அவனும் அவளும் – தொடர் – 7

0

காலையில மணி எட்டு…

‘நேத்து நைட் 11 மணிக்கு இந்த ரூமுக்குள்ள பொண்ணையும், மாப்பிளையும் அனுப்பி வச்சோம். இன்னும் வெளியவே வரலையே’ன்னு நக்கலும், கிண்டலுமா வெளிய ஒரு கூட்டம் இட்லியை பிச்சு வாயில போட்டுக்கிட்டே கலாய்ச்சிக்கிட்டு கெடக்கு…
இந்த ஃபர்ஸ்ட் நைட் ரூம் இருக்கே அதுக்குள்ள போறது ரொம்ப ஈஸி; ஆனா அந்த ரூம்ல இருந்து வெளிய வர்றது ஏதோ பத்து கொலை செஞ்சிட்டு அஞ்சாறு மாசம் பாளையங்கோட்டை ஜெயில்ல இருந்து வெளிய வர்ற மாதிரி இருக்கும்.

https://businesstrichy.com/the-royal-mahal/

அப்படியே அந்த ரூம்ல இருந்து வெளிய வந்துட்டாலும் சகஜ நிலைக்கு மாற குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது புடிக்கும். ஆனா, இந்த கணக்கு எல்லாம் அர்ஜூனுக்கு ஒர்க்கவுட் ஆகலை. ஆனா, நேத்து நைட் 3 மணிக்கு நடந்த அந்த சம்பவத்தை நினைக்கையில அர்ஜூனுக்கு வெக்கம் பிடிங்கி திங்குது. இதுக்கு இடையில வர்ஷா வேற, ‘மவனே!… ஃபர்ஸ்ட் நைட்லயேவா தூங்குற… இனிமேல் ராத்திரியான நீ எப்படி தூங்குறன்னு நான் பாக்குறேன்’ கண்ணாலயே செல்லம் கொஞ்சி மெரட்டுறா!…

காலை டிபன் முடிஞ்சிட்டு மாப்பிளை வீட்டு கோஷ்டியே கெளம்பி பொண்ணு வீட்டுக்கு மறு விருந்துக்கு போறாங்க. பொண்ணு வீட்ல அசைவத்துல உள்ள அத்தனை வெரைட்டியையும் இலையில எறக்கி மெர்சல் காட்ட, மாப்பிளை வீட்டுக்காரங்க அரண்டு போறாங்க. விருந்து முடிஞ்சதும் வெத்தலை பாக்கை இடிச்சி வாயில போட்டு மென்னு எச்சிலை துப்புறதுக்கு முன்னாடியே பொழுது இறங்கிப் போவுது.
மொட்டை மாடியில பாயை விரிச்சுப் போட்டு பெருசுங்க எல்லாம் தூக்கத்துக்கு தயாராக, பொண்ணு வீட்ல ரெண்டாவது நைட் தயாராகுது புதுசா கல்யாணம் ஆன ஜோடிக்கு.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

‘நேத்து தான் தூங்கி வழிஞ்சு அசிங்கப்பட்டுட்டோம். இன்னைக்கு பெர்பாமன்ஸ் பட்டையைக் கிளப்பணும்’னு அர்ஜூன் தயாரா இருக்கான். கதவை தெறந்து பொண்டாட்டி வந்தது தான் மிச்சம்… ‘விடிஞ்சிருச்சி எந்திரிங்க போதும்’னு கோழி கூவுற வரைக்கும் நடக்குது கட்டில்ல விளையாட்டு.

காலையில பொங்கல், கேசரி, வடை, கிச்சடின்னு சரவணபவன் கணக்காக டிபனை முடிச்சிக்கிட்டு, டாட்டா காட்டிட்டு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிளம்ப ஆரம்பிக்க வர்ஷா கண்ணுல லிட்டர் கணக்குல தண்ணி கொட்டுது. ‘அம்மா, அப்பாவை விட்டுட்டு வர மனசில்லை’ன்னு ஓ….ன்னு அழறா…. அர்ஜூன் தோளைப் புடிச்சி சமாதானம் செய்யவும் புருஷன் தான் வேணும்னு கண்ணை தொடச்சிக்கிட்டு கார்ல எறிட்டா….

