₹1 கோடி நிலத்தை மீட்டுத் தாருங்கள்! SP முதல் கலெக்டர் வரை…
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த பழனியம்மாள், கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டியில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் தனது மூன்று ஏக்கர் 60 சென்ட் நிலப் பத்திரத்தை அடமானம் வைத்து இரண்டு லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகக் கூறுகிறார்.
மாதம் 12 ஆயிரம் ரூபாய் வீதம் 24 மாதங்கள் தவணை செலுத்திய பின்னரும், நிலப் பத்திரத்தைத் திருப்பித் தராமல் துன்புறுத்துவதாகப் புகார் தெரிவித்துள்ளார். மேலும், சாதியைக் குறிப்பிட்டு அவதூறாகப் பேசுவதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறியுள்ளார். எஸ்.பி., ஐ.ஜி., ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் குற்றம்சாட்டும் அவர், தனது நிலத்தை மீட்டுத் தரவும், குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்கவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
₹1 கோடி நிலத்தை மீட்டுத் தாருங்கள்! SP, IG, கலெக்டர் அலுவலகத்தில் மனு! இன்னும் நடவடிக்கை இல்லையா?
முழுமையான வீடியோவை காண
Comments are closed, but trackbacks and pingbacks are open.