அங்குசம் பார்வையில் ‘ஹார்ட்டிலே பேட்டரி’
‘எலிஸியம் மேக்ஸிமா & அல்லோ மீடியா’ தயாரித்து ஜி-5 ஓடிடி பிளாட்பார்மில் நாளை முதல் [ டிச.16] ரிலீசாகிறது ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ். சதாசிவம் செந்தில்ராஜன் டைரக்ட் பண்ணியுள்ள இந்த சீரிஸில் குரு லக்ஷ்மண், பாடினி குமார், யோகலட்சுமி, இனியாள், ஷர்மிளா, ஜீவா ரவி, சுமித்ரா தேவி, அனித் யாஷ்பால், பிரவீனா பிரின்சி, பவித்ரா உட்பட பலர் நடித்துள்ளனர். இதில் பாடினிகுமார் தவிர மற்ற அனைவருமே நமக்கு புதுமுகங்கள். இசை யாரு, ஒளிப்பதிவு யாருன்னு பி.ஆர்.ஓ. நமக்கு தகவல் அனுப்பல. சரி ஜி-5 ஓடிடி வெப் சைட்ல போய் பார்க்கலாம்னா அதுக்கும் காசு கட்டச் சொல்றாய்ங்க.
அட போங்கப்பா… நீங்களும் உங்க ஓடிடியும்னு அந்த ஷட்டரை குளோஸ் பண்ணிட்டு, தயாரிப்பு நிறுவனமும் பி.ஆர்.ஓ.வும் கூட்டாச் சேர்ந்து சென்னை பிரசாத் லேப் தியேட்டர்ல ஏற்பாடு பண்ணிய பிரஸ் ஷோவுல நாம பார்த்த மூணு எபிசோடைப் பத்தி மட்டும் எழுதிட்டு முடிச்சுக்குவோம்.
பள்ளியில் படிக்கும் வயதிலிருந்தே அறிவியல் கண்டு பிடிப்புகள் மீது ஆர்வம் உள்ளவர் பாடினி குமார். தனது அப்பாவும் அம்மாவும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பு குறித்து பரிசோதிக்கும் கருவி ஒன்றைக் கண்டு பிடிக்கிறார். இதை அவர்களின் திருமண நாளில் பரிசோதிக்கிறார். கருவியும் அன்பைக் காட்டுகிறது. ஆனால் மறுநாளே இருவருக்குள்ளும் பிரச்சனையாகி பிரிந்துவிடுகிறார்கள். இதனால் மனம் வெம்பினாலும் அறிவியல் கண்டு பிடிப்பை நிறுத்தவில்லை பாடினிகுமார்.
கல்லூரிப் பருவத்தில் ‘லவ் மீட்டரை’ கண்டு பிடிக்கிறார். இந்த மீட்டரில் பெருவிரல் ரேகையைப் பதித்தால் எத்தனை பாயிண்ட் லவ் இருக்கு, எவ்வளவு டீப்பாக இருக்குன்னு சொல்லிடுமாம். ஆனால் இந்த லவ் மீட்டரை பரிசோதிக்கும் பாடினியின் ஃப்ரெண்ட், ”இது வெறும் டப்பா” என்கிறார். இப்படிப்பட்ட நேரத்தில் தான் கார்ட்டூனிஸ்ட் குரு லக்ஷ்மணைச் சந்திக்கிறார். லவ் மீட்டரைப் பத்திச் சொல்கிறார். ஆனால் குருவோ, “இதை நீயே ஒரு நாள் நம்பாமல் என்னிடம் வருவ” என சவால் விடுகிறார்.
அதுக்குப் பிறகு…? அதுக்குப் பிறகு என்னன்னு ஏழு எபிசோடுகளையும் பார்த்தாத்தானே தெரியும்.
‘என்னய்யா… இது அன்பு மீட்டர், லவ் மீட்டர்னு கதைவிடுறாய்ங்கன்னு முதல் எபிசோட் முடிஞ்சதும் நமக்கு லைட்டா கடுப்பு வரத்தான் செஞ்சது. சரி லவ்ல சயின்ஸை மிக்ஸ் பண்ணி புதுசா ஏதோ ட்ரை பண்ணிருக்காரு டைரக்டருன்னு பிரிஸ்க்கா ஆயிட்டோம். ஏன்னா “மனுச மூளை தான் மிஷினைக் கண்டு பிடிக்குது. ஆனா அந்த மூளை நல்லா வேலை செய்யுதான்னு மிஷின் தான் சொல்லுது” பாடினி குமார் பேசும் டயலாக் தான். இதுக்காக டைரக்டருக்கு ஓகே சொல்லலாம். மிச்ச நாலு எபிசோடையும் பார்த்தாத்தான் மத்த விஷயத்தைச் சொல்லலாம்.
புசுபுசுன்னு சுருட்டை முடியுடனும் லைட்டான மேக்கப்புடனும் பார்ப்பதற்கு அழகோ அழகாக இருக்கிறார் பாடினிகுமார். இவரது தோழியாக வரும் கருப்பழகியும்[ பெயர் தெரியல] கவர்கிறார். லவ் மீட்டரை ரிஜெக்ட் பண்ணும் குரு லக்ஷ்மண் கார்ட்டூனிஸ்ட் என்பதால் அரசன் சுல்தான் கார்ட்டூன் கதையும் அப்பப்ப வருது. குரு லக்ஷ்மணும் துறுதுறுவென இருக்கார்.
இசை-ஒளிப்பதிவைப் பத்திச் சொல்லலாம்னா அவர்கள் இருவரும் யார்னே நமக்குத் தெரியல.
— ஜெ.டி.ஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.