திருச்சி மாநகராட்சியில் இ டெண்டர்கள் வெளிப்படை தன்மையில்லாமல் நடக்கிறது – அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டு..!
திருச்சி மாநகராட்சியில் இ டெண்டர்கள் வெளிப்படை தன்மையில்லாமல் நடக்கிறது – அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டு..!
திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு அறப்போர் இயக்கம் சார்பில் புகார் ஒன்று அ. அப்புகாரில் தகவல் பெறும் உரிமை சட்டம் அமலுக்கு வந்து 17 வருடங்கள் முடிந்த இந்த நேரத்தில் அடுத்த ஒரு வருடத்தில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் விழிப்புணர்வை அறப்போர் இயக்கம் ஏற்படுத்த உள்ளது. அதில் முக்கியமாக திருச்சி மாவட்டத்தில் 100 இடங்களில் RTI பயிற்சி மேற்கொள்வதற்கான துவக்க நிகழ்வு இன்று நடைபெற்றது. மேலும் முதல் RTI பயிற்சி இன்று மாலை பொன்மலையில் துவங்கி அடுத்து வரும் வாரங்களில் திருச்சி மாநகராட்சி வார்டு 39, 40, 41, லால்குடி, துறையூர் துவாக்குடி, ஸ்ரீரங்கம் பெட்டவாய்த்தலை போன்ற இடங்களில் நடக்க உள்ளது. இன்றைய துவக்க நிகழ்விலும் பயிற்சியிலும் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம வெங்கடேசன் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் கலந்து கொள்கின்றனர்.
இந்த பயிற்சிகளின் மூலம் திருச்சியில் உள்ள கடைக்கோடி மக்கள் வரை தகவல் பெறும் உரிமை சட்டம் பற்றி கற்றுக் கொள்ளவும் அதன் மூலம் அரசு சேவைகளை லஞ்சம் இல்லாமல் பெறும் வழிவகைகளை கற்றுக் கொள்ளவும் அவர்கள் பகுதியில் இருக்கும் பொது பிரச்சனைகளையும் ஊழல்களையும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக தீர்க்கும் வழிமுறைகளையும் எடுத்துச் செல்ல உள்ளோம்.மேலும் அறப்போர் இயக்கம் இன்று திருச்சி மாநகராட்சியில் போடப்படும் டெண்டர்களின் உள்ள பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு விரிவான புகாரை அனுப்பியுள்ளோம்.
திருச்சியில் இ டெண்டர்கள் எந்தவிதமான வெளிப்படை தன்மை இல்லாமல் இயங்குகிறது. சாலை மழை நீர் வடிகால் பூங்கா சீரமைப்பு குளங்கள் சீரமைத்தல் போன்ற பலவிதமான டென்டர்கள் திருச்சி மாநகராட்சியில் போடப்படுகிறது.ஆனால் இந்த டெண்டர்கள் இணைய வழியாக திறக்கப்படும் பொழுது யார் யார் டெண்டர்களில் போட்டி போட்டார்கள் யார் வெற்றி பெற்றார்கள் என்ன விலைக்கு டெண்டர்கள் எடுத்தார்கள் என்ற விவரங்கள் மக்கள் பார்வையில் இருந்து ஒளித்து வைக்கப்படுகிறது.
மேலும் இ டென்டர்கள் என்றால் அனைத்து ஆவணங்களையும் இணையதளம் வழியாகவே பதிவேற்றம் செய்யும் முறை இருக்க வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் ஒப்பந்ததாரர்கள் டெண்டர் முடிவதற்கு முன்பாக நேரில் வரவேண்டிய அவசியம் இருக்கக் கூடாது. ஆனால் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களின் அசல்களை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற வழிமுறை இருப்பதால் இவை டெண்டர்களை முடிவதற்கு முன்பே ஒரு சில ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் பாரபட்சமாக Fixing செய்யக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்துகிறது. எனவே திருச்சியில் முழுமையான இ டெண்டர் வழிமுறைகள் அமல்படுத்த மாநகராட்சி ஆணையரை வலியுறுத்தியுள்ளோம்.
மேலும் மன்றத் தீர்மானங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவது இல்லை இதனால் மக்கள் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்ற உறுப்பினர்கள் என்ன முடிவுகள் எடுத்தார்கள். என்ன திட்டங்களை செய்யப் போகிறார்கள் என்ற எந்த ஒரு தகவல்களும் மக்களிடத்தில் இல்லை .எனவே திருச்சி மாநகராட்சி டெண்டர்களை முழுமையான இ டெண்டர்களாக மாற்ற வேண்டும் என்றும், வெளிப்படைத்தன்மையுடன் டெண்டர் சம்பந்தமான அனைத்து தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.