அவனும் – அவளும்- தொடர் – 8

0

சென்னையில இருந்து வந்ததிலிருந்து அர்ஜூன் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரியே இருக்கான். அவனால சரியா சாப்பிட முடியலை, எந்த வேலையையும் பார்க்க முடியலை. எல்லாத்துக்கும் காரணம் வர்ஷா தான். புதுசா கல்யாணம் பண்ண ஒருத்தன் தன்னோட பொண்டாட்டியை பிரிஞ்சு இருக்குறது எவ்ளோ கஷ்டமான விஷயம் தெரியுமா!…

‘போன்ல பொண்டாட்டிக்கிட்ட பேசிக்கிட்டாலும் அது போதுமா என்ன!… போன்ல குடும்பம் நடத்துறதுக்காகவா அவளுக்கு மூணு முடிச்சுப் போட்டு முறைப்படி கல்யாணம் பண்ணேன்னு’ ஆபீஸ்ல உள்ள கூட்டாளிங்ககிட்ட அர்ஜூன் அலுத்துக்கிறான்.

https://businesstrichy.com/the-royal-mahal/

கல்யாணம் முடிஞ்சதும் நேரா பொண்டாட்டியை புது பிளாட்டுக்கு தான் கூட்டிட்டு வரணுமுன்னு கல்யாணத்துக்கு முன்னாடியே அர்ஜூன் பிளாட் வாங்கி வச்சிருந்தான். அதுமட்டுமில்லாம, வீட்டுக்கு தேவையான ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் என எல்லாத்தையும் வாங்கி கவர் கூட பிரிக்காம வச்சிருக்கான். வர்ஷாவின் வருகைக்காக காத்திருந்த எலெக்ட்ரானிக் இதயங்கள் எல்லாம் வர்ஷா வரலைங்குற ஏமாற்றத்துல கவர்க்குள்ள கண்ணீர் விட்டு அழுதுக்கிட்டு இருக்குதுங்க. அப்படி இப்படின்னு டெல்லிக்கு வந்து அவளை நெனச்சு வருத்தப்பட்டுக்கிட்டு இருந்ததுலயே ஒருவாரம் ஓடிப்போச்சு.

‘நீ முன்னாடி போ, நான் பின்னாடி வாரேன்னு’ சொன்ன பொண்டாட்டி இன்னும் ஆளைக் காணோம். ‘என்னடி எப்ப வர்ற?’ன்னு கேக்கலாம்னு போனை அடிச்சாலும் எடுக்க மாட்டேங்குறா… என்னடா இது வம்பா போச்சுன்னு வர்ஷாவோட அப்பாவுக்கு போன் அடிக்குறான் அர்ஜூன்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

ட்ரிங்…ட்ரிங்… ரெண்டாயிரம் கிலோ மீட்டரானாலும் ரெண்டு ரிங்குலயே போன எடுத்துட்டாரு மனுஷன்.

“மாமா நான் அர்ஜூன் பேசுறேன்”… இது அர்ஜூன் டெல்லியிலிருந்து

“சொல்லுங்க மாப்ள!… எப்படியிருக்கீங்க என்ன விஷேசம்”… இது அர்ஜூனோட மாமனார்

“எப்ப மாமா வர்ஷாவை கூட்டிக்கிட்டு டெல்லிக்கு வர்றீங்க?”

“மாப்ள வர்ஷாவுக்கு டெல்லிக்கு வர்றதுக்கு விருப்பமில்லை. அவ இதைப்பத்தி உங்கக்கிட்ட சொல்லலையா!”…

“என்கிட்ட எதுவும் சொல்லலையே மாமா. என்னாச்சு! ஏன் இங்க வரமாட்டேங்குறா?”

“இல்லை மாப்ள!.. அம்மா, அப்பான்னு வீட்டுக்கு ஒரே புள்ளையா செல்லமா வளர்ந்தவ. வெளியுலகம் தெரியாம வளர்ந்துட்டா. இப்போ தூரத்துல இருக்க ஊரு, தெரியாத மொழின்னு அவளுக்கு ஒத்துவராதுங்குறா!”…

“அவகிட்ட போனை கொடுங்க நான் பேசுறேன்”ன்னு கடுப்பாகிறான் அர்ஜூன்.

