அவனும் அவளும் – தொடர் – 6

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திங்கட்கிழமை காலையில வேலைக்குப் போகணும்கிற மன உளைச்சலிலேயே ஞாயிற்றுக்கிழமை நைட் கொஞ்சம் சரக்கை அதிகமாகவே போட்டுட்டான் போல அர்ஜூன். டெல்லி டிராபிக் சத்தத்தையே ஓவர்டேக் பண்ற அளவுக்கு ஹை டெசிபலில் அவனோட போன் அதிரடிக்கையில் காலையில மணி 8…..

“என்னடா!.. இன்னும் தூங்கிக்கிட்டு இருக்கியா!” இது அர்ஜூனோட அப்பா சென்னையிலிருந்து….
“ இல்லப்பா.. நேத்து ஒரு சின்ன ஒர்க்!.. முடிச்சிட்டு தூங்க நைட் 2 மணியாச்சு”ன்னு சொல்லி முடிக்கையில் தான் நேத்து நைட் 2 மணி வரைக்கும் நடந்த அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் அர்ஜூனுக்கு ஞாபகத்துக்கு வருது.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

அர்ஜூனோட ஃபிரெண்ட் விக்கி என்றழைக்கப்படும் விக்னேஷ்க்கு கல்யாணம். விக்கியோட சொந்த ஊர் நம்ம சென்னைக்கு மிக அருகில் உள்ள பல்லாவரம் தான். இந்த கல்யாணம் ஒன்னும் சாதாரணமா முடிவாகலை. விக்கியோட குடும்பத்துக்கு எதிர்வீட்ல ஒரு நார்த் இந்தியன் குடும்பம் இருந்துச்சி. அந்த வீட்ல ‘நட்டாஷா’ன்னு செம்ம அழகான பொண்ணு… (ரசகுல்லா கலர்ன்னு வெச்சுக்குவோமே…)

அவளை தனக்கு தெரிஞ்ச இந்தியில பேசி உஷார் பண்ண விக்கி, பலகட்ட போராட்டத்துக்கு அப்புறம் அவளோட அம்மா, அப்பாவை சமாதானம் செஞ்சு ஒருவழியா கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சுட்டான். (இது நடக்க மூனே முக்கால் வருஷம் ஆனது தனிக்கதை). இனி பல்லாவரம் பக்கமே தலைவச்சு படுக்க மாட்டேன்னு கல்யாணத்தைக் கூட டெல்லியில வைக்க ஓகே சொல்லிட்டான். அதுக்கான பேச்சுலர் பார்ட்டி தான் நேத்து நைட் 2 மணி வரைக்கும் நடந்துச்சி. புதுமாப்பிளை விக்கி சந்தோஷமா சரக்கடிச்சாலும், நம்மாளு அர்ஜூனுக்கு செம காண்டு…

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அப்புறம் இருக்காதா பின்ன…எம்.இ படிச்சி, இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றில் லட்சத்தில் சம்பளம் வாங்கும் சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருந்தும் வீட்ல ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்க மாட்டேங்குறாங்களேன்னும்…. எவளாவது நம்மை லவ் பண்ணியிருந்தா நாம இப்படி புலம்ப வேண்டிய அவசியமில்லைங்குற வருத்தத்துலயும் அடிச்ச ஆல்கஹாலின் அளவு அளவுமீறிப் போனது அவனோட அப்பா போன் அடிச்சு எழுப்புறப்ப தான் தெளியுது…

“டேய் உனக்கு பொண்ணு பாத்துருக்கோம். அவளோட ஃபோட்டோவை உனக்கு மெயில் அனுப்பி வச்சிருக்கேன். நீ பாத்துட்டு உனக்கு ஓகேவான்னு சொல்லுடா”ன்னு அவனோட அப்பா சொல்லி முடிச்சதும் அர்ஜூனுக்கு முழு போதையும் தெளிஞ்சுடுச்சி….

மெயிலை ஓப்பன் பண்ணி போட்டோவை பார்த்தவன் அசந்துட்டான். தாமதமானாலும் தரமான பொண்ணை தான் வீட்ல பாத்துருக்காய்ங்கன்னு அவனோட அப்பாவுக்கு போன் பண்ணி, “யப்பா!… இப்பவாவது எனக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு உங்களுக்கு தோணியிருக்கே… ஏதோ பார்த்து சீக்கிரம் முடிச்சி வையுங்க”ங்குறான்.

“டேய்!…பொண்ணு வீட்ல அடுத்தவாரம் நிச்சயதார்த்தம் வச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க. நீ முன்னாடியே கிளம்பி வந்துடு”ன்னு சொல்லிட்டு போனை வச்சிட்டார் அர்ஜூனோட அப்பா…

நிச்சயதார்த்த நாள் வந்துடுச்சி… வழக்கமான பஜ்ஜி, சொஜ்ஜு, டீ, காபி உபசரிப்பு முடியுற வரைக்கும் காத்துக்கிட்டு இருந்த அர்ஜூன் “நான் பொண்ணுக்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்னு” மொட்டை மாடிக்கு அவளை கூட்டிட்டு போறான்.

