குவதற்காகத் திட்டமிடப்பட்டது என்றும், 2029-ல் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தைக் கொண்டுவரும் திட்டத்தின் தொடக்கம்தான் இதுவென்றும் ஆணித்தரமாக குறிப்பிடுகிறார், பொன்ராஜ்.

சுருங்க சொன்னால், இது மக்கள் அளித்த தீர்ப்பு அல்ல, அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் EVM இயந்திரங்கள் மூலம் உருவாக்கப்பட்ட “கலை” (Artificially created result) என்பதுதான் பொன்ராஜின் மையமான குற்றச்சாட்டாக அமைந்திருக்கிறது.

இவையெல்லாம், ஆதாரமில்லாத அனுமானங்கள். தோல்வியை சகித்துக்கொள்ள முடியாத மனநிலையின் பிதற்றல்கள் என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில், இப்படி ஒரு சந்தேகம் எப்போது எழுந்ததோ, அப்போதே அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் தேர்தல் ஆணையத்திடம் இருக்கிறது. ஆனாலும், குறைந்தபட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முடிவுகளும், VVPAT சீட்டுகளின் முடிவுகளும் ஒன்றாக இருக்கிறதா என்பதை 100% எண்ணிப் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து தேர்தல் ஆணையம் தவிர்த்து வருவதிலிருந்தே இந்த சந்தேகம் மேலும் வலுப்பெறவே செய்கிறது.

தமிழகத்தில் குறைந்தபட்சம், ஸ்டாலின் தோல்வியை தழுவிய கொளத்தூர் தொகுதியிலோ அல்லது த.வெ.க. தலைவர் விஜய் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றிலோ VVPAT சீட்டுகளின் எண்ணிக்கையை சரிபார்த்தால் இந்த சந்தேகம் முற்றுப்பெற்றுவிடும். நாற்பது நாட்களுக்குள் VVPAT சீட்டுகள் தானாக அழிந்துவிடும் என்ற நிலையில், அதற்குள்ளாக இந்த சந்தேகத்தை தேர்தல் ஆணையத்தின் உதவியோடு தீர்த்து வைப்பாரா நடிகரும் தனிப்பெரும் கட்சியாக தமிழகத்தில் வென்றிருக்கும் த.வெ.க.வின் தலைவருமான ஜோசப் விஜய்?

–              அங்குசம் தேர்தல் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.