“ஏங்க!.. எனக்கு அங்க வர ஒருமாதிரி இருக்கு. நான் இங்கயே இருந்துக்குறேன். நீங்க வேணுமுன்னா மாசத்துக்கு ரெண்டு தடவை வந்து என்னை பாத்துட்டு போங்க”ன்னு பவ்யமாக 5 டெசிபலுக்கும் கம்மியா சொல்றா வர்ஷா…

இதைக் கேட்டதும் கடுப்பான அர்ஜூன், “என்னது மாசத்துக்கு ரெண்டு தடவை வந்துட்டு போங்களா?… அப்புறம் எனக்கு வாயில அசிங்கமா வந்திடும். ஏ… உங்க வீட்லயே நீ இருக்குறதுக்கு என்ன ஏன் டீ கல்யாணம் பண்ணிக்கிட்ட. ஒழுங்கு மரியாதையா உங்க அப்பனை கூட்டிக்கிட்டு இன்னும் ரெண்டு நாள்ல நீ இங்க கிளம்பி வர்ற. உங்க அப்பன்கிட்ட குடுடீ போனை”ன்னு காச்மூச்சுன்னு கத்துறான்.

போனை வாங்குன வர்ஷாவோட அப்பா, “மாப்ள போன்ல பேசுனா ஒருசில விஷயங்கள் புரியாது. நீங்க நேர்ல வாங்க பேசிக்கலாம்னு” குண்டைத் தூக்கி போடுறாரு. போனை கட் பண்ணதும் அர்ஜூனுக்கு கிறுகிறுன்னு வந்துடுச்சி. சரி பொண்டாட்டி இன்னைக்கு வந்திடுவா, நாளைக்கு வந்துடுவான்னு பார்த்தா வரவே மாட்டேன்னு சொல்றாளே!… இது சரிப்பட்டு வராதுன்னு பிளைட் புடிச்சி சென்னைக்கு பறந்து வர்றான்.

தன்னோட அம்மா, அப்பா, கல்யாணத்துல மொத பந்தியில வந்து தொந்திய ரொப்பிக்கிட்ட சொந்தக்கார பெருசுங்கன்னு ஒரு குரூப்பையே கூட்டிக்கிட்டு போய் வர்ஷா வீட்ல உட்காந்திருக்கான் அர்ஜூன். ‘என் பொண்டாட்டியை என் கூட டெல்லிக்கு அனுப்பி வைக்கச் சொல்லுங்க’ங்குறது தான் அர்ஜூனோட கோரிக்கை.

ஆனா அர்ஜூனோட மாமனாரோ, “எங்க பொண்ணுக்கு டெல்லி வர்றதுல உடன்பாடு இல்லை. அதுமட்டுமில்லாம, எங்க பொண்ணை அவ்ளோ தூரம் அனுப்பிட்டு நாங்க வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்க முடியாது. மாப்ளைய வேணுமுன்னா சென்னைக்கு வேலையை மாத்திக்கிட்டு வரச் சொல்லுங்க. நான் வேணா வேலை வாங்கித் தரேன்னு”ன்னு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசுறாரு.

“நான் படிச்ச படிப்புக்கு சென்னையில வேலை பார்த்தா, சோத்துக்கே பத்தாது. கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு டெல்லியில தான் வேலை. அங்க தான் குடும்பத்தோட செட்டில் ஆகப்போறேன்னு சொன்னனே!.. இப்ப வந்து பொண்ணை அனுப்ப மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம். ஒழுங்கா என் பொண்டாட்டியை அனுப்பி வைங்க”ன்னு மாமனாரை மிரட்டுறான்.

“என் பொண்ணு வந்தா கூட்டிட்டு போங்க”ன்னு அவர் கூலா சொல்லிட்டு அமைதியா இருக்க, வர்ஷாவை பார்க்குறான் அர்ஜூன். ஆனா, வர்ஷாவோ, “எங்க அம்மா, அப்பாவை விட்டுட்டு என்னால அங்க வரமுடியாதுன்னு” சொல்லிட்டு விருட்டுன்னு வீட்டுக்குள்ள போய்ட்டா…

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

வர்ஷாவோட இந்த செய்கையை பார்த்ததும் அர்ஜூனுக்கு செம கோவம் வந்துடுச்சி. “உங்க பொண்ணு உங்க வீட்ல தான் இருக்கணும்னா, அவ வாழாவெட்டியா தான் இருக்கணும்னு. உங்க பொண்ணோட வாழ்க்கையை நீங்களே கெடுத்துடாதீங்க”ன்னு சொல்லிட்டு கூட வந்தவங்களை கூட்டிக்கிட்டு கெளம்பிட்டான்.