அர்ஜூன் வீட்ல போய் கார் நின்னது தான் மிச்சம். காது வரைக்கும் மீசையை வச்சிருந்த பெருசு வேகமா ஓடிவந்து அர்ஜூனோட அப்பா கிட்ட, “என்னப்பா ராஜேந்திரா!… பையன் கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்தி முடிச்சிட்ட. நாளைக்கு கோயில்ல காப்பு கட்டுறோம். நாளான்னைக்கு கூத்தாயி கோயில்ல கெடா வெட்டி திருவிழா. குடும்பத்தோட வந்துடு”ன்னு சொல்லி நன்கொடை ரசீதை எடுத்து நீட்டி புது ரெண்டாயிரம் ரூவா நோட்டை வாங்கிட்டு போறாரு.

வீட்டுக்கு சொந்தக்காரங்க வரப் போகன்னு வீடு ஒரே பிஸியா கெடக்குது. எல்லாம் ஓஞ்சு கடிகாரம் மணி 9.30-ஐ காட்ட ஒவ்வொரு ஆளா தூங்க போயிடுறாங்க. வீட்ல உள்ள தனி ரூமுக்குள்ள அர்ஜூன் பெரண்டு பெரண்டு படுத்துக்கிட்டு கெடக்குறான். வர்ஷா அந்த ரூமுக்குள்ள போகையில மணி 10.15…

“ஏன் டி என்னோட பொறுமையை சோதிக்குறன்னு” வர்ஷாவை கட்டிப்புடிக்க அர்ஜீன் போறப்ப, வர்ஷா சொன்னா பாருங்க ஒரு வார்த்தை கண்ணீர் விட்டுட்டான் நம்மாளு…

“நாளைக்கு கோயில்ல காப்பு கட்றாங்களாம். அதனால, திருவிழா முடியுற வரைக்கும் ரெண்டு நாளு அத்தை கொஞ்சம் சுத்த பத்தமா இருக்க சொன்னாங்க”ன்னு வர்ஷா சொல்ல….

“நாளைக்கு தானே கோயில்ல காப்பு கட்றாங்க. நாளைக்கு தான் நாம கட்டிக்க கூடாது. வா இப்போ கட்டிக்கலாம்”னு விடாப்பிடியா அவளை கட்டி அணைச்சு காமத்தீயை பத்த வெக்குறான்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பொழுது விடியுது. ஊரே திருவிழாக் கொண்டாட்டத்துல குஜாலா இருக்குது. அர்ஜூன் மட்டும் உர்ருன்னு இருக்கான். பின்ன, கட்டுன பொண்டாட்டியை ரெண்டு நாளு தொடக்கூடாதுன்னு பிரிச்சு வச்சிட்டா கோவம் வராதா!…. அவனும் சாதாரண மனுஷன் தானே!… அவன் என்ன ஆசையை அடக்கத் தெரிஞ்ச புத்தனா!… அவன் சும்மா இருந்தாலும் அவன் உடம்புக்குள்ள உள்ள செல் எல்லாம் எந்துரிச்சு ஆட்டம் போடுது…

எப்படா திருவிழா முடியும்னு நம்மாளு பெருவிழா கொண்டாட காத்துக்கிட்டு இருக்கான். ஒருவழியா திருவிழா முடிஞ்சு போகுது. டெல்லி குளிரை கூட தாங்கிடலாம் போல, சென்னை சூட்டை தாங்கிக்க முடியலையே பய சூடாகி தவிக்குறான். இந்த நெனப்புல இருக்கையில வர்றா ‘ஏங்க….’ன்னு ஹஸ்கி வாய்ஸ்ல கூப்பிட….. “என்ன வர்ஷா”ன்னு வெக்கத்தோட கிட்ட போறான்.

