பால் விலை லிட்டருக்கு ₹44 அறிவிப்பு ! விவசாயிகள் சங்கம் வரவேற்பு !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழக முதல்வர் அவர்கள் கடந்த 19 .8 .2026 அன்று சட்டமன்றத்தில் 110 விதியின் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் ஒன்றும் ஊக்கத்தொகை இரண்டும் கூடுதலாக அறிவித்து 41 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள்களுக்கு கடும் அதிர்ப்த்தியை ஏற்படுத்தியது அதன் காரணமாக கடந்த  கடந்த 24-08-2026 அன்று பால் நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையான ரூபாய் 44 உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருகிறது  என்று அறிவிப்பினை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்ததின் அடிப்படையில் இன்றைக்கு சட்டமன்றத்தில் பாலுக்கு ரூபாய் விட்ட ஒன்னுக்கு ரூபாய் 44 வழங்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்று நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

விலை உயர்வு அறிவிப்பில் ரூபாய் ஒன்று சங்கம் மூலமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பும் அதேபோல் கொழுப்பு சத்து 4.3 சதவீதம் மற்றும் இதர சத்து 8.2 சதவீதம் அடிப்படையில் எடுக்க வேண்டும் என்கின்ற அறிவிப்பும் பால் உற்பத்தியாளர்களுக்கு பாதகமாக இருக்கும். சங்கத்தின் நிர்வாக செலவிற்க்கென வழங்கப்படும் தொகை ரூ 1.25 ல் 1 ரூபாய் பால் விலை உயர்வுக்கு கொடுத்து விட்டால் 25 பைசாவை  கொண்டு சங்கத்தை எப்படி நிர்வாகம் செய்ய  முடியும் எனவே உயர்த்தப்பட்ட ரூபாய் முழுவதையும்  அரசே ஆவின் மூலம் வழங்க ஆவன செய்ய வேண்டும்.

அதேபோல் கால்நடை மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் அளவிற்கு தீவனங்கள் கொடுத்தும் கொழுப்பு சத்து 4.3 சதவீதம்  இதர சத்து 8.2சதவீதம் என்பது பெரும்பாலான பசு மாடுகளுக்கு கிடைப்பது இல்லை. இதனால் அரசு அறிவித்துள்ள பால் விலை உயர்வு   பெரும்பாலான பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைப்பதில்லை. எனவே அரசு உரிய பரிசீலனை செய்து சங்கங்களில்கொழுப்பு சத்து 3.8 சதவீதம் இதர சத்து 7.7 சதவீதம் என்ற அடிப்படையில் பால் கொள்முதல் இருக்க வேண்டும் என்ற பால்  உற்பத்தியாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் பால் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

       

அயிலை சிவசூரியன் , மாவட்டச் செயலாளர்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,

திருச்சிராப்பள்ளிமாவட்டம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.