அங்குசம் பார்வையில் “ஹர்காரா”
அங்குசம் பார்வையில் “ஹர்காரா”
தயாரிப்பு : என்.ராமு சரவணன் பொன்ராஜ், தமிழக ரிலீஸ்: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். டைரக்ஷன் : ராம் அருள் காஸ்ட்ரோ. நடிகர் – நடிகைகள்: காளி வெங்கட் ராம் அருண்காஸ்ட்ரோ, கௌதமி சௌத்தி, பிச்சைக்காரன்’ மூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். டெக்னீஷியன்ஸ் : ஒளிப்பதிவு: பிலிப் ஆர். சுந்தர் இசை : ராம் சங்கர், ஆர்ட்: வி.ஆர்.கே.ரமேஷ், எடிட்டிங்: டேனியல் சார்லஸ். பி.ஆர்.ஓ. சதீஷ் [AIM] ஹர்காரா என்னால் தபால்காரர் [போஸ்ட்மேன்] என்று தான் அர்த்தம். படத்தின் டைட்டிதுக்கு கீழே India’s First Man’ என்ற டேக் லைன் இருந்ததால் நாமும் பெரிய எகிர்பார்ப்புடன் தியேட்டருக்குள் போனோம். தேனி மாவட்டத்தில் உள்ள போக்கு வரத்து வசதியே இல்லாத, செல் போன் டவர் கவரேஜும் சரியாகக் கிடைக்காத ஒரு மலைகிராமத்தில் போஸ்ட் மேனாக இருக்கிறார் காளி வெங்கட், அவரது கனவில் கருப்பு – வெள்ளையில் வந்து போகிறது ஒரு உருவம். ஊர் மக்களும் அப்பாவிகள் இம்சைவாசிகள். பக்கத்தில் இருக்கும் எடமலை என்ற இன்னொரு மலை கிராமத்தில் வசிக்கும் மாரியம்மாள் என்ற பெண்ணுக்கு அரசாங்க தபால் ஒன்று வருகிறது. அதை எடுத்துக் கொண்டு போகும் போது, பிச்சைக்காரன் மூர்த்தியை சந்திக்கிறார், அவரும் எடமலைக்கு வழிகாட்டிக் கொண்டே 150 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைக்காரர்களிடம் ‘ஹர்காரா’ வாக இருந்த மாதேஸ்வரன் ( ராம் அருள் காஸ்ட்ரோ அகையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.
ஆமா… “கணம்“, “ஃபர்ஹானா“ என தொடர்ந்து ஃப்ளாப் படங்களைத் தயாரித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ், ஆர். பிரபு, இந்த ஹர்காரா’ வை வாங்கி இ ஏன் ரீலீஸ் பண்றாரு? எதாவது இருக்கும்.