ஆரோக்கியமாக வாழ விரும்பியவர் ராமஜெயம் !
ராமஜெயம் ஒரு கோபக்காரர், அவரிடம் யாராவது குறைகளைச் சொல்லி கதறினால், அதனை அப்படியே நம்பி விடுவது உண்டு. அடுத்து அதற்கு காரணமாகவர்களை அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்புவது அவரின் பாணி.
இது ஒருபுறம் என்றால் அவர் மீது எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் சிறை வைக்கப்பட்டிருந்த ராமஜெயம், அங்கு புத்தகங்களை வாசிக்கவும், பசுமையை வளர்த்து நேசிக்கவும் ஆர்ம்பித்தார்.
அந்த அக்கறையில் அதனால்தான் மணப்பாறை பகுதியில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க மிக ஆர்வமாக கேவிகே பண்ணை உருவாக காரணமாக இருந்தார்.
இன்றைக்கு திருச்சி தில்லை நகர் மிக பரபரப்பாகவும் இருக்கிறது. பேருந்து போக்குவரத்து செல்ல அகன்ற பாதையாக உள்ளது.
ஆனால் அந்தப் பகுதி சில வருடங்களுக்கு முன்னால் மரங்கள் அடந்த பசுமை சூழ்ந்த சாலைகளாக இருந்தன.
அந்த மரங்களை அகற்றிவிட்டு, சாலைகளை அகலப்படுத்த திருச்சி மாநகராட்சி முடிவெடுத்தது. அப்படி செய்தால் தில்லை நகர் பகுதிகளில் உள்ள மரங்கள் என்னவாகும் என ஆதங்கப்பட்டார்.
சில நாட்கள் தூக்கம் தொலைத்த ராமஜெயம் அதிகாரிகளை அழைத்து, அந்த மரங்களை வெட்டி எடுக்க வேண்டாம்.
அதற்கான தொகையை தந்துவிடுகிறேன் எனச் சொல்ல அதிகாரிகள் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து நின்றனர்.
விஞ்ஞானம் பெருசா வளராத நாளில், மரங்களை வெட்டாமல் என்ன செய்வார் எனப் பலரும் நினைத்திருக்க, ஆட்களுடன் வந்த ராமஜெயம், மரங்களை வேரேடு பிடிங்க வைத்தார். அடுத்து அந்த மரங்களை லாரியில் பாதுகாப்பாக எடுத்துச் சென்று திருச்சி-திண்டுக்கல் சாலையில் தான் கட்டிவந்த கேர் பொறியியல் கல்லூரியில் வைத்தார்.
அங்கு வைக்கப்பட்டுள்ள 36க்கும் மேற்பட்ட மரங்கள் இப்போது வளர்ந்து நிற்கின்றன. அவர் உயிரோடு இருக்கும்வரை கேர் கல்லூரி வளாகத்தில் உள்ள மரங்களில் மாணவர்கள் உள்ளிட்ட யாரும் கைவைக்கக் கூடாது என்பதில் கறாராக இருந்தார்.
ராமஜெயத்தின் மறைவுக்கு பிறகு, முன்னாள் அமைச்சர் நேரு. தனது தம்பியின் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்தார்.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வண்ணம் ஆண்டு தோறும் இயற்கை விவசாயம் சிறப்பாக செய்யும் விவசாயிக்கு விருதும் ஒரு லட்சரூபாய் பணமுடிப்பும், டெல்டா மாவட்டங்களில் பொருளாதரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியர் அவர்கள் விரும்பும் கல்லூரியில், படிப்பில் சேர்ந்து படிக்கவும் அவர்களுக்கு கல்வி உதவி செய்யப்படும் என அறிவித்தார். சிலவருடங்களில் அதன் செயல்பாடு அவ்வளவாக இல்லை.
ராமஜெயத்தை பலர் கல்விக்கு உதவி செய்தவராக, தொழிலதிபராக பலர் பார்த்ததுண்டு.
ஆனால் உடலையும் மனதையும் மிக ஆரோக்கியமாக வைத்திருக்கவும் அவர் மட்டுமல்லாமல் அவரது நண்பர்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தியவர்.
தினமும் அதிகாலை எழுந்துவிடும் அவர் வாக்கிங், பேட்மிட்டன் என அத்தனையிலும் அவர் வெளுத்து வாங்குவார்.
ராமஜெயத்தின் கல்விக் கனவு, அதிகாரிகள் முதல் ஆட்சியாளர்கள் மட்டுமல்லாமல் அவருடன் நெருக்கமாக இருந்த அ.தி.மு.க முக்கிய புள்ளிகள் எனப் பலரின் ஜாதகங்களை அடுத்தடுத்த வாரங்களில் பார்ப்போம்…