மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 6
நமது திருச்சி மாவட்டத்தின் பெருமை மிகு கல்வியியல் நிறுவங்களில் ஒன்று பிஷப் ஹீபர் கல்லூரி. அந்தப் பெருமைமிகு கல்லூரியில் தமிழாய்வுத்துறையில் 10 ஆண்டுகள் உதவிப் பேராசிரியராகத் திறம்பட கல்விப் பணியாற்றுபவர் பேரா. பாலின் ப்ரீத்தா ஜெபசெல்வி அவர்கள்.
Sri Kumaran Mini HAll Trichy
சிறந்த கவிஞர். ஆற்றலான பேச்சாளர். வெடிப்புறப் பேசி விடுதலைக் கனல் தெறிக்கும் பெண்ணியச் சிந்தனையாளர். நுண்கலைப் போட்டிகளின் நடுவர். பன்னாட்டுத் தேசிய ஆய்விதழ் கட்டுரையாளர். எல்லாவற்றையும் விட ஆகச் சிறந்த மனிதர். பழகுதற்கினிய பண்பாளர்.
Flats in Trichy for Sale
‘புறநானூற்றில் மனித உரிமை மீறல்கள்’ என்கிற ஆய்வு நூல் இவரது முதல் நூல். சர்வதேச முத்தமிழ் விருது 2020, அசோகமித்திரன் படைப்பூக்க விருது என பல விருதுகளுக்கும் பாராட்டுதல்களுக்கும் சொந்தக்காரர். சர்வதேசத் தமிழ் ஆய்விதழின் ஆசிரியக் குழு உறுப்பினர். கல்வியியற் பணி, எழுத்துப்பணி இவற்றோடு பொதுப் பணிகளிலும் ஆர்வமும் அக்கறையும் கொண்டவர்.
தமிழ்நாடு அஸ்ட்ரோனமி அண்ட் சயின்ஸ் சொசைட்டியின் மண்டல ஒருங்கிணைப்பாளர். தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயற்பாட்டாளர். இவற்றோடு த.மு.எ.க.ச. திருச்சி மாநகரத் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்
கல்வி, அறிவியல், ஆய்வு, எழுத்து, களப்பணி என தொடரும் இவரது செயல்பாடுகளுக்கு வாழ்த்துகளும் கரங் குவித்தல்களும்.
-பாட்டாளி
திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending