நிறைய பசங்களோட அனிதா கூத்தடிச்சிக்கிட்டு இருந்த……….அவனும், அவளும்….. தொடர் – 11

0

அவனும், அவளும்….. தொடர் – 11

‘ரெண்டு பேரும் வாழ்ற வாழ்க்கையைப் பார்த்து ஊரே மெச்சுமுன்னு நெனச்சேனே…’ ன்னு கண்ணுல வழிஞ்ச கடைசிச் சொட்டு தண்ணியை துடைச்சிக்கிட்டு மிச்ச கதையை சொல்றான் செல்வா… அந்தக் கதையைக் கேட்டு ஸ்டேஷன் செல்லுல இருந்த அக்யூஸ்ட்டே அரண்டு போறான். போலீஸ் எல்லாம் மெரண்டு போய் முழிக்குது.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

“ஆசைப்பட்ட காதலியை கல்யாணம் கட்டிக்கிட்டு, அவ கூட சந்தோஷமா வாழணும்னு எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு சென்னைக்கு வந்தேன். எங்களை மாதிரி எந்த ஜோடியும் இந்த உலகத்துல சந்தோஷமா வாழ்ந்திருக்க, வாழ்ந்துக்கிட்டு இருக்க வாய்ப்பில்லைங்கிற அளவுக்கு ஜாலியா இருந்தோம். அவளுக்கு படிக்கணும்னு ஆசை. சென்னையில உள்ள ஒரு காலேஜ்ல அவளை சேத்துவிட்டேன். தினமும் அவளை காலேஜ்ல டிராப் பண்ணிட்டு தான் நான் வேலைக்கே போவேன்.

அவளும் சந்தோஷமாகத் தான் காலேஜ் போய்ட்டு வந்தா. அந்த சந்தோஷம் அரை செமஸ்டருக்கு கூட தாக்குப் புடிக்கலை”ன்னு… செல்வா சொல்லி முடிக்குறப்ப, சோக மூஞ்சி செம கோவமா மாற ஆரம்பிக்குது.

- Advertisement -

“இந்த மெட்ராஸ்ல எல்லாமே வித்தியாசமாவும், பாக்குறதுக்கு ஆச்சரியமாவும் இருக்குன்னு அடிக்கடி அனிதா என்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பா. ஆரம்பத்துல சுடிதார் போட்டுக்கிட்டு காலேஜ்க்கு போனவ, ஒருகட்டத்துல அல்ட்ரா மாடர்னா ஜீன்ஸ் வேணுமுன்னு கேட்டா… பொண்டாட்டி ஆசையை நிறைவேத்தாதவன் புருஷனே இல்லைன்னு அதை வாங்கிக் கொடுத்தேன். டிரஸ்ல ஆரம்பிச்ச மாற்றம் அவ கேரக்டர்லயும் தெரிய ஆரம்பிச்சது. ஒருகட்டத்துல ‘என்னை காலேஜ்ல டிராப் பண்ண வேணாம். உனக்கு ஏன் சிரமம். நான் பஸ்லயே போய்க்கிறேன்’ன்னு சொன்னா. அப்ப எனக்கு தெரியலை அந்த அசம்பாவிதம் நடக்கப் போவுதுன்னு”…

காலேஜ்ல கொஞ்சம் லேட் ஆச்சின்னு ஒருசில நாள் லேட்டா வந்தவ, அப்பப்ப இன்னைக்கு ஒருநாளைக்கு ஃபிரெண்ட் வீட்ல தங்கிட்டு காலையில வர்றேன்னு சொல்ல ஆரம்பிச்சா. அவ மேல உள்ள நம்பிக்கையில நானும் அதைப்பத்தி பெருசா எடுத்துக்காம அசால்ட்டா விட்டுட்டேன். ஒரு நாள் காலேஜ்க்கு போனவ வீட்டுக்கே வரலை. நானும் பல இடத்துல தேடிப் பார்த்தேன். அவளை எங்கயுமே காணோம். விரக்தியோட வீட்டுக்கு வந்து எதார்த்தமா அவளோட லேப்டாப்பை எடுத்து பார்த்தேன்.

அதுல நிறைய பசங்களோட அனிதா கூத்தடிச்சிக்கிட்டு இருந்த போட்டோ இருந்துச்சி. அதுமட்டுமில்லாம, அந்த லேப்டாப்ல நிறைய போன் ரெக்கார்டிங் இருந்துச்சி. நான் பெரிய வசதியான குடும்பத்துப் பொண்ணு பேசி, பல பசங்களை அனிதா காதல் வளையில விழ்த்தியிருக்கா. அதுல என்ன கொடுமைன்னா, ஒருத்தவனை கரெக்ட் பண்ணா அவன் கூட உள்ள பிரெண்ட்ஸையும் கரெக்ட் பண்ணி ஜாலியா சுத்தியிருக்கா…

ஏழைக் குடும்பத்துல பொறந்திருந்தாலும், வசதியான வாழ்க்கை வாழணும்னு அவ அடிக்கடி சொன்னது எனக்கு அப்ப தான் புரிஞ்சது. அவ இவ்வளவு கேவலமா நடந்துக்கிட்டதை பத்தி கூட நான் வருத்தப்படலை. இப்ப அவ எங்க இருக்காளோ, என்ன நெலமையில இருக்காளோன்னு தெரியலை. அவளுக்கு ஏதாவது ஆச்சின்னா, நான் ஊரு பக்கமே தலைகாட்ட முடியாது.