“வர்ஷா…உன்னோட போட்டோவை பார்த்ததுல இருந்து எனக்கு சத்தியமா தூக்கமே இல்லை… எனக்கு உன்னை மட்டும் இல்லை.. உங்க வீட்டு பஜ்ஜு, கேசரி, காபின்னு எல்லாத்தையும் புடிச்சிருக்கு…. உன் கண்ணத்துல விழுற குழியிலயே காலம் பூரா விழுந்து கெடக்கணும்னு தோணுது. உன் பதிலை உடனே சொல்லணும்னு அவசியமில்லை.. இந்தா என்னோட போன் நம்பர். பொறுமையா யோசிச்சு சொல்லு”ன்னு அவ கண்ணுல தன்னை பதியவச்சிட்டு மொட்டை மாடியை விட்டு கீழ இறங்க நினைக்க,

அவன் கையை இழுத்து புடிச்சி “எனக்கும் ஓ.கே தான்” போதுமாங்குறா.. வர்ஷா!

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

“இப்போதைக்கு இது போதும். மிச்சத்தையெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமா வச்சிக்கலாம்”னு கெளம்புறான்.

பெரியவங்க பேசி நிச்சயம் முடிச்சி கல்யாணம் முடிவு பண்றாங்க. நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் நடுவுல 3 மாசம் கேப் இருக்கு. இந்த கேப்புல அர்ஜூனும் வர்ஷாவும் போன்லயே கொஞ்சி குலாவுறாங்க. அர்ஜூன் அடிக்குற மொக்க ஜோக்குக்கெல்லாம் வர்ஷாவும் விழுந்து விழுந்து சிரிக்குறா!… டெல்லிக்கும் சென்னைக்கும் இடையே 2 ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டி வீடியோ காலிங்ல முத்தம் பறக்குது…. இவ சென்னையில கொடுக்குற முத்தத்தோட சூடு, டெல்லி குளிரையே விரட்டிடும். ஆனா, அத்தனையும் எனக்குத் தான்னு காது வழியா வாங்கி உடம்புக்குள்ள தேக்கிக்குவான் அர்ஜூன்.

என்ன பண்ற!.. சாப்டியா!..ன்னு சாதாரணமா ஆரம்பிக்குற பேச்சு, நேரம் ஆக ஆக எல்லை மீறி ஏடாகூடாமா ‘ஏ’ கண்டண்ட் லெவலில் இருக்கும். இப்படியே 3 மாசமா போன்லயே காதலும், காமமும் வளர்ந்துடுச்சி….

ஒருவழியா கல்யாண நாள் வந்துடுச்சி. 3 மாசமா அவளை போன்ல பார்த்தே கரைஞ்சவன், பட்டு சேலை, மாலையுமா அவ மேடையில வந்து கிட்டத்துல உட்காந்ததும் தலையில இருந்து கால் வரைக்கும் உருகிட்டான்.

கெட்டி மேளம்னு சொன்னது தான் 3 முடிச்சையும் அவனே இறுக்கி கட்டிட்டு, அவளை ஒரு இடி இடிச்சி ‘என்ன கிளம்புவோமா’ன்னு அவன் சைகையால கேட்க, ‘நைட் வரைக்கும் பொறுமையா இரு’ன்னு அவ கண்ணாலயே செல்லமா மெரட்டுறா…

எல்லா சடங்கும் முடியுது.. போட்டோ எடுக்குறேங்குற பேர்ல தெரியாதவன் எல்லாம் கிட்டவந்து பல்லை இளிச்சுக்கிட்டு போஸ் கொடுக்குறான். இப்படி பல எரிச்சல்களை தாண்டி பர்ஸ்ட் நைட்டுக்கான நேரம் நெருங்குது. மணி 7 தானேன்னு கொஞ்சம் அசந்தவன் எந்திரிச்சு பார்க்கையில வாட்ச் மணி 6.30ன்னு காட்டுது ….

அய்யய்யோன்னு அலறி எந்திருச்சவன் பக்கத்துல இருக்க பொண்டாட்டியை எழுப்பி, ‘என்னடி என்னை எழுப்பியிருக்கலாம்ல… ஒன்னுமே நடக்கலை அதுக்குள்ள விடிஞ்சிடுச்சே. இந்த ஃபர்ஸ்ட் நைட்டுக்காக நான் எவ்ளோ நாள் காத்துருந்தேன் தெரியுமா ’ன்னு கத்த, அதை பார்த்து ரசிச்சவ கடைசியில கடிகார முள்ளை மாத்தி வைச்சதையும், மணி இப்போ 3 தான் ஆகுதுன்னு சொல்லி அவ காலால அவனோட சட்டை காலரை இழுத்து வா டான்னு அவனை செல்லமா மிரட்ட…

அதுக்கப்புறம்…

யப்பா… போதும்டா சாமின்னு….. லைட்டை ஆஃப் பண்ணிட்டு ரெண்டு பேரும் மூழ்கிட்டாங்க ‘இருளில்’….! வெளிச்சம் வந்ததுக்கு அப்புறமா தானே இருக்கு விவகாரமே!….

(தொடர்ந்து பேசுவோம்)…

– கிருஷ்வின்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.