அங்குசம் பார்வையில் ‘கோந்தல்’

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

மலையாள சினிமாக்கள் பலவற்றை நேரடியாக மலையாளத்திலும் தமிழில் டப் செய்யப்பட்டும் பார்த்துள்ளோம். அதே போல் தெலுங்கு, கன்னட சினிமாக்களின் தமிழ் வெர்ஷனையும் பார்த்துள்ளோம். ஒன்றிரண்டு இந்தி சினிமாக்களையும் பார்த்துள்ளோம். முதல்முறையாக மராத்தி மொழி சினிமாவான இந்த ‘கோந்தல்’ படத்தைப் பார்க்கும் வாய்ப்பு, அதுவும்  ஏஐ டெக்னாலஜி உதவியுடன்  நேர்த்தியான உதட்டசைவுடன் தமிழில் மராத்தி நடிகர்கள் பேசுவதைக் கேட்பதே ஆச்சர்யமாக இருந்தது. அதைவிட பேரானந்தம், நம்ம தெக்கத்தி ஸ்லாங்கில் கேட்பது.

இந்த ஆண்டு நடைபெறப் போகும் 99-ஆவது ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் சிறந்த சர்வதேச சினிமா கேட்டகிரியில், அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாலும் இப்படத்திற்கு நம்ம இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பதாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் பண்ணியிருக்கார் படத்தின் தயாரிப்பாளரும் டைரக்டருமான சந்தோஷ் தவாக்கர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

Gondhal Review: More Admirable Than Impressive - Rediff.com moviesமகாராஷ்டிரா மாநில மக்களின் தாய் மொழியான மராத்தி பேசும் மக்களின் ஒரு கிராமத்தில் நடக்கும் தெருக்கூத்து கலையுடன் கூடிய திருமண சடங்குக்குப் பெயர் தான் ‘கோந்தல்’.

‘கோந்தல்’ கூத்தில் பெண் வேடமிட்டு ஆடும் கலைஞன் அனுஜ்பிரபுவைக் காதலிக்கிறாள் இஷிதா தேஷ்முக். ஆனால் இவளது பெற்றோரோ, வேறு ஊரைச் சேர்ந்த யோகேஷ் சோஹானிக்குத் திருமணம் செய்துவிடுகிறார்கள். கல்யாண சடங்குகள் நடக்கும் அந்த இரவில் முன்பொருமுறை இஷிதாவைக் கல்யாணம் பண்ண விரும்பி, அது நடக்காமல் போன சோகத்தில் இருக்கும் மைனர் நிஷத் போயிர், அங்கு வருகிறான். மீண்டும் இஷிதாவுக்கு நூல் விடுகிறான். ”எனக்கு வேறொருவனுடன் கல்யாணம் ஆகிருச்சு, அதனால அவனை நீ போட்டுத் தள்ளிரு, முண்டச்சியான என்னை யாரும் கல்யாணம் பண்ண வரமாட்டான். அதனால் நீயே என்னைக் கல்யாணம் பண்ணிக்க” என வெறி ஏற்றிவிடுகிறாள்.

அதே கோந்தல் கூத்தில் ஆட வந்திருக்கும் அனுஜ் பிரபுவைப் பார்த்ததும் மனசு உற்சாகமாகி, “என் புருஷனைப் போட்டுத்தள்ளிட்டு என்னைக் கூட்டிட்டுப் போ” என உசுப்பேத்துகிறாள். இஷிதா தேஷ்முக் யாருக்குக் கிடைத்தாள்? இதன் திடுக்கிடும் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘கோந்தல்’.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

1980-களில் கதை நடக்கிறது. முழுப்படமும் இரவில், அதுவும் அரிகேன் லைட், தீப்பந்த வெளிச்சத்தில், ஒரே லொக்கேஷனில்.  இந்த லைட்டிங்கிலும்  படத்தின் முதல் இருபத்தைந்து நிமிடங்களை ஒரே ஷாட்டில் எடுத்து பிரமிக்க வைத்துள்ளார் டைரக்டர் சந்தோஷ் தவாக்கர்.  படத்தின் எல்லா கேரக்டர்கள், அவர்களின் குணாதிசியங்கள், மத சடங்குகள், கல்யாண சம்பிரதாயங்கள் என எல்லாத்தையும் இருபத்தைந்து நிமிட சிங்கிள் ஷாட்டில் கொண்டு வருவது லேசுப்பட்ட காரியமல்ல. இந்த கஷ்டமான காரியத்தை சாதித்துக் காட்டியிருக்கிறார்கள் டைரக்டர் சந்தோஷ் தவாக்கரும் கேமராமேன் அமலேந்து செளத்ரியும். க்ளைமாக்ஸில் தான் பொழுது விடிகிறது. அப்போது தான் இரவில் நடந்த மூன்று கொலைகள் வெளிச்சத்தில் தெரிகிறது.

ஆஸ்கருக்குத் தேர்வாகியுள்ள இளையராஜாவின் கோந்தல் பட ரிலீஸ்: 6 நகரங்களில் சிறப்புக் காட்சிகள்! | India's Oscar entry 'Gondhal' sets previews in six cities ahead of six ...கதைக்களமும் சரி, இதில் நடித்திருக்கும் மராத்தி நடிகர்-நடிகைகளும் சரி, நமக்கு முற்றிலும் அன்னியமாகத் தெரிந்தாலும் நம்ம மனசுக்கு நெருக்கமாக்கி ரசிக்க வைத்திருப்பது சாட்சாத் இசைஞானி இளையராஜா தான். இவரைவிட்டால் இந்தப் படத்திற்கு இசையமைக்க இந்தியாவில் மியூசிக் டைரக்டர்களே இல்லை என்பது டைரக்டர் சந்தோஷ் தவாக்கருக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. அதனால் தான் இசைஞானியை நம்பி வந்துள்ளார். இசைஞானியை நம்பினோர் கைவிடப்படார்.

படம் ஆரம்பித்து எட்டு நிமிடங்கள் வரை மெல்லிய சத்தத்துடன் இசைக்கும் பின்னணி இசை, போகப்போக வேகம் எடுத்து, கடவுள் சிவனைப் பற்றி கூத்துக் கலைஞர்கள் பாடும் போது ஆங்காரமாகி, தனது மாஜி காதலன் அனுஜ்பிரபுவை இஷிதா தேஷ்முக் பார்த்ததும் மகிழ்ச்சி ஆர்ப்பரித்து என இசைஞானியின் ராஜ்ஜியத்தால் இந்த ‘கோந்தல்’ இருட்டிலும் ரொம்ப பிரகாசிக்கிறது.

அங்குசம் பார்வையில் ‘கோந்தல்’ 60/100

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.