எப்படியாவது என் பொண்டாட்டியை கண்டுபுடிச்சி கொடுங்க. நான் அவ செஞ்ச தப்பை மன்னிச்சி குடும்பம் நடத்த தயாரா இருக்கேன்”ன்னு மொத்தக் கதையும் சொல்லி முடிக்க, ஸ்டேஷனே நிஷப்தமா இருக்கு…

அனிதாவோட போன் நம்பரை டிரேஸ் பண்ணதுல, அவ இருக்க இடத்தை போலீஸ் கண்டுபிடிக்குது. அங்க போய் பார்த்தா, சுரேஷ்ன்னு ஒருத்தன் கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருந்துருக்கா… போலீஸ் விசாரணைக்காக அனிதாவையும், சுரேஷையும் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வருது. இந்தத் தகவல் செல்வாவுக்கும் சொல்லப்படுது.

4 bismi svs

கிட்டத்தட்ட ஒருவாரத்துக்கு அப்புறமா அனிதாவை பாக்குறான் செல்வா… அனிதா முகத்துல எந்த சலனமும் இல்லை. ஆனா, செல்வாவோ பொம்பளை கணக்கா, கண்ணை தேச்சி அழுதுக்கிட்டு இருக்கான். லேப்டாப்ல இருந்த போட்டோ, போன் ரெக்கார்டிங் எல்லாத்தையும் காட்டி அனிதாகிட்ட விசாரிக்குது போலீஸ் தரப்பு. அப்போ, அவ சொன்ன பதிலைக் கேட்டு ஆடிப்போகுது காக்கி கூட்டமே…

“எனக்கு வசதியான வாழ்க்கை வாழணும்னு ஆசை. அது நான் பொறந்த இடத்துலயும் நடக்கலை. நான் வாக்கப்பட்ட இடத்துலயும் நடக்கலை. அதனால வசதியான வாழ்க்கையை நானே தேடிக்கிட்டேன். நான் யாரையுமே ஏமாத்தலை. என் மேல விருப்பப்பட்டவங்க கூட நான் சுத்தியிருக்கேன். அவ்ளோ தான்”ன்னு அசால்ட்டா சொல்லியிருக்கா…

“ஏம்பா… தம்பி!.. நீ கம்ப்ளைண்ட் கொடுத்தா தான் ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியும். என்ன உத்தேசம்”ன்னு போலீஸ் செல்வா கிட்ட கேக்குது.

“அவகிட்ட ஒருதடவை பேசிக்குறேன்”னு போலீஸ்கிட்ட பர்மிஷன் கேக்குறான் செல்வா… ஸ்டேஷனுக்கு வெளிய உள்ள மரத்தடி நிழலுக்கு அனிதாவை கூட்டிட்டு போய் பேச்சை ஆரம்பிக்குறான் செல்வா, “என் அனிதா இப்படி பண்ண. நான் கஷ்டப்பட்டாலும் உன்னை எந்த குறையுமில்லாமத் தானே வச்சிருந்தேன். இப்படி பண்ணிட்டியே… இப்பவும் ஒன்னும் ஆகலை. நீ வா… நாம வீட்டுக்கு போகலம்”னு அழுவுறான்…. ஆனா அனிதாவோ..

“இங்க பாரு! நீ நல்லவன் தான். உன் மேல எந்தக் குத்தமும் இல்லை. ஆனா, ஒரு நல்லவன் கூட வாழ எனக்கு விருப்பமில்லை. தயவு செஞ்சு என்னை என் போக்குல வாழ விடு”ன்னு சொல்லிட்டு ஸ்டேஷனுக்குள்ள போய் நிக்கிறா…

உள்ள வந்த செல்வாகிட்ட போலீஸ் என்ன செய்யலாமுன்னு கேக்க, “அவளுக்கு பிடிச்ச மாதிரி அவ இருந்துக்கட்டும். நான் அவளை தொந்தரவு செய்ய விரும்பலை. இனி அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”ன்னு லட்டர் எழுதிக் கொடுத்துட்டு ஸ்டேஷனை திரும்பிப் பார்க்காம அழுதுகிட்டே சின்னக் குழந்தை மாதிரி ரோட்டுல நடந்து போறான்.

ரெண்டு நாள் கழிச்சி அதே ஸ்டேஷனுக்கு ஒரு போன் வருது… “அய்யா… சந்தோஷ் நகர் செகண்ட் கிராஸ்ல இருந்து பேசுறேன். இங்க ஒரு வீடு ரெண்டு நாளா உள்ளுக்க தாப்பா போட்ட மாதிரியே இருக்கு. வீட்டுக்குள்ள இருந்து ஏதோ ஸ்மெல் வருதுங்கய்யா”ன்னு சொல்லிட்டு போனை கட் பண்ண. ஸ்டேஷன்ல இருந்த ஒரு ஏட்டய்யா சொல்றாரு…

“அய்யா ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒருத்தன் பொண்டாட்டியை காணாம்னு வந்தான்ல. அவன் கூட சந்தோஷ் நகர் தான்”ங்குறார்.

பதறிப்போன போலீஸ் ஸ்பாட்டுக்கு போவுது. சம்பந்தப்பட்ட வீட்டுக்கு முன்னாடி ஒரே கூட்டமா கெடக்குது. ஜீப்பை விட்டு இறங்குன போலீஸ் கூட்டத்தை விலக்க, கூட்டத்தோடு கூட்டமா நின்னு சம்பவம் நடந்த வீட்டை பாத்துக்கிட்டு இருக்கான் செல்வா…

‘பொண்டாட்டி சண்டைல கோவிச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போய்ட்டான்னு மருந்தை குடிச்சிட்டானே… பாவி’ன்னு கூட்டத்துல ஒரு குரலு உச்சிக்கொட்டுது…  அதை கேட்டுக்கிட்டே நடந்து போய்க்கிட்டு இருக்கான். செல்வா…

(பேசுவோம்)…

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.