சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்த்து !

0

சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்த்து !

கெளரவ உறுப்பினருக்கு மரியாதை! 69 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் கெளரவ உறுப்பினராக இருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன். இந்திய சினிமாவின் பெருமிதம் மிக்க கலைஞன், தமிழ் சினிமாவின் தகைசால் கலைஞன், கலைஞானி கமல்ஹாசனுக்கு  (நவ.07) 69–ஆவது பிறந்த நாள்.

பிறந்த நாளை முன்னிட்டு நடந்த பத்திரிக்கையாளர்களை பிரத்யேகமாக சந்தித்து மகிழ்ந்தார் கலைஞானி கமல். அப்போது கமலின் வயது போல, அவரின் பெருமை போல, பெருமையும் பாரம்பரியமும் கொண்ட சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து பெருமிதம் அடைந்தது சங்கம். இந்த பூரிப்பான நிகழ்வில் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.பாலேஸ்வர், செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திகேயன், பொருளாளர் ஏ.மரியசேவியர் ஜாஸ்பெல், செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ் ஆகியோர் பங்கு பெற்றனர். –

மதுரை மாறன்

Leave A Reply

Your email address will not be published.