அங்குசம் பார்வையில் “ஹர்காரா”

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் பார்வையில் “ஹர்காரா”

தயாரிப்பு : என்.ராமு சரவணன் பொன்ராஜ், தமிழக ரிலீஸ்: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். டைரக்ஷன் : ராம் அருள் காஸ்ட்ரோ. நடிகர் – நடிகைகள்: காளி வெங்கட் ராம் அருண்காஸ்ட்ரோ, கௌதமி சௌத்தி, பிச்சைக்காரன்’ மூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். டெக்னீஷியன்ஸ் : ஒளிப்பதிவு: பிலிப் ஆர். சுந்தர் இசை : ராம் சங்கர், ஆர்ட்: வி.ஆர்.கே.ரமேஷ், எடிட்டிங்: டேனியல் சார்லஸ். பி.ஆர்.ஓ. சதீஷ் [AIM] ஹர்காரா என்னால் தபால்காரர் [போஸ்ட்மேன்] என்று தான் அர்த்தம். படத்தின் டைட்டிதுக்கு கீழே India’s First Man’ என்ற டேக் லைன் இருந்ததால் நாமும் பெரிய எகிர்பார்ப்புடன் தியேட்டருக்குள் போனோம். தேனி மாவட்டத்தில் உள்ள போக்கு வரத்து வசதியே இல்லாத, செல் போன் டவர் கவரேஜும் சரியாகக் கிடைக்காத ஒரு மலைகிராமத்தில் போஸ்ட் மேனாக இருக்கிறார் காளி வெங்கட், அவரது கனவில் கருப்பு – வெள்ளையில் வந்து போகிறது ஒரு உருவம். ஊர் மக்களும் அப்பாவிகள் இம்சைவாசிகள். பக்கத்தில் இருக்கும் எடமலை என்ற இன்னொரு மலை கிராமத்தில் வசிக்கும் மாரியம்மாள் என்ற பெண்ணுக்கு அரசாங்க தபால் ஒன்று வருகிறது. அதை எடுத்துக் கொண்டு போகும் போது, பிச்சைக்காரன் மூர்த்தியை சந்திக்கிறார், அவரும் எடமலைக்கு வழிகாட்டிக் கொண்டே 150 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைக்காரர்களிடம் ‘ஹர்காரா’ வாக இருந்த மாதேஸ்வரன் ( ராம் அருள் காஸ்ட்ரோ அகையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

அதுக்குப் பிறகு தான் நமக்கு இம்சை ஆரம்பிக்கிறது, எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிறது. போஸ்ட் மேனின் வாழ்க்கையை சினிமாவில் காட்டியதற்கு வாழ்த்துக்கள் ராம் அருண் காஸ்ட்ரோவுக்கு. ஆனா அதைச் சொன்னவிதம் காட்சிப்படுத்திய விதம் இது எதுவுமே ரசனைக்குரியதாக இல்லை ப்ரோ, வெள்ளைக்காரன் கொள்ளையடிக்கத் கான் வந்தான் என்பதை கொள்ளைக் காலத்திலும் இந்த சொல்லிக்கிட்டிருந்தா சரிப்படாது சகோதரா. அப்படி சரிப்படாதகற்கு சமீபத்திய சாட்சிதான் கௌதம் கார்த்திக் நடித்த 1947 ஆகஸ்ட்.14 என்ற படம். ராம் காஸ்ட்ரோவின் சில வித்கைகளைக் காட்டுவதற்கு மட்டுமே 150 ஆண்டுகளுக்கு முந்தைய ஃப்ளாஷ் பேக் பயன்பட்டிருக்கிறது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதிலும் அந்த கங்கானி வில்லன் வரும் சீனெல்லாம் ரொம்ப ஓவர். கௌதமி சௌத்ரின்னி ஒரு ஹீரோயின் இருக்கார் அவ்வளவு தான். மற்ற வர்களும் அப்படி யே. சரி, கான்ட் சிச்சுவேஷன்’ கதையிலாவது சுவாரஸ்யம் இருக் கும்னு பார்த்தா அலுவும் ஏனோ தானா, எனக்கென்ன போனா என்ற ரேஞ்சுல தான் இருக்கு. ஆன்லைனில் ஆர்டர் பண்ற அளவுக்கு அறிவிருக்குற அந்த கிராம மக்கள்ட்ட காளிவெங்கட் ஏஞ்சாமி கைநாட்டு வாங்குறாரு மாரியம்மாளைக் தேடி மலை மலையா எறிக்கிட்டுக்காரே காளி வெங்கட், க்ளைமாச்சை ‘நச்’சுன்னு முடிப்பாய்ங்கன்னு உட்கார்ந்துக் கிட்டிருந்தா அட போங்கப்பா… ஆள விடுங்கப்பா … ன்னு ஆகிருச்சு. இந்தப் படத்துல ரொம்ப ரொம்ப பிடிச்சமேட்டர் என்னன்னா கேமரா மேன் பிலிப் ஆர், சுந்தரின் கடின உழைப்பு தான். பல லட்சம் செலவழிச்சாலும் இந்த மாதிரியான லொக்கேஷன்களை நம்மால் நேரில் பார்க்க முடியாது. அதை பெல்லாம் தனது கேமரா மூலம் நம்மை பிரமிக்க வைத்துவிட்டார் காட்டி சுந்தர்.

ஆமா… “கணம்“, “ஃபர்ஹானா“ என தொடர்ந்து ஃப்ளாப் படங்களைத் தயாரித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ், ஆர். பிரபு, இந்த ஹர்காரா’ வை வாங்கி இ ஏன் ரீலீஸ் பண்றாரு? எதாவது இருக்கும்.

-மதுரைமாறன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.