“தொடாதீங்க”ங்குறா அவ,

“ஏன் இப்ப வேணாம்….. நைட் வச்சிக்கலாம்”ங்குறியாங்குறான் அர்ஜூன்…. “என்னது நைட்டா!..இன்னும் 3 நாளைக்கு நீங்க கிட்ட வரக் கூடாதுன்னு அந்த 3 நாள் சமாச்சாரத்தை சூசகமா சொல்லி….கடைக்கு போய் அதை வாங்கிட்டு வாங்க”ங்குறா….

வர்ஷா அவ அம்மா வீட்டை விட்டு வர மாட்டேன்னு அழுதா பாருங்க ஒரு அழுகை…அதெல்லாம் அழுகையா!… அர்ஜூன் அழுவுறான் பாருங்க ஒரு அழுகை… அது மனசுக்குள்ள அழுவுறதால வெளிய கேக்கலை…. கத்தி கதறுறான்…. ஒரு நாள், ரெண்டு நாள் இல்ல மூணு நாளா மனுஷன் தேம்பி தேம்பி அழுவுறான் உள்ளுக்குள்ள…. அந்த மூணு நாள் முடியுது. அர்ஜூனுக்கு கல்யாணத்துக்கு ஆபீஸ்ல கொடுத்த லீவும் முடியுது.

ஆபீஸ்க்கு போன் செஞ்சி, “சார் இன்னும் ரெண்டு நாள் லீவ் கெடைக்குமா”ன்னு கேக்க…. “ஏம்பா….இன்னும் ஒரு மாசம் லீவ் எடுத்துக்க. அப்புடியே வீட்ல இருந்துக்க”ன்னு மேலதிகாரி போன்லயே காதை கடிக்க, நம்மாளு நொந்து போறான்.

சரி, டெல்லியில போயி மிச்சத்தை பாத்துக்குவோமுன்னு நெனச்சாலும், ஏற்கனவே கோயில் திருவிழா, அந்த 3 நாளுன்னு 5 நாளை தாக்கு புடிச்சாச்சு. சென்னை டூ டெல்லி 2 ஆயிரம் கிலோ மீட்டர் தாக்கு புடிக்குறது கஷ்டமேன்னு அர்ஜூன் புலம்பித் தவிச்சு பொண்டாட்டிக்கிட்ட போய், சரி எல்லாம் பேக் பண்ணிட்டு கெளம்பு, நைட் 10.45-க்கு ட்ரைன்ன்னு சொல்றான்.

வர்ஷாவோ, “எங்க!… எனக்கு உடம்பு ஒரு மாதிரி இருக்கு. நீங்க போங்க. நான் வேணுமுன்னா எங்க அம்மா, அப்பாவோட அடுத்த வாரம் வர்றேன்…ப்ளீஸ்”ன்னு அர்ஜூன்கிட்ட கொஞ்சி கெஞ்சுறா….

அர்ஜூனுக்கோ என்ன பேசுறதுன்னு தெரியலை. வேற வழியில்லாம, சரின்னு தலையாட்டிட்டு கையில லக்கேஜை புடிச்சிக்கு தனியா கெளம்புறான் டெல்லிக்கு…. சென்னையில இருந்து ரெண்டாயிரம் கிலோ மீட்டர் தாண்டி டெல்லி போயும் பொண்டாட்டி நெனப்பு அவனை வெச்சி செய்யுது. கல்யாணத்துக்கு அப்புறமா பொண்டாட்டியோட ஜாலியா இருக்கணும்னு வாங்குன பிளாட்ல இப்போ தனியா தூங்கிட்டு இருக்கான் அர்ஜூன்…..

ரெண்டாயிரம் கிலோ மீட்டர் தாண்டியும் அவ வாசனை அவனை அவ்வளவு சீக்கிரமா தூங்க விட்டுடுமா என்ன!…

(தொடர்ந்து பேசுவோம்)

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.