அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இரு உலகங்களைக் காட்டும் ‘ஹார்ட்டின்’

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ ஆர்.ரவீந்திரன் & ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து அறிமுக இயக்குனர் கிஷோர்குமார் டைரக்‌ஷனில் உருவாகியுள்ள படம் ‘ஹார்ட்டின்’. இதில் கதையின் நாயகனாக சனந்த் அறிமுகமாகிறார். ஹீரோயின்களாக மடோனா செபஸ்டின், டி.இமயா, மற்ற கேரக்டர்களில் வாட்ஸ்-அப் மணி, டெப்னிதாகர், வர்கீஸ் மேத்யூஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : முகேஷ், இசை :ராஜேஷ் முருகேசன், எடிட்டிங் : பரத் விக்ரமன், ஆர்ட் டைரக்டர் : துரைராஜ், பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.

வரும் 26-ஆம் தேதி ‘ஹார்ட்டின்’ ரிலீசாவதால், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இருநாட்களுக்கு சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில் பேசியவர்கள்….

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

‘Heartin’வாட்ஸ்-அப் மணி, “பத்து ஆண்டுகளுக்கு முன்பு குறும்படங்களை டைரக்ட் பண்ணும் போது கிஷோர் எனக்கு அறிமுகமானார். இப்போது அவரின் படத்தில் அறிமுகமாகியுள்ளேன். இது ஒரு ஃபீல்குட் மூவி”.

எடிட்டர் பரத்விக்ரமன், “இது ஒரு ரேஸியான படம் மட்டுமல்ல, நல்ல எக்ஸ்பீரியன்ஸும் கிடைக்கும். இதில் பெண்களின் கதாபாத்திரங்கள் மிகவும் ஆழமானதாக இருக்கும். இரண்டு உலகங்களை கேமராமேன் முகேஷ் அற்புதமாக காட்டியுள்ளார்”.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

டி.இமயா, “எனக்கு இது முதல் படம் என்பதாலேயே மிகவும் ஸ்பெஷலான படம். எனக்கும் என்னைப் போன்ற பல புதுமுகங்களுக்கும் வாய்ப்புக் கொடுத்த ரவீந்திரன் சாருக்கும் டைரக்டர் கிஷோர் சாருக்கும் நன்றி. இந்தப் படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்”.

‘Heartin’மடோனா செபஸ்டின், “நிறைய காதல் சினிமாக்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இதில் ஒரு வித்தியாசம் இருக்கு. அதை படம் பார்க்கும் போது கண்டிப்பாக உணர்வீர்கள்”.

டைரக்டர் கிஷோர் குமார், “என்னுடன் குறும்படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் பெண் கேரக்டர்கள் சிக்கலானதாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருப்பதற்கு மடோனா செபஸ்டினும் இமயாவும் தான் காரணம். அவர்களின் நடிப்பு அற்புதமாக வந்துள்ளது. இதில் ஹீரோ சனந்த் கேரக்டருக்கும் இரண்டு வடிவங்கள் இருக்கு. இப்படத்தை தன்னுடைய தோளில் சுமந்துள்ளார் சனந்த். இதுவரை எத்தனையோ லவ்ஸ்டோரி வந்திருந்தாலும் ஹார்ட்டின் இவை எல்லாவற்றிலிருந்தும் வேறுபட்டிருக்கும் என்பது உறுதி”.

ஹீரோ சனந்த், “இந்தப்படத்தில் பல அடுக்குகள் இருக்கு, ஆழமான உணர்வுகள் இருக்கு. இந்த ‘ஹார்ட்டின்’ ஹீரோ கேமராமேன் முகேஷ் தான்”.

—    ஆண்டவர்

 

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.