அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பணப் பிரச்சினையில் பாட்டி பலி ! பேரனுக்கு ஆயுள் தண்டனை !

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சிராப்பள்ளி மாவட்டம். துறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்காட்டுப்பட்டி, காரைமேடு பகுதியைச்சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான முரளிராஜா 43/24 (HS.No.03/24), த.பெ. பத்மநாபன் என்பவர் கடந்த 2016 ம் ஆண்டு பணப் பிரச்சினை காரணமாக அவரது தந்தையை கொலை செய்தார். ஆனால் முறையான ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர். மேற்படி முரளிராஜா என்பவர் அவரது பாட்டியான நாகலட்சுமி 94/24, க.பெ.ராஜகோபால் என்பவரிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு சண்டையிட்டு வந்துள்ளார்.

முரளிராஜா
முரளிராஜா

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

அதன்படி, மீண்டும் கடந்த 29.09.2024-ம் தேதி முரளிராஜா நாகலெட்சுமியிடம் பணம் கேட்டதாகவும், அதற்கு நாகலெட்சுமி பணம் இல்லை என்று கூறியதால் முரளிராஜா நாகலெட்சுமியிடம் பிரச்சனை செய்தும், அவரை அறையில் கட்டிவைத்து இரும்பு ரெஞ்ச் ஸ்பேனரால் நாகலெட்சுமியை தலையில் தாக்கி கொலை செய்தார். மேற்படி சம்பவம் தொடர்பாக மேற்படி முரளிராஜாவின் தாயார் பானுமதி 70/24, க.பெ.பத்மநாபன், காரைமேடு, செங்காட்டுப்பட்டி, துறையூர் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் துறையூர் காவல் நிலைய குற்ற எண். 261/24, ச.பி. 296(b), 127(2), 103(1) BNS -ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

திருச்சி எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம்
திருச்சி எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம்

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக  சவரிமுத்து ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (30.04.2026) திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் அவர்கள் எதிரி முரளிராஜா 43/24, த.பெ. பத்மநாபன் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய். 2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில் இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த துறையூர் காவல் நிலைய நீதிமன்ற பெண் தலைமைக் காவலர் எழிலரசி என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம், இகாப  வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.