அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஸ்டாலின் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த எம்எல்ஏ !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

திருச்சிராப்பள்ளி  மாவட்டம் அந்தநல்லூர்  ஊராட்சி ஒன்றியம் பேட்டவாய்த்தலை அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்  நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் M.பழனியாண்டி அவர்கள் குத்துவிளக்குகேற்றி  முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

HARINI JEWELLERS TRICHY

இந்த மருத்துவ முகாமில் 40க்கும் மேற்பட்ட டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் இசிஜி, எக்ஸ்ரே, பொது மருத்துவம் இருதயநோய், மாற்றுதிறனாளிகளிக்கான சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர். MLA அவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம்,  காப்பீடு அட்டை உள்பட பல்வேறு  பல்வேறு  நலத்திட்டங்களை வழங்கினார்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

இந்நிகழ்ச்சியில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் குமரவேல், , மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் ஹேமசந்த வட்டார மருத்துவ அலுவலர் விக்னேஷ்வரன், அந்தநல்லூர் ஒன்றிய  வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம், சிறுகமணி பேரூராட்சி சேர்மன்  சிவகாமசுந்தரி ராஜலிங்கம், செயல் அதிகாரி பரமேஸ்வரி, சேவை இயக்குனர் கோவிந்தராஜ், பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அதிகாரிகள்  உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமில் 1500 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.