அவனும் – அவளும் – தொடர் – 9

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

‘எனக்கு விவாகரத்து வாங்கிக் கொடுங்க’ண்ணு கோர்ட் படியேறுற பாதிப் பேர், கம்ப்யூட்டர் முன்னாடி கண்ணை கசக்கிக்கிட்டு வேலை பாக்குற ஐ.டி இளசுகள் தான்!.. வீக் எண்ட் பார்ட்டி, பப், போதையேற்றிக் கொள்ள இன்னபிற வஸ்துக்கள் என வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் இதே இளசுகளால், ஏன்!…திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு போக முடிவதில்லை?…

இவர்களுக்கு செம்மையா வாழணும்ங்கிற ஆசை தான் இருக்குதே தவிர, வாழ்க்கைக்குன்னு ஒரு வரைமுறை இருக்கு; அதுப்படி வாழணும்ங்கிற பக்குவம் இல்லாதது தான் காரணம்… அப்படி கெட்டுப் போனவன் தான் மோகன்…
தூங்கா நகரமான மதுரை தான் மோகனுக்கு சொந்த ஊர். அம்மா, அப்பா எது சொன்னாலும், என்னோட இஷ்டப்படி தான் நடந்துக்குவேங்குற அராத்து புடிச்ச ஜென்மம். ‘நமக்கு இருக்கிறது ஒரு புள்ளை.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

அவனை கண்டிக்கப் போய் எதாவது பண்ணிக்கிட்டான்னா என்ன செய்றதுன்னு’ அவனோட பெத்தவங்களும் தண்ணி தெளிச்சி விட்டுட்டாங்க. ஸ்கூல் படிக்குறப்பவே ஊர் சுத்துறது, தம் அடிக்கிறது, தண்ணி அடிக்கிறதுன்னு எல்லா கெட்டப் பழக்கங்களும் மோகனுக்கு அத்துப்படி. இருந்தாலும் படிப்புல கெட்டிக்காரன். எப்படியோ இன்ஜினியரிங் முடிச்சிட்டு பெங்களூர்ல வேலை பாத்துக்கிட்டு இருக்கான்.

இளசுகளின் சொர்க்காபுரியான பெங்களூர்க்கு போய் இன்னும் கெட்டுப் போனான் மோகன். விடிய்ய விடிய்ய பப்புல சரக்கடிச்சிட்டு ஆடுறது, சம்பாதிக்குற காசுக்கு காருக்கும், தனக்கும் டீசலை போட்டுக்கிட்டு ஊர் சுத்துறது, கூட வேலை பாக்குற பொண்ணுங்களோட அப்பப்ப அவுட்டிங்ன்னு இருந்து வந்தான்.

3

‘இப்போ இவனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கலன்னா, நாளைக்கு யாருமே இவனுக்கு பொண்ணு தர மாட்டாங்க’ன்னு முடிவெடுத்த மோகனோட அப்பா, பெங்களூர்ல இருக்க தன்னோட பையனை வரவச்சி தேனியில ஒரு பொண்ணை பார்க்க கூட்டிட்டு போறார்.
வாசலுக்கு வந்து வரவேற்கிறார் பொண்ணோட அப்பா சுந்தரம். அவர் ஒரு ரிட்டயர்டு அக்ரி ஆஃபிசர். நல்ல வசதியான குடும்பம். அவருக்கு ரெண்டு பொண்ணுங்க. முதல் பொண்ணு எம்.பி.ஏ பட்டதாரி. ரெண்டாவது பொண்ணு பி.காம் படிச்சிக்கிட்டு இருக்கா. முதல் பொண்ணு மீனாவை தான் பொண்ணு கேட்டு வந்திருக்காங்க மோகன் விட்ல இருந்து. ரெண்டு குடும்பமும் பேசி கல்யாணத்துக்கு தேதி குறிக்குறாங்க. கல்யாணமும் தடபுடலா நடந்து முடியுது. கல்யாணத்துக்கு வந்த சொந்தமெல்லாம் கறிவிருந்து வரைக்கும் கூட காத்திருக்காம கெளம்பிட்டாக.

முதலிரவு, மறு விருந்துன்னு எல்லாத்தையும் முடிச்சிக்கிட்டு பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு கார்லயே பெங்களூர்க்கு கெளம்புறான் மோகன். புது ஊர், புது பிளாட்ன்னு அந்த சூழ்நிலைக்கு செட் ஆகுறதுக்கே ரெண்டு நாள் ஆச்சி மீனாவுக்கு. காலையில ஆஃபீஸ்க்கு போனா சாயங்காலம் வந்திடுவான் மோகன். புருஷன் எப்ப வருவான்னு பூவும், சீலையுமா எப்பவுமே புதுப்பொண்ணு கணக்கா இருப்பா மீனா. ஆரம்பத்துல வேலை விட்டா வீடு, வீடு விட்டா வேலைன்னு இருந்த மோகனோட செயல்ல கொஞ்சம் மாற்றம் வர ஆரம்பிச்சது.

4

சரக்கடிச்சிட்டு லேட் நைட்ல வீட்டுக்கு வர்றது, ஒருசில நாள் நைட் வராமலே இருக்குறது, மீட்டிங்ன்னு சொல்லிட்டு ரெண்டு, மூணு நாள் வரை வீட்டுக்கு வராமலேயே இருக்குறதுன்னு மோகன் மேல சந்தேகம் வர ஆரம்பிச்சிடுச்சி மீனாவுக்கு…
ஆனாலும், புருஷனுக்கு பயந்துக்கிட்டு எதுவுமே கேக்காம அமைதியா குடும்பம் நடத்திக்கிட்டு வந்தா மீனா.

ஒருநாள் காய்ச்சல்ன்னு மோகன் போர்வையை போத்திக்கிட்டு ரெஸ்ட் எடுக்க, மீனா அவனோட போனை எடுத்து நோண்டுறா…
போனை பார்த்தவளுக்கு ஹார்ட் அட்டாக் வராதது தான் குறை. அப்படியே நெஞ்சுல கையை வச்சிக்கிட்டு சரிஞ்சிட்டா… விடியட்டும் இருக்குது கச்சேரின்னு நெனச்சவளுக்கு தான்…. ஆரம்பமாச்சு கச்சேரி…..

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.