வெப்பம் வெளியேற்றும் விசிறி வழங்கிய சமூக ஆர்வலர்….
வெப்பம் வெளியேற்றும் விசிறி வழங்கிய சமூக ஆர்வலர்….
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் வெப்பம் வெளியேற்றும் விசிறி வழங்கப்பட்டது.
தற்போதைய கடுமையான வெயில் காலத்தில் முதியோர்கள் அறையில் வெப்ப தாக்கம் அதிகமாக உள்ளதாகவும், அவர்கள் தூங்க முடியாமல் சிரமப்படுவதாக இல்லத்தின் மேலாளர் சமூக ஆர்வலர் வழிகாட்டி மணிகண்டனிடம் தெரிவித்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று அவர்களின் வெப்ப சிரமத்தை குறைக்கும் வகையில் வெப்பம் வெளியேற்றும் விசிறியை வாங்கி வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் வழங்கினார்.
செய்தி – ஷாகுல் – படங்கள் ஆனந்த்