கோவில்பட்டி – தமிழக சபாநாயகர் வருகை எதிர்த்து கருப்பு கொடி கட்டிய கிராம மக்கள்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கோவில்பட்டியில் தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வருகை தரும் தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதா ஜீவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி கட்டிய கிராம மக்கள்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் உள்ள தினசரி சந்தைகளுக்கு எதிராக தெற்கு திட்டங்குளம் பகுதியில் தனியார் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாகவும், அதற்கு பெறப்பட்ட நிலத்திலும் முறைகேடுகள் இருப்பதாக உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் வழக்கும் நிலுவையில் உள்ளது.

இனிய ரமலான் வாழ்த்துகள்

இந்த சூழ்நிலையில் அந்த தனியார் தினசரி சந்தையில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு இன்று கால்கோள் விழா நடைபெறவுள்ளது. இதில் தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

முறைகோடுகள் அதிகமாக உள்ள தனியார் தினசரி சந்தை நிகழ்வில் சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொள்ள கூடாது என்று தெற்கு திட்டங்குளம் மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

இந்நிலையில் நிகழ்விற்கு சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொள்ள இருப்பதாக தனியார் சந்தை நிர்வாகிகள் ஆங்கங்கே விளம்பர போர்டுகள் வைத்துள்ளனர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதனை கண்டித்தும் சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பங்கேற்பதை எதிர்ப்பு தெரிவித்து தெற்கு திட்டங்குளத்தில் மெயின் சாலை முழுவதும் மக்கள் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

மேலும் தமிழ் பேரரசு கட்சியினர் சபாநாயகர் மற்றும் அமைச்சர் வரும் பொழுது கருப்பு கொடி காட்ட இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

—  மணிபாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.