அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தேனி – சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரி – கைது செய்த காவல்துறை !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கனிம வளத்துறை அனுமதியின்றி சட்டவிரோதமாக கல்குவாரி நடத்தி வந்த நில உரிமையாளர் பெண் உட்பட 7 நபர்கள் கைது.

கல்குவாரியில் உரிமம் இல்லாமல் பயன்படுத்தப்பட்ட 15 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல் செய்து ஜெயமங்களம் காவல்துறையினர் நடவடிக்கை.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஏ.வாடிப்பட்டி பகுதியில் லதா என்பவரின் ஒரு ஏக்கர் நிலத்தில் அனுமதியின்றி கல்குவாரி செயல்பட்டு வருவதாக பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லுவிற்கு வந்த தகவலின் அடிப்படையில், பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு மற்றும்  ஜெயமங்கலம் காவல் ஆய்வாளர் உட்பட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

சட்டவிரோதமாக கல்குவாரி
சட்டவிரோதமாக கல்குவாரி

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அப்பொழுது கனிமவளத்துறையின் எந்தவித அனுமதியும் இல்லாமல் கல்குவாரி செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து கல்குவாரியில் வேலை பார்த்த நான்கு நபர்கள் மற்றும் நில உரிமையாளர் லதா உட்பட 7 நபர்களை ஜெயமங்கலம் காவல்துறையினர் கைது செய்ததோடு, அங்கு பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதற்கு உரிமம் இல்லாமல் பயன்படுத்தப்பட்ட செல்லட்டின் குச்சி 20, களி 60 மற்றும் வெடி மருந்து15 கிலோ உள்ளிட்ட வெடிபொருட்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சட்டவிரோதமாக கல்குவாரி மேலும் விசாரணையில் நில உரிமையாளர் லதாவிடம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் என்ற நபர் தான் சிலை செய்யும் சிற்பி என்றும், நிலத்தில் உள்ள பாறாங்கற்களை சிலை செய்வதற்காக எடுத்துக்கொண்டு  நிலத்தை சீர்படுத்தி தருவதாக கூறி கடந்த ஒரு மாத காலமாக நிலத்தில் உள்ள கற்களை வெடிவைத்து  தகர்த்து குவாரி நடத்தி வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் குவாரி  நடத்தி வந்த பாலச்சந்திரன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் பெரியகுளம் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர் அனுமதி இன்றி முறைகேடாக செயல்பட்ட குவாரியை ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இதுபோன்ற வேறு எங்கும் சட்டோரவிரோதமாக கல்குவாரிகள் நடத்தி தவறுகள் ஏதேனும் செய்து உள்ளார்களா? என்ற கோணத்தில் ஜெயமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

—   ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.