Friday, November 20, 2026 | 12:10 PM IST

Event Management புதிய வாய்ப்புகள் !

ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி – 39

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

இன்றைய விருந்தோம்பல் துறை (Hospitality Industry) ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுடன் மட்டுமே நின்றுவிடாமல், Booking Services, Revenue Management, Event Management, Travel Services போன்ற பல்வேறு தொழில் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கும் மாணவர்கள், தங்களுடைய கல்வி மற்றும் தொழில்துறை அறிவை பயன்படுத்தி குறைந்த முதலீட்டில் பல்வேறு தொழில்களைத் தொடங்க முடியும்.

Booking Company – முன்பதிவு சேவையின் மூலம் தொழில் : ஹோட்டல் அறைகள், திருமண மண்டபங்கள், உணவகங்கள், ரிசார்ட்டுகள், Conference Halls, Banquet Halls போன்றவற்றிற்கானமுன்பதிவு சேவையை வழங்கும் நிறுவனத்தை உருவாக்குவது ஒரு சிறந்த தொழில்முனைவோர் வாய்ப்பாகும். பல சிறிய ஹோட்டல்கள் மற்றும் தனியார் தங்குமிடங்களுக்கு தனியாக Booking Team இல்லாத நிலையில், ஒரு Booking Agency அவர்களுக்கு வாடிக்கையாளர்களை கொண்டு வர முடியும்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

மாணவர்கள்Online Booking, Telephone Booking, Corporate Booking, Group Booking மற்றும் Event Booking போன்ற சேவைகளை கற்றுக்கொண்டு செயல்படுத்தலாம். ஒவ்வொரு Booking-க்கும் Commission  அல்லது Service Charge பெற்று வருமானம் உருவாக்கலாம். Social Media, WhatsApp, Website மற்றும் Digital Marketing  ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களை விரைவாகப் பெற முடியும்.

Revenue Management – சரியான விலையில் சரியான வாடிக்கையாளர் :

Revenue Management என்பது ஹோட்டல் தொழிலில் மிகவும் முக்கியமான ஒரு துறையாகும். ஒரே அறையை வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்வதன் மூலம் ஹோட்டலின் வருமானத்தை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

Demand, Occupancy, Season, Competition, Events, Weekends மற்றும் Customer Segments ஆகியவற்றை ஆய்வு செய்து அறைகளுக்கான விலையை நிர்ணயிப்பது Revenue Management ஆகும். இதை நன்கு கற்றுக் கொண்டமாணவர்கள் சிறிய ஹோட்டல்கள், Boutique Hotels, Resorts மற்றும் Service Apartments ஆகியவற்றுக்கு Revenue Consultant ஆக சேவை வழங்கலாம்.

உதாரணமாக, ஒரு நகரத்தில் பெரிய மாநாடு அல்லது திருமண நிகழ்ச்சி நடைபெறும் காலத்தில் ஹோட்டல்களுக்கு அதிக தேவை ஏற்படும். அந்த காலகட்டத்தில் சரியான Pricing Strategy உருவாக்கி, ஹோட்டலின் வருமானத்தை கணிசமாக உயர்த்த முடியும். இதன் மூலம் மாணவர்கள் மாதாந்திர Consultancy Fee அல்லது Performance-based Fee பெறலாம்.

Event Management – அனுபவத்தை விற்பனை செய்யும் தொழில் :

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திருமணம், Birthday Party, Corporate Meeting, Product Launch, Conference, Exhibition, College Event, Theme Party போன்ற நிகழ்ச்சிகளுக்கான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு சேவைகளுக்கும் தற்போது அதிக தேவை உள்ளது.

Hotel Management மாணவர்கள்Food & Beverage, Banquet Operations, Housekeeping, Front Office, Guest Relations மற்றும் Vendor Management போன்றவற்றில் பெறும் அறிவை Event Management தொழிலில் பயன்படுத்தலாம்.

சுற்றுலாத்துறை பயிற்சியாளா் கபிலன்
சுற்றுலாத்துறை பயிற்சியாளா் கபிலன்

ஒரு Event Management நிறுவனம் Decoration, Catering, Photography, Entertainment, Sound & Light, Guest Accommodation, Transportation மற்றும் Event Coordination ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரே தொகுப்பாக வாடிக்கையாளருக்கு வழங்கலாம். இதன் மூலம் Package Profit மற்றும் Service Charges மூலம் வருமானம் பெற முடியும்.

மாணவர்களுக்குதொழில்முனைவோர் பாதை :

இந்த மூன்று துறைகளையும்ஒருங்கிணைத்து “Hospitality Business Solutions” என்ற பெயரில் ஒரு சிறிய நிறுவனத்தைத் தொடங்கலாம். Booking மூலம் வாடிக்கையாளர்களைப் பெறலாம்; Revenue Management மூலம் ஹோட்டல்களின் வருமானத்தை உயர்த்தலாம்; Event Management மூலம் நிகழ்ச்சிகளை நிர்வகிக்கலாம்.

இதனால் Hotel Management மாணவர் வேலை தேடுபவராக மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில் முனைவோராகவும் மாற முடியும். கல்வியுடன் Communication Skill, Digital Marketing, Sales, Negotiation, Financial Management மற்றும் Leadership திறன்களை வளர்த்துக் கொண்டால், Hospitality Industry-யில் தனித்துவமான தொழில் அடையாளத்தை உருவாக்க முடியும்.

(தொடரும்)

—  கபிலன், சுற்றுலாத்துறை பயிற்சியாளா்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.