அட இது தெரியாம போச்சே ! பாகம் – 15
* ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.
* கைரேகை’யைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் .
* மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.
* கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன * 900 பென்சில்களைத் தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது .
* மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே . மரணத்திற்கு பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது .
* நுரையீரலில் 3,00,000 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன . இவை அனைத்தும் கோர்க்கப்பட்டால் , அதன் நீளம் 2,400 கிலோமீட்டராக இருக்கும் .
* ஒரு ஆணின உடலில் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் புதிய விந்து செல்கள் உருவாகின்றன .
* மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது , அவருடைய உயரம் 8 மி.மீ. அதிகரிக்கும். புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமே, இதற்குரிய காரணம்.
* ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை (FILTERS) கொண்டுள்ளது. இந்த வடிகட்டிகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது .
— பேரா.சா.அருள்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.