திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் !
செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரி விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கல்லூரியின் சமூதாயக்கூடத்தில் நடைபெற்றது கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச அவர்களின் ஆலோசனையின்படி இந்நிகழ்ச்சிக்கு இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச தனது தொடக்கவுரையில் நிலைத்த நிடித்த இலக்கு பற்றியும் செப்பர்டு பணி செய்யும் கிராமங்களில் மாணாக்கர்கள் அரசுநலத் திட்டங்களை எவ்வாறு கிராமங்களுக்கு எடுத்துச்செல்கிறார்கள் என்பதனை எடுத்துக் கூறினார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமூக பாதுகாப்புத்திட்டம் தொழிலாளர்; உதவி ஆணையர் அலுவலத்தின் கண்காணிப்பாளர் நவபாரதி சமூக பாதுகாப்புத்திட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பு விமலா திருச்சிராப்பள்ளி; பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மையத்தின் பாலின நிபுணர்கள் தனஸ்ரீ சிவாஜி மற்றும் அருள் ராபர்ட் ஆகியோர் தமது கருத்துரையில் அரசின் அனைத்து சமூக நலத்திட்டங்களை விளக்காட்சிகள் வழியாக தங்களது கருத்துரையில் எடுத்துரைத்தார்கள்.
மேலும், மாணாக்கர்களின் கேள்விகளுக்கும் பதிலாளித்தார்கள் மேலும் மாணவர்கள் கூறும் போது இவ்விழிப்புணர்வுக்கூட்டம் அரசின் பல்வேறு திட்டங்களை பற்றி தெரிந்து கொண்டது மட்டுமல்லாமல் அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என்று கூறினார்கள்.
இளநிலை ஒருங்கிணைப்பாளர் ஜோசப் கிறிஸ்து ராஜா வந்தவர்களை வரவேற்றார். யசோதை நன்றியுரையுரை கூறினார். விரிவாக்கத்துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் இந்நிகழ்ச்சியை தொகுப்பு வழங்கினார். தொழில் நுட்ப உதவிகளை அமலேஸ்வரன் செய்திருந்தார்
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இரண்டாம் ஆண்டு மக்கள் ஒருங்கிணைப்பு மற்றும் அரசு நலத்திட்டங்கள் விழிப்புணர்வு குழுவில் உள்ள பணிமுறை 1 மற்றம் 2 ன் மாணாக்கர்கள் கலந்து கொண்டார்கள். அரசு நலத்திட்டங்கள் குறித்த தகவல் படிவங்கள் வழங்கப்பட்டன.
— அங்குசம் செய்திப்பிரிவு.