‘பொண்டாட்டிக்காக டெல்லி வேலை வேண்டாம்னு சொல்லிட்டு சென்னை வந்துடலாம். ஆனா, சென்னைக்கு வந்துடுங்க. நான் வேணுமுன்னா வேலை வாங்கித்தரேன்னு பிச்சை போடுற மாதிரி பேசுறான் அந்த ஆளூ. இன்னைக்கு அந்தாளு பேச்சைக் கேட்டுட்டு வந்துட்டேன்னா, காலம் பூராவும் நான் அந்தாளு பேச்சை கேட்டுக்கிட்டு அடிமை வாழ்க்கை தான் வாழணும். அது எனக்கு தேவையில்லை’ங்குறது தான் அர்ஜூனோட நெனப்பு…

ஆனா அவனோட மாமனாரோ, “நமக்கு ஒரே பிள்ளை. கடைசிக் காலத்துல கஞ்சி ஊத்தவாவது ஆள் வேணுமே?.. பேசாம நம்ம மருமகனை வீட்டோட மாப்பிள்ளைய வச்சிக்கிட்டா எந்த பிரச்சினையுமில்லையே!.. அவனுக்காக நான், என் பொண்டாட்டி புள்ளைன்னு மூணு பேரும் தியாகம் பண்ணணுமா!… ஏன்! எங்களுக்காக அவன் விட்டுக் கொடுக்கக் கூடாதான்னு” நினைக்குறார்.

டெல்லியில இருந்துக்கிட்டே சொந்தக்காரங்க, நண்பர்கள்ன்னு பலபேரை மாமனார் வீட்டுக்கு அனுப்பி சமாதானம் பேசுறான் அர்ஜூன். ஆனா, எதுவும் வேலைக்காகலை. ‘கல்யாணம் ஆகி 10 நாள் கூட ஒன்னா வாழலைன்னு’ ஊரே ஆளுக்கொரு கதை பேசுது… இதையெல்லாம் கேட்டுட்டு அர்ஜூனும், அவனோட குடும்பமும் மனசு உடைஞ்சு போய் கெடக்குறாங்க.

நிலைமை இப்படியிருக்கையில, ஒருநாள் அர்ஜூனோட அம்மா, அப்பாவுக்கு ஒரு போன் கால் வருது. “ஒரு சின்ன விசாரணை. நீங்க உங்க புள்ளையை கூட்டிக்கிட்டு மாம்பலம் ஸ்டேஷனுக்கு வாங்க”ன்னு. இந்த விஷயம் அர்ஜூனுக்கு தெரிஞ்சி அவன் என்னமோ, ஏதோன்னு பதறிப்போய் டெல்லியில இருந்து பறந்து வர்றான். என்ன விஷயமுன்னு தெரிஞ்சா படிக்குற உங்களுக்கே கொஞ்சம் அதிர்ச்சியாத் தான் இருக்கும்.

“என் பொண்ணை வரதட்சனை கேட்டு என்னோட மாப்பிளையும், அவனோட அம்மா அப்பாவும் கொடுமைப் படுத்துறாங்க. நாங்க வரதட்சனை கொடுக்காததால எங்க பொண்ணை எங்க வீட்லயே விட்டுட்டு போய்ட்டாங்க. என் பொண்ணை கூட்டிட்டு போய் குடும்பம் நடத்தச் சொல்லுங்க”ங்குறது தான் அந்த கம்ப்ளைண்ட்.

நான் எங்கய்யா என் பொண்டாட்டியை கொடுமைப்படுத்தி உங்க வீட்ல விட்டுட்டு போனேன். நீங்க தான்யா என் கூட அனுப்பாம என்னை அழ வுட்டுக்கிட்டு இருக்கீங்க-ன்னு அர்ஜூன் திகைச்சு போறான்.

‘வீட்டோட மாப்பிள்ளையா வாடான்னா, கெஞ்சிக்கிட்டு இருப்பாங்களா.. உன்னை எப்படி வழிக்கு கொண்டு வர்றதுன்னு எனக்கு தெரியும்னு’மெரட்டி பார்க்கத் தான் இந்த போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கார் வர்ஷாவோட அப்பா. அப்படியும் தன் வழிக்கு வரலைன்னா குடும்பத்தோட அரஸ்ட் பண்ணி உள்ள வைக்கணுங்கிறது வர்ஷாவோட அப்பா நெனப்பு.

இந்த விஷயம் அர்ஜூனுக்கு தெரியவர, தனக்கு தன்னோட அம்மா அப்பாவுக்கு என மூணு பேருக்கும் முன் ஜாமீன் வாங்குறான். உண்மையிலயே என்ன நடந்துச்சுன்னு ஒரு வக்கீலை வச்சு கோர்ட்ல கேஸ் போடுறான் அர்ஜூன்.

