ஏப்ரல் 20-இல் சூப்பர் த்ரில்லர் பைண்டர் ரிலீஸ் !

செய்யாத குற்றத்திற்காக சிறைக்குச் செல்லும் சார்லி தன் குடும்பத்தோடு இணையத் துடிக்கிறார். இந்த வழக்கை கையாளும் நாயகன் குற்றத்தின் பின்னணியை எப்படி உடைத்து சார்லியை காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த ஃபைண்டர்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஏப்ரல் 20-ல் சூப்பர் த்ரில்லர் பைண்டர் ரிலீஸ் !

Arabi Production  சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம்  தயாரிக்க,   நடிகர் சார்லி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.  செய்யாத குற்றத்திற்காக சிறைக்குச் செல்லும் சார்லி தன் குடும்பத்தோடு இணையத் துடிக்கிறார். இந்த வழக்கை கையாளும் நாயகன் குற்றத்தின் பின்னணியை எப்படி உடைத்து சார்லியை காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த ஃபைண்டர்.

Srirangam MLA palaniyandi birthday

செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டுத் தொகையையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு  பெற்றுத்தரும் நிறுவனத்தை பற்றிய உண்மைக் கதையின் அடிப்படையில்,  இப்படத்தின் திரைக்கதை  அமைக்கப்பட்டுள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

பரபரப்பான சூப்பர் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்குவதோடு,  இப்படத்தில் முக்கியமான வேடத்திலும் நடித்துள்ளார்.  நடிகர் சார்லியுடன்செண்ட்ராயன், கோபிநாத் சங்கர், நடிகை தாரணி மற்றும் பிரானா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள  பகுதிகளில்  இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

Viyan Ventures சார்பில் இயக்குநர்  வினோத் ராஜேந்திரனே இப்படத்தை வெளியிடுகிறார். வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

தொழில்நுட்பக் குழு:

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

தயாரிப்பு நிறுவனம் – Arabi production  & Viyan ventures

தயாரிப்பாளர்கள் – ரஜீஃப்  சுப்பிரமணியம் &  வினோத் ராஜேந்திரன்

ஒளிப்பதிவு – பாபு ஆண்டனி

எடிட்டர் – தமிழ்க்குமரன்

கலை இயக்கம் – அஜய் சம்பந்தம்

இசை – சூர்ய பிரசாத்

மக்கள் தொடர்பு – A ராஜா.

மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.