அவனும் அவளும் – தொடர் -10

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மோகனோட போனை எடுத்து பார்த்த மீனாவுக்கு பயங்கர ஷாக். மொபைல் கேலரியில் இருந்த போட்டோ ஒவ்வொண்ணும் அவனோட லட்சணத்தை அவ்வளவு தெளிவா காட்டுச்சி. பிரெண்ட்ஸ்ஸோட சேர்ந்து கையில சரக்கு பாட்டிலை ஏந்தியிருக்கிற மாதிரியான போட்டோ, நாலைஞ்சு பொண்ணுங்களுக்கு மத்தியில நெருக்கமாக நின்னுக்கிட்டு இருக்குற மாதிரியான போட்டோ, தனித்தனியா நிறைய பொண்ணுங்களோட எடுத்துக்கிட்ட செல்ஃபின்னு மொபைல் கேலரி முழுக்க மஜா போட்டோஸ் தான். சரி, இதெல்லாம் இந்தக் காலத்துல சகஜம் தானேன்னு மனசை தேத்திக்கிட்டு டச் போனை ஒரு இழு இழுத்து அடுத்த போட்டோ என்னன்னு பார்த்த மீனா அப்பிடியே ஒரு நிமிஷம் நிலைகுலைஞ்சு போனா!…

இதுவரைக்கும் வந்த போட்டோ எல்லாம் ‘யு’ சர்டிபிகேட் ரகம்னா, அடுத்தடுத்து வந்ததெல்லாம் ‘ஏ’ சர்டிபிகேட் ரகம். தன்னோட புருஷன் வேறொருத்தியோட பெட்ல நியூடா கூத்தடிச்சிக்கிட்டு இருக்குற மாதிரியான போட்டோவை பார்த்த மீனாவுக்கு கண்ணுல தண்ணி காவிரியா பெருக்கெடுக்குது. வரிசையா வந்த எல்லா போட்டோவுலயும் அதே பொண்ணோட பல ஆங்கிள்ல மோகன் பல்லை காட்டிக்கிட்டு படுத்துக்கிடந்ததை பார்க்கையில் மீனாவுக்கு தலையில இருந்து கால் வரைக்கும் பத்திக்கிட்டு எரிய ஆரம்பிக்குது.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

பதறியடிச்சிக்கிட்டு மாடியில இருந்து கீழ எறங்குனவ, படுத்துக் கெடக்குற மோகன் முன்னாடி போய் இடுப்புல கையை வச்சிக்கிட்டு காளியாத்தா மாதிரி ஆக்ரோஷமா நிக்குறா…

“என்ன இது?”

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

“ஏய்!… நீ எதுக்குடி என் ஃபோனை எடுத்த?”

“தாலி கட்டுன பொண்டாட்டி என்னையை இங்க தவிக்கவிட்டுட்டு, நீ வேற ஒருத்தியோட கூத்தடிச்சிக்கிட்டு இருக்க!… உனக்கு அசிங்கமாயில்லை!”…

“ஏ மீனா!… இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி நடந்தது. இப்போ நான் அப்படியெல்லாம் இல்ல. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ!”…

“அப்படியா!… இந்த போட்டோவை கொஞ்சம் பாருங்கன்னு”ன்னு ஒரு போட்டோவை எடுத்து மீனா மோகன்கிட்ட காட்டுறா… அந்த போட்டோவுல, மோகனும் ஒருத்தியும் கட்டிப்புடிச்சிக்கு கெடக்க, அவங்களுக்கு பின்னாடி உள்ள காலாண்டர் காட்டிக் கொடுத்துடுச்சி, இந்த கூத்தெல்லாம் போன மாசம் தான் நடந்திருக்குன்னு…
‘வசமா மாட்டிக்கிட்டோமே’ன்னு கொஞ்சம் கூட பதற்றப்படாத மோகன் குரலை உசத்தி கத்துறான்.

“ஏய்… இப்ப என்னங்குற. ஊர்ல எங்கயும் நடக்காத தப்பையா நான் பண்ணிட்டேன். இன்னும் சொல்லப்போனா உனக்கு முன்னாடியே எனக்கும் அவளுக்கும் பழக்கம். இப்போ கல்யாணம் ஆச்சுங்கிறதுக்காக நான் உனக்காக அவளை விட்டுக்கொடுக்க முடியாது”ன்னு தன்னோட தப்பை சத்தம் போட்டு மறைக்கிறான்.

இதைக்கேட்டு ஆக்ரோஷமான மீனா, அடிக்கிறா போனை ஆத்தாக்காரிக்கு, “இனிமேல் நான் இந்த ஆளு கூட குடும்பம் நடத்த மாட்டேன். ஏன்?… ஏது?…ன்னு கேக்காத! பஸ் ஏறப்போறேன். வீட்டுல வந்து விஷய்த்தை சொல்றேன்னு” அழுதுக்கிட்டே போனை வச்சிட்டு சூட்கேஸ்ல துணியை எடுத்து துணிக்கிறா…

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பெங்களூர்ல பஸ் ஏறுனவ நேரா தேனிக்கு தான் டிக்கெட் எடுப்பாங்குற நம்பிக்கையில மோகன் சிகரெட்டை பத்த வச்சி ஓசோனை ஓட்ட போடுறான். எப்படியும் 10 -15 நாள்ல வீட்டுல புத்தி மதி சொல்லி பொண்டாட்டியை அனுப்பி வச்சிடுவாங்க, அவளும் வந்துடுவாங்குற நம்பிக்கையில இருந்தவனுக்கு போஸ்ட்ல டைவர்ஸ் கேட்டு லட்டர் வருது.