இதையெல்லாம் பார்த்து கடுப்பான வர்ஷாவோட அப்பா, “என் புருஷன் ஆண்மையற்றவன். அடிச்சு கொடுமைப்படுத்துறான். வரதட்சனை கேட்குறான்”ன்னு இல்லாததையும் பொல்லாததையும் வர்ஷா வாயாலயே கோர்ட்ல சொல்ல வைக்குறான்.

“மூணு நைட் மட்டுமே என் கூட படுத்துட்டு நான் ஆண்மையில்லாதவன்னு சொல்றாளே” இது எப்படின்னு? அர்ஜூன் தரப்பு கோர்ட்ல தன் தரப்பு வாதங்களை எடுத்து வைக்குது.

இப்படியே கோர்ட், விசாரணைன்னு போய்க்கிட்டு இருக்கையில வர்ஷாவோட அப்பாவுக்கு உடம்பு முடியாமப் போய் படுத்துடுறாரு. கேஸ்ல கேப் விழுந்து போய்டுது.

நம்மளை கோர்ட் வரைக்கும் அலையவச்சி அசிங்கப்படுத்திட்டாங்க, இனிமேல் அவகூட வாழ்றதுல எந்த பிரயோஜனமும் இல்லைன்னு விவாகரத்து கேட்டு வழக்கு போடுறான் அர்ஜூன். விவாகரத்துங்குற வார்த்தையை கேட்டதும் வர்ஷா தரப்பு சமாதானம் பேச வர்றாங்க. ‘இனிமேல் சமாதானம்ங்குற பேச்சுக்கே இடமில்லைன்னு’ அர்ஜூன் மறுத்துடுறான்.

பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், சேர வாய்ப்பில்லைங்குறதால கடைசியில ரெண்டு பேரும் மியூட்சுவலா பிரிஞ்சிடலாம்ங்குற முடிவுக்கு வர்றாங்க. கோர்ட்ல டைவர்ஸ் ஆகுது.

கல்யாணத்துக்கு நாங்க போட்ட 14 சவரன் தாலியை கொடுங்கன்னு அர்ஜூன் கேக்க, ‘அதெல்லாம் கோர்ட், கேஸூன்னு நீங்க அலையவிட்டதுக்கு சரியாப் போச்சுன்னு’ உடல்நிலை முடியாத நேரத்துலயும் வர்ஷா அப்பா பிரச்சினை செய்யுறாரு.
“சரி!…உங்க பொண்ணோட ரெண்டாம் கல்யாணத்துக்கு, முதல் புருஷன் கொடுத்த சீர்-ஆ இருக்கட்டும்ணு” சொல்லிட்டு எல்லா பிரச்சினையும் முடிச்சிக்கிட்டான் அர்ஜூன்.

இப்போ, அர்ஜூன் வேறொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தைன்னு சந்தோஷமாக டெல்லியில இருக்கான். வர்ஷாவும் ரெண்டாவதா ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா, ஆனா குழந்தை இல்லை.

இதை காரணமா சொல்லி அவ புருஷன் அவளை தினமும் அடிச்சி கொடுமைப் படுத்திக்கிட்டு இருக்கான்.என் புள்ளை என் கூட இருக்கணும்னு ஆசைப்பட்டு கடைசியில அவ வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன்னு வர்ஷாவோட அப்பா குற்ற உணர்ச்சியில கட்டில்ல செயலிழந்து கிடக்கார். அவரோட கை, கால் எதுவுமே வேலை செய்யாது. ஆனா, கண்ணுல மட்டும் அப்பப்ப தண்ணி அருவியா கொட்டும்.

‘எந்த தப்புமே செய்யாத ஒருத்தனை, என்னோட அப்பா பேச்சை கேட்டு நானும் கஷ்டப்படுத்திட்டேனே!… அதோட பாவம் எந்த கங்கையில குளிச்சாலும் போகாதுன்னு’ தன்னோட தப்பை உணர்ந்துட்டா வர்ஷா!..

ரெண்டாயிரம் கிலோ மீட்டர் தாண்டிப் போனாலும், நீ வேணாண்டான்னு விட்டுட்டி போனாலும் இன்னும் வர்ஷா நெனப்பு அர்ஜூனை விட்டு போகலை. போகாது!…
அவ நினைப்பு விட்டுப் போகக் கூடாதுன்னு தான் தன்னோட குழந்தைக்கு வர்ஷான்னு பேர் வச்சிருக்கான் அர்ஜூன்.

…(தொடர்ந்து  – பேசுவோம்)…

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.