அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள்

விழிக்கும் நியூரான்கள் -5

0

திருச்சியில் அடகு நகையை விற்க

பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணிகள் என்ன என்பதைப் பற்றி பார்த்தோம். அதனைத் தொடர்ந்து, பக்கவாதத்தினை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான வாழ்வு முறைகளைப் பற்றி பார்ப்போம்.

 

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே”

– இது திருமூலர் கூற்று.

 

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அதாவது, ‘நோய் முதலான காரணங்களால் உடம்பு அழியுமாயின் உயிரும் அழியும்: அவ்வாறு அழிந்தால், உறுதிதரும் மெய்யறிவை அடைய இயலாது. ஆகவே, உடம்பை வளர்க்கும் வழிமுறைகளை அறிந்து உடம்பை வளர்த்தேன்: அதனால், உயிரை அழிவிலிருந்து காத்தேன்’ என்பது தான் மேற்கூறிய கூற்றின் பொருள்…

 

மனித உடலை வளர்க்கும் உணவுதான், அதே உடலை அழிக்கவும் காரணமாக இருக்கிறது. இயற்கையாக கிடைக்கும் உணவுகளான காய்கறிகள், கீரைகள், பழங்கள் தரும் ஆக்கத்தை வேறு எந்த உணவும் தருவதில்லை. எந்த உணவு ஆரோக்கியத்தை கொடுக்கும், எந்த உணவு உடலுக்கு உகந்தது அல்ல என்பதை அனைவரும் அறிவர். ஆனால், ஆரோக்கியத்தை விட நாவின் சுவைக்கு அடிமை ஆவதால் நம்மில் பலர் வியாதியை தன்னிடம் ஈர்க்கின்றனர்.

 

https://www.livyashree.com/

எனவே, உணவை கையிலெடுத்து வாயில் வைப்பதற்கு முன்னால் ஒரு கணம் உங்கள் மனதிடம் இந்த கேள்வியை கேளுங்கள் “நான் உண்ணும் இந்த உணவானது ஆரோக்கியத்தை கொடுக்குமா? அல்லது கெடுக்குமா?”… பிறகு புத்தி சொல்வதை மனம் கேட்பதும் அல்லது மனம் சொல்வதை புத்தி கேட்பதும் அவரவர் பாடு.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நாம் என்ன உணவு உண்கிறோம் என்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே போல் எவ்வளவு உண்கிறோம் என்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இன்றைய காலக் கட்டத்தில் பல வீடுகளில் தொலைக்காட்சி, அலைப்பேசி மற்றும் கணினி ஆகியவை நமது உடல் உறுப்பின் ஒரு அங்கம் போல் மாறிவிட்டது. பலர் உணவு அருந்தும் போது தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ அல்லது வேறு ஒருவரிடம் அலைப்பேசியில் பேசிக்கொண்டோ தான் உணவு அருந்துகிறார்கள். நாம் இயங்கவும், உயிர் வாழவும் வாழ்வாதாரமாக இருக்கும் உணவை நாம் மதித்து உண்கிறோமா என்பதை யோசித்து பாருங்கள்.

 

நாம் அலைப்பேசி மற்றும் தொலைக்காட்சி இல்லாமல் இவ்வுலகில் உயிர் வாழ முடியும். ஆனால், உணவில்லாமல் உயிர் வாழ முடியுமா? அப்படிப்பட்ட வாழ்வாதாரமான உணவை நாம் கவனக் குறைவாக உண்பதால் ,எவ்வளவு உண்கிறோம் என்பது நமக்கு தெரிவது இல்லை. நம் குடும்பத்தினரோடு அமர்ந்து உணவை ரசித்து, ருசித்து மற்றும் நன்றாக மென்று உள்செலுத்த வேண்டும்.

அப்பொழுது தான் உணவில் உள்ள சத்துக்களை நம் உடல் உள்வாங்கும். எனவே நாம் உண்ணும் உணவிற்கு முக்கியத்துவம் அளித்து, போதுமான நேரம் ஒதுக்கி காலை – மதியம் – இரவு என ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காலம் தாழ்த்தாமல் எடுத்துக் கொண்டோம் என்றால் நம்மை நாம் பல்வேறு வியாதிகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

அடுத்து நாம் கவனிக்க வேண்டியது உணவின் அளவு. காலையில் அரசனைப் போலவும், மதியம் அரசியைப் போலவும், இரவில் ஆண்டியைப் போலவும் உட்கொள்ள வேண்டும். இரவு உணவிற்கும் உறக்கத்திற்கும் இடையே குறைந்த பட்சம் 2 மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும். இரவு உணவை காலம் தாழ்த்தி உண்டுவிட்டு உடனே உறங்கச் செல்வதால் தான் பல்வேறு வியாதிகள் நம்மை ஆட்கொள்கின்றன.

நாம் உண்ணும் உணவை மருந்து போல் உட்கொண்டோமென்றால், பிற்காலத்தில் மருந்தை உணவைப் போல் உண்ண வேண்டிய நிர்பந்தம் ஏற்படாது என்பதை அனைவரும் ஆழ்மனதில் பதிய வைக்க வேண்டும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.