டைவர்ஸ் நோட்டீஸை படிச்சவன், ‘இவ இல்லைன்னா, இந்த பெங்களூர்ல எனக்கு வேற எந்த பொண்டாட்டியும் கெடைக்க மாட்டாளான்னு’ ஃபிரிட்ஜ்ல இருந்த ‘பிளாக் பைபர்ஸை’ கிளாஸ்ல ஊத்தி அதுல முழுகுறான்.

பொண்ணு வீடும், மாப்ள வீடும் கடைசியா உட்கார்ந்து பஞ்சாயத்து பேசுறாங்க. ‘இந்த பிரச்சினைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க’ங்குற மாதிரி சமத்தா உட்காந்துருக்கான் மோகன். பெருசுங்க எல்லாம் எப்படியாவது ஒடைஞ்சு போன குடும்பத்தை ஒட்டவச்சிடணுமுன்னு பூசியும் பூசாத மாதிரி பாலீஸா பேசிக்கிட்டு இருக்காங்க,

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும். கொஞ்சம் மேல வா”ன்னு பொண்டாட்டியை மொட்டை மாடிக்கு கூட்டிட்டு போறான் மோகன். சரி புருஷன் நம்ம வழிக்கு வர்றான். எப்படியாவது அவனை திருத்தி மனசுல இருக்க அழுக்கையெல்லாம் அழிச்சிட்டு வாழ்க்கையை நடத்தலாம்ங்குற யோசனையிலயே படிக்கட்டு ஏறுறா…

அவளை பேசவிடாம அவனே ஆரம்பிக்குறான். “ஏ மீனா!… நான் தப்பு பண்ணலைன்னு சொல்லலை. நான் ஆரம்பத்துல இருந்தே தண்ணி, தம்முன்னு வாழ்ந்து பழக்கப்பட்டவன். நான் பெங்களூர்க்கு வந்த புதுல எனக்கு சமீரா தான் சப்போர்ட்டா இருந்தா. என்னோட போன்ல பாத்தியே அவ தான் சமீரா. கிட்டத்தட்ட எனக்கும் அவளுக்கும் 5 வருஷ பழக்கம். லவ் எல்லாம் கிடையாது. ஆனா, அவ கூட இருக்குறது எனக்கு புடிச்சிருக்கு. நான் நல்லா சம்பாதிக்குறேன். உன்னை நல்லா பாத்துக்குறேன். ஆனா, என்னால சமீராவை விட்டுக்கொடுக்க முடியாது. நீ கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோ. அவ எந்த விதத்துலயும் உனக்கு பிரச்சினை தரமாட்டா”ன்னு கொஞ்சம் கூட மனுச நாகரீகம் இல்லாம சொல்றான்.

இது எல்லாத்தையும் பொறுமையா கேட்டுக்கிட்டு, எதுவும் பேசாம கீழ இறங்கி வந்த மீனா, பஞ்சாயத்து நடந்துக்கிட்டு இருக்க சபையில சொல்றா, “எனக்கு அவர் கூட வாழணும்னு ஆசை தான். ஆனா, அவருக்கு நான் மட்டும் போதாதாம்.

இன்னொருத்தியை வச்சிக்கிறேன்; நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோன்னு என்கிட்ட கூசாம சொல்றாரு. அப்படி நான் அவர் கூட வாழணும்னு அவசியமே இல்லை. இப்பவும் சொல்றேன். அவருக்கு பெங்களூர் போற வரைக்கும் டைம் தர்றேன். அவர் என்ன முடிவு சொல்றாரோ அது எனக்கு சம்மதம்”னு சொல்லிட்டு ரூமுக்குள்ள போய் கதவை சாத்திக்கிட்டா… என்ன பேசுறதுன்னு தெரியாம பெருசுங்க எல்லாம் மழையில நனைஞ்ச கோழி கணக்கா முழுச்சிக்கிட்டு கெடக்குங்க. யாருக்கிட்டயும் எதுவும் பேசாம மூஞ்சை தூக்கி வானத்துக்கு காட்டிக்கிட்டு கெளம்புறான் மோகன்.

அவன் திருந்துவாங்குற நம்பிக்கை இல்லை. அவன் கண்ணுலயே அது தெரியுது. இது சரிப்பட்டு வராதுடா சாமி. நீ உன் வழியைப் பாரு; நான் என் வழியைப் பாக்குறேன். பெங்களூர் போற வரைக்கும் கூட எனக்காக நீ யோசிச்சு உன்னோட நேரத்தை வீணாக்க வேணாமுன்னு’ சொல்ல மோகனுக்கு போன் அடிக்குறா மீனா…போன் பிஸியா இருக்கு. அந்த சைடுல வேற யார் பேசிக்கிட்டு இருப்பா, சமீராவே தான்!…

தொடர்ந்து பேசுவோம்…

-கிருஷ்வின்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.